Wednesday, May 15, 2024

T M SOUNDARARAJAN -4

 T M SOUNDARARAJAN -4

டி எம் சௌந்தரராஜன்- 4

பல தரப்பட்ட பாடல்களை, அனாயாசமாகப்பாடும் டி எம் எஸ் அவ்வப்போது வெளிப்படுத்திய கம்பீரங்கள் ஏராளம். . அவற்றுள் ஆரம்பகாலத்திலேயே பட்டையைக்கிளப்பிய பாடல் "எரிக்கரையின் மேலே" என்று துவங்கி ஆஅ ஆஅ ஆஅ என்று வானுயரப்பரந்து ஆரபியில் சஞ்சாரித்து தெம்மாங்கில் முழங்கிய பாடல் . பலருக்கு முதல் படம் "முதலாளி" முக்தா ஸ்ரீநிவாசன் [இயக்குனர் முதன்முதலாக], எஸ் எஸ் ஆர் -தேவிகா ஜோடிக்கு முதல் படம். பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும்  தொடரப்பட்டு மொத்தம் 2, 3 மாதங்களிலேயே நிறைவுற்ற முதல் படம். எதுவாயினும் டி எம் எஸ்ஸின் கம்பீரக் குரலும், தேவிகாவின் விசேஷ நடையும் ம்பாடலின் இரு அம்சங்கள். அந்நாளைய வெற்றிப்பாடல்

ஏரிக்கரையின்  மேலே [முதலாளி-1957] கவி,. காமு ஷெரிப் , இசை கே வி மஹாதேவன் குரல் டி எம் எஸ் கேட்டு மகிழ இரு இணைப்புகள் . அவற்றில் இன்று QFR -237  . இந்தப்பாடல் ஏன் இடம் பெறவில்லை என்று சில குரல்கள் வெளிப்படுத்திய எதிர்பார்ப்பு [ஏக்கம்?] இன்று முதல் பாடலாக இடம் பெறுகிறது. ரசித்து மகிழ்வீர்

https://www.youtube.com/watch?v=hxrySZ7R3OQ

https://www.youtube.com/watch?v=kt9zZa5CgJc QFR 237

சென்ற பதிவில் இடம் பெற்ற "அந்த மாப்பிள்ளை காதலிச்சான்"  பாடலுக்கு சரியான போட்டியாக களம் கண்ட பாடல். . இசை அமைப்பாளர்களுக்கு பாடிய குரல்களும் ஒன்றே எனினும் இருவேறு ரக வெளிப்பாடுகள். இந்தப்பாடல் 2"அமைதியான நதியினிலே ' என்று துவங்கி டூயட் போல் ஒலித்தாலும் ஒரு பாதி முற்றிலும் மனரீதியான தர்க்கங்கள், பின் பகுதி மன ரீதியாகவே  இயங்கினாலும் காதலின்  வெளிப்பாடாகவே பரிணமித்த கவிதை. கவி அரசரின் சொல்லாட்சி, ஈடு கொடுத்த இசை, நடிப்பில் பளிச் என்று பாவம் காட்டும் தேவிகா , டட டைன்க் டட டைன்க் என சந்த்துரில் துவங்கி , குழலில் மிதந்து , மிக ரம்மியமாக ஒலித்த இசை [இதுபோன்ற ஒலிக்கலவைகளை தொலைத்துவிட்டு என்ன பாடல் வேண்டிக்கிடக்கிறதென்று நம்மை யே நொந்துகொள்ளும் அவலத்தை என்னென்று சொல்ல?]. பாடலில் துவக்கத்தில் தேவிகா காட்டும் சலிப்பும் அடுத்து சமாதானமும் முகத்தில் மின்னலை போல் படர்ந்து மறைவதை பலமுறை பார்த்தாலும் அதன் தாக்கம் குறைவதே இல்லையே? என்ன ஆழ்ந்த நடிப்பு. இது ஒரு தகவல்  சுரங்கம் எனில் தவறில்லை .

