Friday, April 12, 2024

SALEM SUNDARI -4

 SALEM SUNDARI -4

சேலம் சுந்தரி-4

                   ஒரு  விளக்கம்

"சேலம் சுந்தரி" நீண்ட கதையாக வடிவு பெரும் என்று தோன்றுகிறது . இப்போது உள்ள வேகத்தில் தொடர்ந்தால் பல நாட்களுக்கு நகரும் ஆபத்து தெரிகிறது எனவே அது போன்ற வளர்த்தல் நிகழ்ந்தால் தொய்வு தான் விளையும். அதை மட்டுப்படுத்த வாரம் 2 தினங்களில் [சனி, செவ்வாய் ] கதை வரும் . எனவே புதன் கிழமைகளில் கல்வியோ/ பொதுத்தலைப்போ  இடம் பெறும்  . இது ஒரு இடை நிலை ஏற்பாடு . 

மேலும், நீண்ட நாட்களுக்கு blog பதிவுகள் எழுத வேண்டாமே என்று தோன்றுகிறது. நாளுக்கு நாள் வாசகர் ஆர்வம் குன்றிவிட்டதை புரிந்தபின்னரும் எழுதுவது விரோதிகளை வளர்த்துக்கொள்ளத்தான் உதவும். தன்னிலை உணர்தல் யாருக்கும் நல்லது. இதுவே எனது நிலைப்பாடு.                                                                                                    அன்பன் ராமன்  .                                     .    

…………………………………………… இதோ கதை தொடர்கிறது 

சுந்தரி டைப் அடித்ததில் இரு சிறு பிழைகளை சுழித்து பக்கத்தில் என்ன திருத்தம் என்று சுட்டிக்காட்டி இருந்தார் சுப்புரத்தினம் . அவற்றை கம்பியூட்டரில் பிழை திருத்தி நல்ல பிரதிகளாக 2+2 எடுத்து சுப்புரத்தினம் டேபிளில் வைக்க

சுப்புரத்தினம்,  சுந்தரியை ஒரு நிமிடம் என்று நிறுத்திவைத்தார். சுந்தரிக்கு கை  கால்  வெடவெடத்தது   இருந்தாலும் குப்பென்று வியர்த்ததை கைக்குட்டையால் துடைத்துவிட்டு 'என்ன சார்?' என்றாள் ; ஆமா நீங்க ஓடிப்போய் புகார் பண்ணிட்டீங்களே , இப்ப மாடசாமி ட்யூட்டி பாத்துட்டு வீட்டுக்கு கூட போகாம , கீழ வெய்டிங்ரூம் ல குளிச்சுட்டு , HR ல கூப்புடுறாங்க போயிட்டு வரன் னு போயிருக்கார் ; அங்க நீங்க சொன்னதை நேரடியா மாடசாமிகிட்டயே சொல்லிடுவாங்க. மாடசாமிக்கு கோபம் வந்தா யாராலயும் எதிர்கொள்ள முடியாது , அதிகாரிங்களே நடுங்குவாங்க நீங்க என்னடான்னா வீரசாகசம் னு நெனச்சுக்கிட்டு வம்ப வெலக்கி  வாங்கிட்டீங்களே. பேசாம மாடசாமி சார் கால் ல விளுந்து கும்புட்டு கூத்தாடி மன்னிப்பு கேளுங்க ;பெரிய அதிகாரிக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு என்னம்மா

நல்ல வேளை கோபாலய்யர் , நாராயணசாமி அய்யங்கார் எல்லாம் ரிட்டையர் ஆயிட்டாங்க. அவங்க கிட்ட போயி இப்படி புகார் குடுத்தா , என்ன தண்டனை குடுக்கலாம் னு உங்களையே எளுதி தரச்சொல்லி "இந்தாப்பா மாடசாமி உங்க செக்ஷன் சுந்தரி உனக்கு என்ன தண்டனை னு எழுதி கொடுத்திருக்காங்க என்று உங்க லெட்டரையும் குடுத்து YOUR HEAD LETTER WILL BE CHANGED [உங்க தலை எளுத்தே   மாறிப்போயிருக்கும்]

வர கோவத்துல மாடசாமி ஓங்கி அறஞ்சார்னா ஒன்னு மெடிக்கல் லீவ் இல்ல வீ ஆர் எஸ் கொடுத்துட்டு ஓடவெச்சிடுவார். ரெண்டு சாமியும் [GOPALAYYAR, NAARAAYANA SAMI] இல்ல    ஆனாலும் மாடசாமிக்கு தெரியாமலா போயிரும்? -அறை வாங்க தயாரா இருங்க என்று புளியை கரைத்தார் சுப்புரத்தினம்.

இன்னிக்கே அறைவாரா , இல்ல 2 நாள் கழிச்சு அறைவாரா தெரியல்லியே [நாமக்கல் ஆஞ்சநேயா காப்பாற்று] என்று ஆழ்ந்த வேண்டுகோள் வைத்து நின்றிருந்தாள் சுந்தரி . 

போய் உக்காருங்க வந்து அறஞ்சார்னா , கும்புட்டு கையகூப்பிக்கிட்டு நில்லுங்க, கைய கூப்பிட்டா யாரும் மேலமேல அடிக்கவோ அறையவோ மாட்டாங்க என்று அவ்வப்போது அறை பற்றி நினைவூட்டிக்கொண்டிருந்தார் சுப்புரத்தினம்.  

அறைவிழப்போகிறது என்று அறிந்தவர் மனநிலை எப்படி இருக்கும் ? லஞ்ச் அவர் ல தனியா இருக்கும் போது அறைவாரா அல்லது மத்தியானம் எல்லோரும் இருக்கும்போது வந்து சாத்துவாரா -ஒன்றுமே புரியலையே -ஐயோ ஐயோ என்று கதிகலங்கினாள். 

மாடசாமி நல்லா 10 பேருக்கு முன்னால தைரியமா அடிச்சுடுவார்னு போன மாசம் கேப்ரியல் சார் யார்கிட்டயோ சொல்லிக்கிட்டுருந்தாரே ;நம்ம செக்ஷனிலே 9 பேர் தானே இருக்கோம் அதுனால அறைய மாட்டாரோ , சொல்லமுடியாது இன்னும் ரெண்டு பேர சாட்சிக்கு கூட்டிக்கிட்டு வந்து அறைஞ்சார்னா ? என்று பல வித சாத்தியக்கூறுகளை எண்ணிப்பார்த்தாள்

ஏனோ அவளையும் அறியாமல் "அலை பாயுதே என்ற பாடல் மனதில் ஒலித்தது [வேறென்ன மாடசாமியின் அறை  மஹாத்மியம்] அவளை ஆட்டிப்படைக்கிறது] . இப்போது வாயில் படியில் அய்யனார் போல மீசையுடன் மாடசாமி , சூட்கேசில் இருந்து எதையோ எடுத்தார் -தலைசீவப்போறீங்களா என்றார் சுப்புரத்தினம் . சுந்தகரிக்கு,  தலையை சீவப்போறீங்களா என்று கேட்டது.

தலை சுற்றியது சுந்தரிக்கு ………….

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. சுந்தரியின் Head letter எப்படியோ?
    மாடசாமி சுந்தரி மண்டையை பிளந்துவிடுவாரோ!

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...