SALEM SUNDARI-14
சேலம் சுந்தரி-14
பூரா விவரங்களையும் புரிந்து கொண்ட சுந்தரி, பெரும் பொறுப்பை வரவழைத்துக்கொண்டோம் போலிருக்கிறதே என்று மென் குரலில் ஆஞ்சநேயா என்று முணுமுணுக்க ,
கழுகு
ராமசாமி எங்களுக்கு யாருக்காவது "ஆஞ்சநேயர்" னு பேர் வச்சிருக்கியா ? என்று
கேட்க மீண்டும் சுந்தரிக்கு "ஊத்துக்காடு" வேங்கடசுப்பையர் பாடலில்
வரும் "கண்களிரண்டும் ஒரு விதமாய் " போல இருண்டு, புரண்டு, மீண்டும்
நார்மலுக்கு வர , மாடசாமியின் வலது தோள் பட்டைக்குக்கீழே எறும்பு
கடித்துவிட சட்டென்று எழுந்து மாடசாமி சட்டைக்கையை
மேல் நோக்கி உருட்டி விட , இப்போது
நிச்சயம் அடிவெளுக்கப்போகிறார் என்று குலை நடுங்கிய சுந்தரி , இரண்டு
உள்ளங்கைகளையும் அகல விரித்து முகத்தை மறைத்துக்கொண்டு , சார்
சார் அடிச்சுடாதீங்க சார் என்று அழாக்குறையாக கெஞ்சினாள்.
என்னது அடிச்சுடாதீங்க வா? அடிக்காம
விட்டா எப்படி என்று சொல்லிக்கொண்டே இடது உள்ளங்கையால் தனது வலது தோள்பட்டையில்
பச் என்று ஓங்கி அறைய , கட்டெறும்பு ஒன்று சுருண்டு டேபிளில் விழுந்து விலுக்
விலுக் என்று உதைத்து விட்டு செத்தது. சுந்தரி மெல்ல பார்த்தாள் அறை
யாருக்கு விழுந்தது என்று . ஊசிபோட்டுக்கொண்டவர் போல மாடசாமி தனது வலது தோள் பட்டையை தீவிரமாக தேய்த்து விட கடி
பட்ட இடம் பட்டாணி போல் வீங்கி சிவந்திருந்தது.
ஆமாம் மாடசாமியை ப்பாத்து இப்படி நடுங்கறி யே ---அப்படின்னா நீ ஏதோ தப்புப்பண்ணிருக்க என்று தனது கழுகு பட்டத்தை நிலைநாட்டினார் ராமசாமி .
இந்த ராமசாமி
சார் புட்டுப்புட்டு வெக்கிறாரே
ஒரே யமகிங்கரங்களா இருக்காங்களே என்று எண்ணிய படியே 'ஆஞ்சநேயா
' என்று
சப்தம் வெளிவராமல் வேண்டினாள்.
சரி, சுப்பிரமணி
என்ன சொன்னான் என்று ராமசாமி கேட்க , சுந்தரி ஒன்று
விடாமல் சொல்லி , பெரியவங்க வந்து ஆசீர்வாதம் சொன்னாதான் கல்யாணமாம், ஆடம்பரம், நகை
நட்டு, காசு
பணம் எதுவும் வேண்டாமாம்”.
அவனுக்கு பெரியவங்கனு யாரும்
இல்லை அம்மா தான் னு பி கே சார் சொன்னதாக ஞாபகம் என்று ராமசாமி சொல்ல, உடனே
சுந்தரி,
‘அதான்
சார் நீங்க, [ [ராமசாமி, மாடசாமி,] பி
கே சார் , கேப்ரியல்
சார் -4
பேரும் கண்டிப்பா வரணும் னு பையன் சொல்லறாரு- பொண்ணு போட்டோவை பிகே சாருக்கு அனுப்பிட்டு சண்டே அவங்க
[சுப்பிரமணி] அம்மாகிட்ட பேச சொல்லி போன் நம்பர் [ ...... ....] குடுத்துஇருக்காரு’” என்று நம்பரை காண்பித்தாள் -சுந்தரி.
