SALEM SUNDARI -6
சேலம் சுந்தரி-6
சுந்தரிக்கு வயிற்றைக்கலக்கியது .
எங்கேயோ மைதானத்தில் கொண்டு போய் இன்னக்கி செமத்தியாக வெளுக்கப்போகிறார் என்று எண்ண கண்ணீர் தளும்பியது தொண்டையில் கரித்தது.
மாடசாமி அனாயாசமாக பைக் கை கிளப்பி ஏறி அமர்ந்து கொண்டு , சுந்தரியை ஏறுங்க , நல்ல பெரிய சீட்டா தான் போட்டிருக்கேன், மேல இடிக்காம நல்லா
உக்காந்து வரலாம் , அண்ணன் கூட போறோம் னு நெனச்சுக்கிட்டு நல்ல தள்ளியே கை /கால் படாம வாங்க 3 நிமிஷம் தான் என்றார் மாசா.
ஐயோ 3 நிமிஷத்துக்கு அப்புறம் ஓடவிட்டு சாத்துவாரோ, ஐயோ, ஆஞ்சநேயா
காப்பாத்து என்று நாமக்கல் ஆஞ்சநேயரிடம் வேண்டுகோள் வைத்தாள் . சொன்னபடியே பெரிய
காம்பவுண்டில் 3 நிமிடத்தில் வண்டி
நின்றது. தயங்கியபடி இறங்கினாள்
வீட்டுக்குள் கதவை சாத்திக்கொண்டு வெளுப்பாரோ? பின்ன 'அண்ணன்’ னு சொல்லி
கூட்டிக்கிட்டு வந்தாரே என்று ஒரே நடுக்கம் .
உள்ளேயே ரயில்வே ஆஸ்பத்திரி . Disinfectant நெடி மூக்கில் படரத்துவங்கியது . மாடசாமி முன்னே செல்ல
வாயிலில் Dr பிரசாத்
MBBS,DCH என்ற
பலகை.
நெடிதுயர்ந்த மாசாவின் முகம் பார்த்து டாக்டர் வெளியே வந்து வாங்க சார் என்று உள்ளே அழைத்தார்.
உள்ளே சென்று மாடசாமி “சார் இவங்க எங்கசெக்ஷன் . "STAFF”
படபடப்பா இருக்கு நீங்க நல்லா செக் பண்ணி மருந்து மாத்திரை தந்தா குனமாயிடும். உங்க ராசி எனக்கு தெரியும் அதால இங்கேகூட்டிட்டு வந்தேன்,
நான் வெளியே நிக்கறேன் நீங்க பாத்து சொல்லுங்க” என்று வெளியேறினார் மாடசாமி .
3 நிமிடத்தில் டாக்டரும் சுந்தரியும் வெளியே வந்தனர் .
டாக்டர் "லேசா BP இருக்கு, மாத்திரை எழுதியிருக்கேன் 10 நாளைக்கு சாப்பிடட்டும், அதோட ஒரு செடேடிவ் எழுதியிருக்கேன் . நைட் ல தூக்கம் வராதுபோல இருந்தா 1 மாத்திரை போதும் . அப்புறம் 1 நாள் விட்டு தேவைப்பட்டால் இன்னொரு மாத்திரையை சாப்பிட்டா போதும் ஆனா தினமும் செடேடிவ் வேண்டாம்.
சரியாயிடும் குட் லக் என்று மாடசாமியுடன் கை குலுக்கி விட்டு,
சுந்தரிக்கு வணக்கம் தெரிவித்து அனுப்பிவைத்தார்.
வெளியில் வந்த சுந்தரியை , ஒரு நிமிஷம் இரும்மா வண்டியை வெளியே போய் ஸ்டார்ட் பண்ணுவோம் , ஆஸ்பத்திரில சத்தம் போடவேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போதே மாடசாமியின்
காலில் விழுந்து வணங்கிக்கொண்டிருந்தாள் சுந்தரி.
எழுந்திராம்மா என்ன இது -பொது வெளியில யாராவது தப்பா நெனக்கப்போறாங்க எழுந்திரு எழுந்திரு என்று
துரிதப்படுத்தினார் மாடசாமி.
என்ன மன்னிச்சிடுங்க அண்ணே என்று கண்களில் தாரைதாரையாக கண்ணீருடன்
நின்றிருந்தாள் சுந்தரி. இப்ப என்ன ஆயிடுச்சி இப்பிடி அழுவறீங்க ?என்றார் மாடசாமி. .
தெரியாம தப்புபண்ணிட்டேன் மன்னிச்சிருங்க என்று கேவிக்கேவி அழுதாள் சுந்தரி.
தொடரும்
அண்ணன் மாதிரி மாடசாமி சுந்தரியிடம் நடந்தால் பைக்கிலே சின்ன சீட்டே போதுமே. எதுக்கு பெரிய சீட்?
ReplyDeleteசுந்தரியின் மனது சாதாரண ஒரு மனித தன்மை உடையது என்பது தெளிவாகிறது. மாடசாமி உள்ளம் ஒரு ஜீவ நேயம் மிக்க மனது என்பதை அவரது செயல்களே உணர்த்தி விட்டன. மேலும் அவர் தனது இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையை பெரிதாக அமைத்த திலிருந்து பார்ப்பவர்கள் மனதிலும் விகப்பமாவது எண்ணம் தோன்றி விடக்கூடாது என்பதில் உள்ள அக்கறை புரிகிறது. 🙂🙏
ReplyDeleteவிகல்பமான
ReplyDelete