Tuesday, April 16, 2024

EFFECT OF HONESTY

 

EFFECT OF HONESTY

நேர்மையின் விளைவு

இந்தியத்திருநாட்டில் விருப்பம் போல் நடந்து கொள்வது என்ற கோட்பாட்டிற்கு இடம் அளிக்காத கட்டுப்பாடுகள்  நிர்வகிக்கும் அணுகுமுறகளே நேர்மை என்று புரிந்து  கொள்ளலாம்

.அதாவது எந்த இயக்கமும் ஒரு வரையறையில் நிகழவேண்டும் என்பதே நேர்மையின் அடிப்படை. அவ்வாறெனில் நமக்கு இடையூறாக இருப்பதாக உணர்வது இந்திய மக்களின் பலவீனம்.  

விலங்கினங்கள் போல் இயங்குவது, ஆங்காங்கே குப்பைகளை வீசுவது , எச்சில் உமிழ்வது இவ்வனைத்தும் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை" என்பதற்கொப்பான சுதந்திரம் என்று சமீப காலம் வரை இயங்கியது தான் இந்தியா. 

எண்ணற்ற கட்டட கலைகளும் கோயில்களும் பிற கலைகளும் நிறைந்த இந்தநாட்டில் சுற்றுலா வரும் மேலை நாட்டவர் அதிர்ந்து போவதென்னவோ இந்த நாட்டின்ஜனத்தொகையை கண்ணால் பார்ப்பதில் தான். 

மொத்த மக்களும் தெருக்களில் தான் நடமாடிக்கொண்டே உள்ளனர் எனவே தெருவில் எப்போதும் கூட்டம் , எங்கும் கூட்டம், கோயிலில், ரயில் நிலையத்தில், மருத்துவ வமனைகளில், ரயிலில், பஸ்ஸில், கடற்கரையில், நதிக்கரையில் , ரேஷன் கடைகளில், விமான நிலையங்களில் . என்று திரும்பிய பக்கமெல்லாம் ஜே ஜே என்று ஆரவாரம் ,

ஆங்காங்கே கையை நீட்டிக்கொண்டு யாசகர்கள், காலைநீட்டிக்கொண்டு நடுசாலையில் உறங்கும் மாடுகள் , இவ்வனைத்தும் புகைப்படம் எடுப்பதே , இவை வேறெங்கும் காணக்கிடைக்காதன என்று உணர்த்துகின்றன..

இதற்கும் நேர்மைக்கும் என்ன தொடர்பு என்றொருவர் முறைக்கிறார் . ஒழுங்கற்ற , செயல்களே  நேர்மை குறைந்த நடைமுறைகளின் அடையாளம்.

இது  வெட்டவெளிச்சமாக அனைத்து நகரங்களிலும், ஊர்களிலும் காணப்படுவதே நமது வெகு யதார்த்தமான அணுகுமுறையின் வெளிப்பாடு; உரிய அதிகாரி வராத வரையில் நம்மக்கள் 'சொந்தக்காரியம் ஜிந்தாபாத் " என்றே வாழ்கின்றனர்.

இது போன்ற எளிய அணுகுமுறையின் தன்னலம் சேர்ந்த நேர்மையை மட்டுமே பின் பற்றுகிறோம். .அது செயல் படுவதில் செலவோ தாமதமோ எனில் வேறு பாதையில் பயணிப்பது என்று முன்னமே முடிவு செய்வது நம் மக்கள் விரும்பும் முறை.

. இப்படித்தான் போட்டி தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் , இன்னபிற வகை கடும் முயற்சிகள் தேவை இல்லை என்று அரசியல் ஆலோசனையை நம்பி வாழ்வைத்தொலைப்பது கூட நமக்கு எளிதில் தெரிவதே இல்லை. எந்த ஒன்றிலும் அரசாங்கம் உதவி செய்யும் என்று அரசமைப்பை மட்டுமே நம்பி வாழ்வது தான் சுகம் என்று பலர் நம்புவதை பார்க்கிறோம்..

சரி ஒரு செயலில் நேர்மை சார்ந்து இயங்கவேண்டுமெனில் மிகுந்த இடர்ப்பாடு. இன்னல் இவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பலரும் குறுக்கு வழியில் வசதியடைய ஒருசிலர் மாத்திரம் துன்பப்பட வேண்டுமா எனில் எனது புரிதல். பலர் வெவ்வேறு முறைகளில் இலக்கை அடைவது என்று கிளம்பி விட்டால், துன்புறுவது நேர்மை மட்டுமே

எனவேதான் நேர்மை என்பதே அனைவருக்கும் தான் என்ற நிலை வரும் போதில் லஞ்சம், பஞ்சம், முன்உரிமை  சலுகை இவை அகலும். அந்த கட்டம் தான் நியாயமான போட்டிக்கு வழி செய்யும் . அதுவரை ஒரு சிலரேனும் நேர்மையைப்போற்றி காத்தாலாவது நேர்மையை கண் கூடாக அறியும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்

எப்படிப்பார்த்தாலும் நேர்மை என்பது தெரிந்தே துன்பத்தை அழைப்பது மற்றும் சுமப்பது என்பதே இன்றைய நிலை. எனவே நேர்மையை விரும்பி ஏற்போர் விசேஷ இறையருள் பெற்றோர் என்றே நினைக்க இடமுண்டு. எளிதில் இயங்கி, சந்து பொந்தில் நுழைந்து உயர் அதிகாரிக்கு ஊழியம் செய்தல் பொருளாதாரமேம்பாட்டுக்கு வழி செய்யும். நேர்மையானை எவரும் விரும்புவதில்லை. கட்டுரைகளிலும் கதைகளும் போற்றுவர் . நிஜ வாழ்வில் -- இவன் கையாலாகாதவன், கிறுக்கன் என்று சமுதாயம் கேலிப்பார்வை பார்க்கிறது. இது தானே யதார்த்தம்?

அப்புறம் நேர்மை எப்படி தழைக்கும்? . நல்லவர்களைத்தான் இறைவன் சோதிப்பார் என்றொரு சொல்லாடல் பிரபலம். 

இதனை நான் புரிந்துகொண்டது . சோதிக்க இன்றைக்கு யார் என்று தேடும் பணி எளிதாக, இருக்கும். மொத்த நல்லவர்கள்    3 பேரில் தேடுவது எளிதா? 3 கோடி  ஊழல் ஆர்வலர்களின் சீனியாரிட்டி யில் தேடுவது எளிதா? அதனால் தான் இறைவன் நல்லவர்களை சோதிக்கிறார் .

அன்பன் ராமன்

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Dear brother prof. Raman, I read your article. Wonderful. These are the values which have to be inculcated by the families first, reinforced by the educational institutions. Very happy. Please continue the good work. God bless you all. RK

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...