கலயாணம் எந்த ஊர்ல னாலும்
[திருச்சி, சேலம், குண்டக்கல்”] உடனே மாடசாமி குறுக்கிட்டு ‘இன்னும் குண்டக்கல்
குண்டக்கல் னு சொல்லாம குண்டூர்னு சொல்லிப்பழகுங்க , யாராவது
மாப்பிளை எந்தூர்னா குண்டக்கல் னு வாயில வந்துரும் . சும்மா இருக்குற நேரத்துல
குண்டூர் குண்டூர் னு மனப்பாடம் பண்ணுங்க’ என்று மாடசாமி
கட்டளை பிறப்பித்தார். இனி மாடசாமி எது சொன்னாலும் கட்டளை தான் சுந்தரிக்கு..
அறைஞ்சுடாம விட்டாரே அதுவே பெரும் பாக்யம் என்று உணர்ந்தாள்.
சார் ஏதோ ஆர்வத்துல
தங்கச்சிக்கு கல்யாணம் னு கிளம்பிட்டேனே
தவிர என்ன ஏற்பாடு செய்யணும் எதுவுமே தெரியாது. மேலும் சடங்கு
சம்பிரதாயாம் , ஐயர்
, சமையல்
ஏற்பாடு எதுவும் தெரியாது , என்ன செய்யப்போறேனோ மலைப்பா இருக்கு. நீங்கல்லாம்
உதவி செஞ்சாதான் ஏதாவது முடியும். சரி ஊர்ல போய் ஏற்பாடு செய்யலாம்னா , அங்க
இன்னும் மோசம் , ஒண்ணுத்துக்கும்
லாயக்கில்லாத சொந்தக்காரங்க , சும்மா டேரா போட்டு தின்னுட்டு சொட்ட,சொள்ள
சொல்லி சண்டையை இழுத்துவிட்டுருவாங்க அதுனால வேற இடம் தான் சரிப்படும் என்றாள்.
ராமசாமி, “குண்டூர்
ல எனக்கு எதுவும் தெரியாது. திருச்சின்னா அதிகம் வேஸ்ட் ஆகாம ஏற்பாடு செய்யலாம்
முதல்ல ரொம்ப தெளிவா பேசிகிட்டு அப்புறம் ஆரம்பிச்சா நல்லது. பொண்ணு போட்டோவை
கொண்டு வாங்க பி கே சாருக்கு அனுப்பிட்டு
அப்புறம் சுப்பிரமணி அம்மாகிட்ட பேசுங்கோ எல்லாம் கரெக்ட்டா நடக்கும். மொதல்ல நல்ல நாள் பாத்து துவங்குங்கோ என்றார் ராமசாமி.
சுந்தரி தனக்கு நாள் பார்க்க தெரியாது என்று மாடசாமியிடம் ஜாடையாக தெரிவித்தாள் .
உடனே மாடசாமி ராமசாமியிடம் “டேய்
நாளைக்கு நீ வரும்போது ஒரு 4, 5 நல்ல நாள்
குறிச்சுக்கிட்டு வாடா உனக்கு தெரியாத நாளா?” என்று மாடசாமி சொல்ல சுந்தரி
வியந்து “சார் ஜோசியம் ஜாதகம் எல்லாம்
பாப்பாரா” என்று வாய் பிளந்து வியக்க. “அவங்க அய்யருங்க இந்த மாதிரி விஷயமெல்லாம் தெளிவா பாத்து
செய்வாங்க. நீங்க இனிமே அடிக்கடி அவங்க வீட்டுல போய் ஏற்பாடுகளுக்கு செய்ய
வேண்டியதை தெரிஞ்சுக்குங்க; லீவு போடாம ஈசியா முடிச்சுடலாம்; அவன்
[ராமசாமி] இறங்கிட்டான்னா எந்த வேலையும் 4, 5
நாள் ல சூப்பரா ரெடி பண்ணிருவான் , கவலைய விடுங்க” என்று மாடசாமி ஊக்கம் தர சுந்தரி க்கு குதூகலமும் , சஞ்சலமும்
தொற்றிக்கொண்டது
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment