Wednesday, April 17, 2024

DIRECTOR P MADHAVAN-2

 DIRECTOR P MADHAVAN-2

இயக்குனர்  பி மாதவன் -2

திரு மாதவன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த மேலும்சில படங்களை பார்ப்போம் .

"யாரை நம்பி நான் பிறந்தேன்" எங்க ஊர் ராஜா [`1968 ] கண்ணதாசன் , எம் எஸ் வி, குரல் டி எம் எஸ்

வயது முதிர்ந்த ஒருவன் தன்  பிள்ளை களை நொந்து கொண்டு பாடுவதாக அமைந்த பாடல். சிறப்பான வெற்றி பெற்ற பாடல். அந்நாளில் வெகு ஜன ஆதரவு இதை போன்ற இயல்பான நிகழ்வுகளுக்கு  மேலோங்கி இருந்தது , எனவே பாடல் எளிதாக வெற்றி ஈட்டியது. காலப்போக்கில் இவை மறைந்து ஒழிந்தன.

 "பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்த மடா , வேதனையை பங்கு வெச்சா பெத்த பிள்ளை சொந்தமில்லே " தென்னையை பெத்தா இளநீரு பிள்ளையப்பெத்தா கண்ணீரு , பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா" என்று ஆவேசம் காட்டிய கவிஞன். டி எம் எஸ் குரலில் கம்பீரமாக முழங்கிய பாடல் . இது ஒரு புறம் இருக்க கண்ணதாசன் -எம் எஸ் வி இடையே கிளம்பிய விவாதம் சுவையானது.

எம்எஸ் வி : என்ன பாட்டு யா இது நல்லாவே இல்ல கௌரவமில்லாம வாடா,போடா னு -வேற மாத்துய்யா

க. தா : ஏய் உனக்கு ரொம்ப தெரியும் , பேசாம பாட்டுக்கு ட்யூன் போடு , சும்மா ஏதாவது சொல்லாத

எம் எஸ் வி அதுக்காக நல்ல தமிழ்னு சொல்லிக்கிட்டு வாடா போடா சீ நல்லாவே இல்ல

க.தா : விசு நீ ரொம்ப மரியாதைப்பட்டவன் விஜயவாடா வைக்கூட விஜயவாங்க னு சொல்லுவ, நாங்கல்லாம் அப்படி இல்ல கோபம் வந்தா வார்த்தை மீறுவோம் அந்த தாத்தா கோவத்துல கொதிச்சிருக்காரு அதுனால தான் போங்கடா போங்க னு எல்லாரையும் திட்டறாரு. அப்பல்லாம் மரியாதைவாது ஒண்ணாவது -நீ ஏதாவது பேசிக்கிட்டு இருக்காத. பாட்டு நல்லா ஹிட் ஆகும் , நீ ஒரு எழுத்தையும் மாத்தாம கோவத்தை நெனச்சு ட்யூனப்போடு அப்புறம் பாரு என்று கறாராக சொல்லி விட

 டி எம் எஸ் தன் பங்குக்கு கோபத்தைக்குழைத்து சோகம் கலந்து பாட , மாபெரும் பேசப்பட்ட பாடல் ஆனது. Cinematography : PN Sundaram

ENGAOOR RAAJA 1968

https://www.google.com/search?q=YAARAI+NAMBI+NAAN+PIRANDHEN+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=df9114d5be7f4ca8&sca_upv=1&sxsrf=ACQVn0-i4RiQ5OW3cn4gtkhq4U5aTmeuOg% KD MSV TMS

 

