P LEELA--2
பி லீலா 2
லீலாவின் வேறு சில பாடல்கள் அந்நாளில்
வெகு பிரபலம் . அவ்வகை பாடல்களை இப்போது காண்போம்.
பி லீலா 2
வஞ்சிக்கோட்டை வாலிபன்
“வெண்ணிலவே” - கொத்தமங்கலக்ம் சுப்பு, இசை சி.
ராமச்சந்திரா , குரல் பி லீலா இது ஒரு இரவு காட்சி படகில் நிகழ்வதாக
அமைந்தது, ராமச்சந்திராவின் இசை, லீலாவின் குரல் / பாவம் மற்றும்
காட்சி அமைப்பை கூர்ந்து கவனியுங்கள். சில கருத்துக்களை முன் வைக்கிறேன்
வஞ்சிக்கோட்டை வாலிபன்
“ராஜாமகள்” ,
இசை சி ஆர் , குரல் லீலா
நீண்ட நெடிய பாடல் அவ்வப்போது களம் மாறி வெவ்வேறு அமைப்புகளில் பாடல் பயணிக்கிறது.
இசை வெகு நுணுக்கமாக கட்டமைக்கப்பட்டுள்ளது;
அவ்வப்போது மாலுமிகள் இசைக்கும் வகை இசைக்கோர்வைகள் வந்து போக , ஒரு வாலிபனுக்கு , இளவரசி வலை
விரிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது,
பி லீலா வெகு சிறப்பாக பாடியுள்ளார் . கேட்டு மகிழ
வஞ்சிக்கோட்டை வாலிபன்
“கண்ணும் கண்ணும்
கலந்து” -கொத்தமங்கலம்,
இசை: சி ஆர்,
குரல்கள் லீலா, ஜிக்கி
இன்றளவும் இது போன்ற ஒரு நாட்டியப்பாடல்
அதுவும் கம்பீரமான போட்டியாக வேறு எந்தப்படத்திலும் அமையாத தனிச்சிறப்பு
இப்பாடலுக்கு உண்டு.. இப்பாடலின் சிறப்பே நாட்டியம் தான்; இரு பெரும் நடன
நாரிமணிகள் -பத்மினியும்,
வைஜயந்திமாலாவும் விரைந்து ஆடுவது ஒருபுறம். சிறப்பான பாடல் தான் எனினும் நடன
அசைவுகள் முன்நிலை பெற, இசை பெரும் காரணி அதிலும் தாள ஜதிகள் வகைகள், நடைகள், கருவிகளின்
கூட்டியக்கம் என்று சி ராமாச்சந்திராவின் ஆளுமை அற்புதமாக வெளிப்பட்ட பாடல்
. இப்பாடலுக்கு தாளவாத்தியக்குழுவினர் 35 பேர் , பல தபலா, மிருதங்கம் , கோல் மற்றும்
கஞ்சிரா ஒரே ஒரு இடத்தில் ட்ரம்பெட் நுழைய பாடல் எட்டிய உயரம் திடீரென்று
அதிகரிக்க காட்சி விறுவிறுப்பு அடைகிறது. எடுத்ததற்கெல்லாம் பன்ச் டயலாக் என்கிறார்களே.
இந்தப்பாடலில் ட்ரம்பெட் ஒலித்து ,
தாள ஒலி உயிர்த்ததும் பி எஸ் வீரப்பா
"சபாஷ் –சரியான போட்டி
"என்று மிடுக்காக வலது கர அசைவுடன் சொல்வாரே அதுதான் இன்றைய பன்ச் டயலாக்
வகைகளின் கொள்ளுப்பாட்டன்.