" அமைதியான நதியினிலே" ஆண்டவன் கட்டளை [1964] கண்ணதாசன் , வி, ரா , குரல்கள் டி எம் எஸ், சுசீலா. இப்பாடலில் சுசீலா வெகு எளிதாக டி எம் எஸ் அவர்களை தூக்கி, சாப்பிட்டுவிட்டார் என்று சொல்ல தோன்றுகிறது. கண்டு, கேட்டு ரசிக்க  இணைப்பு இதோ

https://www.google.com/search?q=amaidhiyaana+nadhiyinile+odam+video+song&oq=amaidhiyaana+nadhiyinile+odam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTI2ODI4ajBqNKgCALAC 1964 aandavan kattalai m kd, vr, tms ps

3 “ஒளிமயமான எதிர்காலம் [பச்சை விளக்கு -1964] 1964 ம் ஆண்டு தமிழ்த்திரை யின் பொற்காலம் போட்டிபோட்டுக்கொண்டு எத்துணை படங்கள், அனைத்திலும் கம்பீரமான பாடல்கள், கவிநயம், ஒலிநயம், இசைநயம் குரல் வளம் என ஆகப்பெரும் ஒலிசாம்ராஜ்யத்தை உலவிட்ட கலைஞர்கள் ;அவர்கள் மறைந்தாலும் அவர் தம் ஆக்கங்கள் இன்றும் உயிர்த்துடிப்புடன் நம்மை ஆட்டிப்படைப்பதை பெருமையாகவே பார்க்கிறேன் .

மிகுந்த நம்பிக்கை ஊட்டும் கவிதை. மங்களத்தின் [மங்கலத்தின் ]மாட்சிமை குன்றாத வெண்கல ஒலியாக டி எம் எஸ் மிளிர , கூடவே பயணித்த நாதஸ்வர தவில் ஒலிகள் வழங்கிய மங்களக் குவியல் இப்பாடல்.                                             ஒளிமயமான எதிர்காலம்” [பச்சை விளக்கு -1964] கவியரசு கண்ணதாசன் , இசை வி-ரா , குரல்- டி எம் எஸ்  கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=%5Dolimayamana+edhir+kaalam+video+song+&newwindow=1&sca_esv=16b87234c4719fc3&sca_upv=1&sxsrf=ADLYWIL6JyepEyLzab6dZJb3_GZRb6qlKg%3A17156753 pachai vilakku 1964 kd vr tms

மீண்டும் 1964 ம் ஆண்டின் அற்புதம் கரை மேல் பிறக்கவைத்தான் [படகோட்டி-1964]  உலகத்தின் தூக்கம் கலையாதோ என்ற தொகையறா வே நம்மை குலுக்குவதை என்னவென்று சொல்ல? தொடர்ந்தும் மானிட வாழ்வின் பல யாதார்த்தங்களைத்தொட்ட தொகையறா---இறுதியில் நுழைந்து புயலைக்கிளப்புவதோ மீனவர்தம் வாழ்வின் "நித்ய கண்டம் பூரணாயுசு" நிலை பற்றியது       அது  விவாதமா வர்ணனையா -என்ன ?

கேள்விகளில் தர்க்கம் செய்தல் ஒருவகை. இதிலோ, வாசகமே வாதமாக, வாலி காட்டிய விஸ்வரூபம்.

 "தண்ணீரில் பிழைக்கவைத்தான் , பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் " என்று இறைவன் காட்டிய வாழ்வை விளக்கும் சொற்கள்.        " கட்டியமனைவி , தொட்டிலில் பிள்ளை -உறவைத்தருபவர் அங்கே " அலைகடல் மேலே அலையாய் அலைந்து உயிரைத்தருபவர் இங்கே " ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் , ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் " என்று கவிஞன் சொல்வது எவ்வளவு ஆழ்ந்த ஆதங்கம்..  இவை, யாவர்க்கும் பொருந்தும்.  எனினும்,  மீனவர் நிலை வேறன்றோ?

"கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ ? தனியாய் வந்தோர் துணிவைத்தவிர துணையாய் வருபவர் யாரோ ? வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு, முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை " என்று நித்யத்தின் அநித்யத்தை அனாயாசமாகச்சொல்லி புகழ் கொண்ட கவி வாலி.

பாடலின் சோகம் வழுவாத இசை , தொண்டையை அடைக்கும் யதார்த்த ஒலி    டி எம் எஸ் குரலில் , கேட்டு உணர வேண்டிய வாழ்வியல் யதார்த்தம் . இணைப்பிற்கு இதோ

https://www.google.com/search?q=karai+mel+pirakka+vaiththaan+video+song+&newwindow=1&sca_esv=16b87234c4719fc3&sca_upv=1&sxsrf=ADLYWILCAgGURXdy9lsvgTB4qMBaScz_Ew%3A17156738 padagotti 1964 vali, vr tms

உணர்ச்சிகளை குரலில் வடித்துப்பாடுவது எளிதன்று; மேலும் பாடலின் நடையை மறவாமல் பாவம் மேலிட நெஞ்சை அடைக்கும் சோகம் கோபம் வீரம் என அனைத்து மனிதப்பண்புகளையும் குரலில் செம்மையாய் காட்டிய டி எம் எஸ் ஒரு சிறப்பு படைப்பு.

 தொடரும் அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...