கண்ணே பாப்பா -1969

"சத்திய முத்திரை" கண்ணதாசன்,  எம் எஸ் வி, பி. சுசீலா                                                      இது ஒரு கிறிஸ்துமஸ் மிகழ்ச்சிப்பாடலாக குழந்தைகளை முன் நிலைப்படுத்தி கவிஞரின் கற்பனை  மிளிர்ந்த பாடல். மிகச்சிறு வயதில் திரையில் பெரும் பேசுபொருள் ஆன குழந்தை பேபி ராணியின் நடிப்பும் நடனமும் குறிப்பிடப்பட வேண்டியன. இது நீங்கலாக மெல்லிசை மன்னர் வெகு எளிதாக இதை ஒரு கிருத்தவ விழாவின் நிகழ்வாக இசை அமைத்து, கோரஸ், இசை , இசையின் போக்கு என அனைத்திலும் இழையோடும் ஒரு நம்பிக்கையோடு பாடல் பயணிக்கிறது. கேட்டு மகிழ 

https://www.google.com/search?q=sathiya+muthirai+video+song+&newwindow=1&sca_esv=88aa776b28e671aa&sca_upv=1&sxsrf=ACQVn0_DKApdRG_vLdLSdr_tJocmBHAvCw%3A1712841973835&ei=9e kanne papa kd msv, ps baby rani pn sundharam 1969

ராமன் எத்தனை ராமனடி [1970] - நிலவு வந்து பாடுமோ -கண்ணதாசன் , எம் எஸ் வி, பி. சுசீலா

ஒளிப்பதிவு பி என் சுந்தரம்

வினோதமான சூழல், நிலை தடுமாறும் ஒருவனின் மனைவியின் மனக்குமுறலாக ஒலித்த பாடல். குழப்பமான மன நிலையை தெளிவாக வெளிப்படுத்திய இசை அமைப்பு , குதூகலம் கும்மாளம் , குமுறும் மனம் அனைத்திற்கும் இசை பெருக்கெடுத்து ஓடும் பாடல். கவிஞர் இயல்பையும் இல்லாததையும் தொடுத்து கேவி அழுது கேள்வி தொடுத்து -- முடியட்டும் முடியும் போது முடியட்டும் என்று ஆறுதல் சொல்வதும் பாடலின் சிறப்பு. கண்டு உணர இணைப்பு

https://www.google.com/search?q=nilavu+vandhu+paadumo+song+video+song&newwindow=1&sca_esv=956dd3d9e5d35c29&sca_upv=1&sxsrf=ACQVn0-5gXmR1sOqCrfUm6WSd8dmaGnsdw%3A17127594 1970

சபதம் [1971] "தொடுவதென்ன தென்றலோ " கண்ணதாசன் , இசை ஜி கே வெங்கடேஷ்,    குரல் எஸ் பி பாலசுப்ரமணியன்

பலரையும் கட்டி இழுத்து மயக்கிட்ட இளமைக்குரல் SPB, வசீகரிக்கும் மயக்க நிலை மென்மை என்று விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு அமைதியான குரல், இசை இரண்டும் பிணைந்து வழங்கிய தாக்கம்.  இருவரில் ஆண்  பாட பெண் உடன் பயணிக்க என அமைந்த ஒரு நளினம் இப்பாடல்.. படுத்த நிலையில் இருக்கும் கே ஆர் விஜயாவின் முகச்சாயல் வெண்ணிற ஆடை நிர்மலா போல் தோன்றும் வகை ஒளி யில் பி என் சுந்தரம் செய்துள்ள ஒளிப்பதிவு. கண்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=thoduvadhenna+thendralo+video+song&newwindow=1&sca_esv=df9114d5be7f4ca8&sca_upv=1&sxsrf=ACQVn0-k5UVYYB4a9ARTH4varR2e_3KYVw%3A1713169248 1971 KD GKV , PN S

https://www.google.com/search?q=thoduvadhenna+thendralo+qfr+song&newwindow=1&sca_esv=99636c5107a06ae2&sca_upv=1&sxsrf=ACQVn085OXxdt6ixp_blV78iZone7eZGKg%3A1713264803700 QFR Song

மேலும் வளரும்

அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

Oh Language –14

  Oh Language –14                          Needless to recall the purpose of these Sunday blog postings-I beliecve. Proceed   Spring, Sw...