பாடலி ல் இந்த இடத்தை போற்றி ரசிக்காதவர்களே இலர் என்று
அடித்துச்சொல்லலாம். ஜிலு ஜிலு வென்று ஜோராய் என்று மிடுக்காக வைஜயந்தி மினுக்க ,ஒலிக்கும் குரல்
அந்நாளைய ஆளுமை ஜிக்கி: ஆடுவேன் பாரடி, பாடுவேன் கேளடி
என்று என்று முறித்து முறித்துப்பாட, பாடல் போட்டியின்
வலிமையை தெரிவிக்கிறது இரு நடன நங்கைகளில் வெற்றி தோல்வி எவர்க்கும் இல்லை ஆயினும்
பாடலும் காட்சியும் இன்றளவும் வெகு சிறப்பான படைப்பு எனில் மிகை அல்ல. . இப்பாடலின் இருவரின் சில பகுதிகளே ஒன்றாக இணை
ந்து ஆடி பதிவு செய்யப்பட்டது. பிறபகுதிகள் முதலில் பத்மினியும் பின்னர்
வைஜயந்தியும் தனித்தனியே ஆடி பதிவிடப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன
நீண்ட தாள அடுக்குகளுக்குப்பின் லீலா
தான் துவங்குகிறார் ஏனோ இன்பமே புதுமையாய்
என்று தொகையறாவைத் தூக்கி நிறுத்தி
கண்கள் படபடத்து, ………காதல்…….. என்பது இது தானோ
ஓஒ என்று மேலே சஞ்சரித்து அ றி யே னே என்று மெல்ல தவழ்ந்து கீழிற ங்கும் போதே லீலா எட்டிய உயரம் அசாத்தியம் , அதை உணர்த்தும்
வைஜயந்தியின் படபடப்பு என்று கோர்வையாக காட்சியை வெகு நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அன்றைய ஜாம்பவான் எல்லப்பா ஜெமினி
நிறுவனத்தின் தலைமை ஒளிப்பதிவாளர். அவர் ஏன் அவ்வளவு பேசப்பட்டார் என்பது இந்த
இன்றைய 3 பாடல்களிலும்
அனாயாசமாக வெளிப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=-wBN0-c_qmw LAKSHMAN SRUTHI PROGRAMME
ஒளிப்பதிவை நன்றாக கவனியுங்கள் , அந்தந்த
பாத்திரங்களைத்தாண்டி எங்கும் ஒளியோ நிழலோ இல்லை பின்னணியில் இருக்கும்
வாத்தியகுழுவோ, பார்வையாளர்களோ இருட்டி லும் இல்லை. பளிச் என்று தெரியும் முகங்கள், ஓடிஆடிநடனம்
எனினும் துரத்தும் ஒளி தெரியாமலே எவ்வளவு சிறப்பாக பதிவிட்டுள்ளார் எல்லப்பா..
மேலும் நகைகள் அவ்வப்போது ஜொலிப்பதும் வெகு இயல்பாக பதிவிடப்பட்டுள்ளதே ஆயினும்
எந்த இடத்திலும் நிழல் தாக்கம் சிறிதும் இல்லாமல் நாட்டியம் நடந்துகொண்டே இருக்கிறது 1958 ல் இவ்வளவு
திறமையா? எவ்வளவு உழைத்திருப்பார்கள். இதை முற்றிலும் இசையின் மீது அமைத்த திறமை அசாதாரணமானது.
மற்ற இரு பாடல்களிலும் கூட எல்லப்பா வெகு
சிறப்பாக காமெராவைக் கையாண்டுள்ளார் .என்று உறுதியாக சொல்லலாம். இந்த ஒரு பாடல்
எவ்வளவு நபர்களின் உழைப்பு? கலைஞர்களை வணங்கினால் தவறில்லை. ஒரே படத்தில் மாறுபட்ட
ஓட்டம், உணர்வு, பாவம் என பயணிக்கும் பாடல்களை வெகு நேர்த்தியாக
பாடியுள்ளார் லீலா. இதை குறிப்பிடவே ஒரே படத்தின் பாடல்களை இங்கே பதிவிட்டுள்ளேன்
அன்பர்கள் மன்னிக்கவும்
நன்றி
அன்பன் ராமன்
கண்ணும கண்ணும்கலந்து
ReplyDeleteசொந்தம. கொண்டாடுதே
பாட்டு , நடனம் ஆடை அலங்காரம் , ஒளிப்பதிவு எல்லாமே பலே ஜோர்
இன்று பார்த்தாலும் பளிச்சென்ளு இருக்கும்.
இசை பற்றி கேட்கவே வேண்டாம்
அப்பப்பா எதை குறை சொல்ல
சபாஷ் சரியான போட்டிதான்
ReplyDeleteஜிக்கியும் லீலாவும்
பத்மினி வைஜயந்தி
வீரப்பா ஜெமினி கணேஷ்
என்று கேட்டாலும. அலுக்காது