Monday, April 15, 2024

SALEM SUNDARI -5

 SALEM SUNDARI -5

சேலம் சுந்தரி-5

இப்போது நிஜமாகவே "அலைபாயுதே" நிலை தான் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் பாடலில் வரும் "கண்கள் இரண்டும் ஒரு விதமாய் சொருகுதே" என்ற வர்ணனை போலவே  சுந்தரியின் கண்கள் ஒரு விதமாய்சொருகவே , அவள் துவண்டு சரிந்தாள் இருப்பிடத்திலேயே. நொடிப்போதில் இதை கண்ட மாடசாமி , மேடம், சுந்தரி மேடம் என்று அலறியபடி ஓடி அவளை தாங்கிப்பிடித்தார். அடிபட்ட குருவிபோல மாடசாமியின் மீது துவண்டு ஈரத்துணி போல் கிடந்தாள்; வினாடியும் தாமதமின்றி தண்ணீர் பாட்டிலை எடுத்து குளிர்ந்த நீரை சுந்தரியின் மீது மழைத்துளி போல் 3, 4 முறை தெளிக்க , சுந்தரி மயக்கம் நீங்கி கண் திறக்க அவளுக்கு வெட்கமும் பயமும் ஒருசேர ஆட்கொள்ள உடல் நடுங்கியது. "என்னம்மா இப்பிடி உடல் உதறுது , காலைல சாப்பிடாம வந்துட்டீங்களா, ஏய் பரமசிவம் டக்குனு ஓடிப்போய் சூடா காப்பி வாங்கிட்டு ஓடியா எங்கயும் பேசிக்கிட்டு நிக்காம ம்ம் ஓடியா என்று பரமசிவத்தை துரத்தினார். பரம சிவம் போற போக்கிலேயே flask ஐ த்தூக்கிக்கொண்டு காண்டீனில் பாய்ந்து 3 காபி சூடாக வாங்கி வந்தான். மாடசாமியே ஒரு கிளாஸ் டம்பளரில் ஊற்றி, “இந்தாங்க சூடா சாப்பிடுங்க , படபடப்பு அடங்கட்டும் அப்புறம்  டாக்டர்ட்ட போயிட்டு வந்துருவோம். இப்ப காப்பிய குடிங்க என்றார்.

உள்ளூர ஒரு பயம் –மாடசாமி வேலைக்கு வாராமல் திரிவதாக நினைத்துக்கொண்டு HR வரை போனது ஹிமாலயத்தவாறு என்று உணர்ந்தாள். எப்படிப்பேசி விளக்குவது ;அதுவும் மிக அருகில் மாடசாமியின் உருவம் சற்று கலக்கம் தந்தது .இவ்வளவு பெரிய ஆம்பிளை மீது விழுந்து கிடந்தேனே , கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டு என் மேலயே சாஞ்சுக்கிறாயா நீ என்று மொத்தினால் என்னாகும் என்று சஞ்சலப்பட்டாள் . இன்னமும் மாடசாமி பக்கத்திலே தான் நிற்கிறார்.  

சாரி சார் தவறு நடந்துடுச்சு-ஒரு தடுமாற்றத்தில என்று சுந்தரி பேச ஆரம்பித்ததும், ‘இப்ப ஒண்ணும் சொல்லவேண்டாம் என்றார்  மாடசாமி .

[ஏய் , செய்யறதையும் செஞ்சுட்டு விளக்கம் சொல்லவேண்டாம்.]

[இப்பஒண்ணும் சொல்லவேண்டாம் என்றால் அதுதான் போலிருக்கிறது என்று நடுங்கினாள் சுந்தரி]  அதனால் லேசாக படபடத்தாள் ,கை நடுங்கியது. .சார் தவறு செஞ்சுட்டேன் ஒருவித தடுமாற்றத்தில் என்றாள்  சுந்தரி.

தன்மீது மயங்கி சரிந்ததைத்தான் 'தடுமாற்றத்தில ' என்று சொல்வதாக மாடசாமி நினைக்க, அவளோ "தடுமாற்றத்தில் " என்று சொல்லி HR வரை போய் புகார் கொடுத்ததை பூசி மெழுகி -'ஒரு மாதிரி' சொல்லப்பார்க்கிறாள்.

இப்ப ஒண்ணும் சொல்லவேண்டாம் என்ற  மாடசாமி . சொல்ல விரும்பியது, நீயோ பசியில் துவண்டு வெடவெடக்கிறாய் இப்ப ஒண்ணும் சொல்ல வேண்டாம் [பிறகு பேசு என்று சொல்கிறார்].  மாடசாமி புரிந்துகொண்ட தடுமாற்றம் -பசிமயக்கம் விளைவித்தது என்று இரக்கப்பட்டார்.

சுந்தரி - அவராக ஏன் HR வரை போனாய் ? என்று கேட்கும் முன் பதற்றத்தில் தவறு செய்து விட்டேன் என்று சொல்லி சமாளிக்க நினைக்கிறாள்.

மாடசாமியின் உருவம் யாரையும் அசைத்துவிடும். அதுவும் இவ்வளவு அருகில் ஆஜானு பாகு அய்யனார் மீசை கர்லாக்கட்டை புஜங்கள்என்று மனம் நடுங்கும் கம்பீர வடிவம் , காலில் விழுவதைத்தவிர வேறு எப்படி தப்பிக்க முடியும் என்று யோசித்தாள் . இன்னொரு காபி குடியுங்க என்று இன்னும் காபியை கொடுத்தார் மாடசாமி. இப்போது கொஞ்சம் சமநிலை க்கு வந்தாள் சுந்தரி.

சார் போயிட்டு வந்துர்றேன்’” என்று சுப்புரத்தினத்திடம் சொல்லி விட்டு ஹெல்மெட் அணிந்து கொண்டார் மாடசாமி, சுந்தரி தன் டேபிள் அருகில் இருந்தாள் , ‘கிளம்பும்மா என்று மாடசாமி அவளை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினார்.

தொடரும்

அன்பன் ராமன்

3 comments:

  1. மாடசாமி சுந்தரியை கட்டிப்புடிக்கும்போது மாடசாமியின்கண்கள் ஒரு விதமாய் சொருகியிருக்குமே
    மாடசாமிக்கு ஊத்துக்காடு சொந்த ஊரோ?

    ReplyDelete
  2. வாசகர்கள் திடீரென்று தாங்களே மாடசாமி என்று மனதளவில் சிறகடித்து 'அந்த மாடசாமி ' எப்படி உணர்ந்திருப்பார் என்று கருதி , ஐயோ அது நானாக இல்லாமல் போய்விட்டீனே என்று சிறுது பேதலிப்பார்கள் என்று புரிந்து கொண்டு தான் "இவ்விடத்தில் கற்பனை சிறகை விரிக்காதீர்கள் என்று கதையிலே யே சுட்டிக்காட்டியுள்ளேன். எனினும் வாசகர்களே ஊத்துக்காடு வேங்கட சுப்பு வாக மாறி கண்கள் இரண்டும் ஒரு விதமாய் -இல்லை இல்லை வேறு வேறு விதமாய் சொருக , என்ன தவம் செய்தனை என்று பாட வேண்டும் போலிருக்கே அண்ணா !!!!!

    ReplyDelete
  3. இந்த பகுதியில் சுந்தரி தான் தெரியாமல் செய்த தவறு எந்த விதமான விளைவை கொண்டு வரப்போகிறது என்ற மன உளைச்சலில் இருப்பது நன்றாக புரிகிறது. மேலும் மாடசாமி அந்த விஷயத்தை பற்றி கண்டும் காணமல் இருப்பது மேலும் மேலும் எதிர்பார்ப்பை தூண்டுகிறது.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...