Thursday, May 16, 2024

DIRECTOR - T R RAMANNA-2

 DIRECTOR - T R RAMANNA-2

இயக்குனர் டி  ஆர் ராமண்ணா-2

https://www.google.com/search?q=varushaththapaaru+66++movie+nee+old+tami8l+film+video+sdong&newwindow=1&sca_esv=f28e476185e14b90&sca_upv=1&sxsrf=ACQVn08OGO33yAdY52MgDw kumarippen tms

வருஷத்தப்பாரு -66 [குமரிப்பெண் -1966] கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் , எல் ஆர் ஈஸ்வரி

ஓடும் ரயிலில் துரிதகதியில் , பெண்கள் பெட்டியில் நுழைந்த ரவிச்சந்திரன் , இளம் பெண்களிடம் சிக்கி அலைக்கழிக்கப்படுவதாக அமைந்த காட்சி. ஜெயலலிதா- நடுநாயகி, தோழிகளுடன் ரவிச்சந்திரனை கலாய்ப்பது பாடல். அய்யய்யய்யய்ய என்று வம்பிழுத்து பாடும் அநாயாசஆளுமை எல் ஆர் ஈஸ்வரி .

பாடல் வெற்றி, என்றால் அதிரி புதிரி ரகம்.

பட்டி தொட்டி எங்கும் பட்டையைக்கிளப்பிய டிவிஸ்ட் டான்ஸ் வகை அசைவுகளுக்கு உதவிய இசை . இந்தப்பாடலின் பின்னால் ஒரு வாதம் நிகழ்ந்தது அது என்ன? இறுதியில் விளக்குகிறேன் . பாடலை கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=varushaththapaaru+66++movie+nee+old+tami8l+film+video+sdong&newwindow=1&sca_esv=f28e476185e14b90&sca_upv=1&sxsrf=ACQVn08OGO33yAdY52MgDw lre

தமிழ் சினிமா மரபு காக்கப்பட வேண்டுமே. -மீண்டும் அதே பாடல் இப்போது , நாயகன் பெண்களை கலாய்ப்பதாக அதே சொற்களில் அமைந்த பாடல் .

வருஷாத்தப்பாரு-66 , அதே படம் . பாடல் கண்ணதாசன், இசை எம் எஸ் வி, குரல் டி எம் எஸ். இது ஒரு வெளிப்புறக்காட்சி , துள்ளி விளையாடிய ரவிச்சந்திரன்.,  சரி பாடலில் இருந்து எழுந்த வாதம் என்ன? தயாரிப்பாளர் ஒருவர் கண்ணதாசன் அவர்களிடம் இது போல ஒரு பாடல் வேண்டும் என கேட்க ? அது என்னய்யா பாடல் அதைப்போய் கேட்கிறீர்களே என்றார் கண்ணதாசன்

இல்லீங்க ஜிஞ்சின்னா க்கடி ஜிஞ்சின்னாக்கடினு  என்று சும்மா கும்முனு வேணும் என்றார் தயாரிப்பாளர்.

கண்ணதாசன் " போய்யா   நான் பாட்டே எழுதல , நீங்க ஆள் தெரியாம வந்துட்டேங்க   போங்க போங்க என்று கண்ணதாசன் துரத்த --" இல்லீங்க நீங்கதான் குமரிப்பெண்  எழுதியிருக்கீங்க என்று படுத்த,

"ஏண்டா விசு என்னடா இது ஏதோ ஜிஞ்சின்னா க்கடி ஜிஞ்சின்னாக்கடி னு கூவிக்கிட்டே இருக்கா"ரு என்னடா அது ?

விசு: அண்ணே டைரக்டர் நல்ல டிவிஸ்ட் டான்ஸுக்கு ஏத்தமாதிரி ஏதாவது போட்டுத்தாங்கனு கேட்டாரு , நான் தான் ஜிஞ்சின்னா க்கடி ஜிஞ்சின்னாக்கடி னுசேத்து பாட வெச்சேன் .

"போடா ஆளாளுக்கு எதையாவது பண்ணி இப்பிடி வேணும் அப்பிடி வேணும் னு -தொல்லை போங்கடா என்று வெடித்தாராம் . எப்படியானால் என்ன கவிஞரும் -விசுவும் இணைபிரியா அன்பர்கள் , தொடர்ந்தும் கோப தாபங்களுடனே அன்போடு பயணித்தார்கள் என்பது தமிழ் சினிமாவில் வரலாறு

கண்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=varushaththapaaru+66++movie+nee+old+tami8l+film+video+sdong&newwindow=1&sca_esv=f28e476185e14b90&sca_upv=1&sxsrf=ACQVn08OGO33yAdY52MgDw kumarippen tms

கல்யாண நாள் பார்க்க "பறக்கும் பாவை" 1966 கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் பி சுசீலா

ஒரு சர்க்கஸ் கூடாரப்பாடல் . வெகுவாக வெற்றி அடைந்த எம்ஜி ஆர் சரோஜா தேவி டூயட்.. மாறுபட்ட இசை வடிவம் , இசைக்கருவிகளும் கூட சர்க்கஸ் அரங்குகளில் ஒலிப்பன ;எனவே மாறுபட்ட ஒலி அமைப்பில் வந்து பலரையும் கவர்ந்த பாடல். கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=kalyaana+naal+parkka+sollalaamaa+video+song+&newwindow=1&sca_esv=f28e476185e14b90&sca_upv=1&sxsrf=ACQVn0_NgirtyRTVFUXO-Lgn7NwIdBr_gA%3A1714 kalyaana naal parakkum paavai 1966

இது போன்ற பல வெற்றி படங்களையும் பாடல்களையும் வழங்கி தனக்கென ஒரு இடம் வகித்தவர் இயக்குனர் டி ஆர் ராமண்ணா அவர்கள்

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...