Thursday, May 9, 2024

SALEM SUNDARI -12

 SALEM SUNDARI -12

சேலம் சுந்தரி-12

ஏய் நம்ப கஸ்தூரிரெங்கனை கேட்டா நெறைய தெரிஞ்சுக்கலாமே என்றார் மாடசாமி. ராமசாமி கண்கள் இருண்டு  முகம் சிவந்தார்

இனி மேலே படியுங்கள்

. அந்தக்கழுதைப்பயலைப்பத்திப்பேசாத ;அவன் ஒரு பைத்தியம் .நம்ம குண்டூர் போய் வந்து எத்தனை நாளாச்சு ஒரு போனாவது பண்றானா? செரியன் 11/2 நாள் லீவு இருந்தா வேகாதவவெய்யில்ல மெட்ராஸ் ல திரியறான் விஜி விஜி ன்னு ஏலம் போடறான். அந்த விஜி வீடு மாறி வேற எங்கயோ போய்ட்டா , அவ சொல்லவும் இல்ல ஒன்னும் இல்ல இவன் இந்த சனிக்கிழமைகள் ல பன்னி பிடிக்க தெருத்தெருவா ஓடுவானுகளே அதே மாதிரி ஓடறான். நமக்கு தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டிருக்கான். அதுக்காக சொல்லல்ல

நம்ம யாருக்கு எப்ப எப்படி உதவணும் னு அந்த சுப்பிரமணிக்கு இருக்குற அக்கறையும் கவனமும் இந்த 'விஜிப்பண்டார' த்துக்கு  இல்லவே இல்லை. போனவாரம் அவங்க அம்மா வந்தா.

 மாசம் 2000/-தான் தரான் , செலவு கட்டுப்படியாகல நீங்க கொஞ்சம் சொல்லி ஐந்நூறு 500/- தரச்சொல்லுங்கோ என்றார் நான் சொல்லிட்டேன் உங்க பையன் உங்கள மாதிரியே இங்க 500ம் ஆயிரமும் கொட்டியா கிடக்கு என்று சொல்லிடுவான். அம்மா நீங்க தான் உள்ளூர்லயே 2400/- வராதே னு கருடசேவை மாதிரி ரெண்டு கையையும் வெச்சுக்கிட்டு வெளியூருக்கு எதுக்கு வேலைக்குப்போகணும் னு ருத்ர தாண்டவம் ஆடினீங்களே. உங்க விஷயத்தை நீங்கதான் பாத்துக்கணும் னு கறாரா சொல்லி அனுப்பிட்டேன், அதுனால இவன் நமக்க்கு உதவ மாட்டான், சுப்பிரமணிக்கு என்ன செய்யணும்?  சொல்லு தலையை அடகு வெச்சாவது நம்ம ஹெல்ப் பண்ணலாம் பண்ணனும்;  சரி PK கிட்ட பேசறேன்; அம்மா நீங்க பக்கத்துலே இருங்க ஏதாவது கேட்டார்னா நீங்க தான் பதில் சொல்லணும்  PK க்கு போன் போட்டார் ராமசாமி.. மாடசாமியோசித்தார்  என்னாச்சு கரெ க்கு நல்லா தானே இருந்தான்  இவர் இவ்வளவு கடுப்புல இருக்காரு என்று ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார்.

PK கேட்ட விவரங்களை சுந்தரி சொல்ல சொல்ல, ராமாசாமி அதை தெரிவித்தார். 2 நாளில் நானே சொல்றேன் இல்லை நீங்க 2 நாள் கழித்து 2.30மணிக்கு பேசுங்க என்று PK ராமசாமியிடம் சொல்லிவிட்டு மாடசாமி சௌக்கியமா ? என்றார் இதோ இங்க இருக்கார் என்று ரா சா  சொல்ல, PK  யு ம் மாடசாமியும் 10 நிமிடம் பேசி மகிழ்ந்தனர்.

அன்று சித்ரா பௌர்ணமி , எனவே மதியம் சிம்பிள் வத்தக்குழம்பு, கீரை , கொத்துமல்லி ரசம் மாகாளி/ மாவடு, தயிர்  சாதம் , இரவுக்கு புளியோதரை, தேங்காய் சாதம், வத்தல் பகாளா பாத் . மாலை ஐட்டங்கள் மாலை 5.30 க்கு மாடசாமிக்கு 2 செட், சுந்தரிக்கு ஒரு செட் என்று PARCEL அம்ஜம் ஜமாய்த்திருக்க சுந்தரி அம்ஜத்தின் பரம ரசிகை ஆனாள் . வத்தல் குழம்பும் , கீரையும் இவ்வளவு ருசியாகவா? என்று மத்தியானமே வாய் பிளந்து ரசித்தாள் சுந்தரி.

சரி, இரவுக்கு வேண்டியதை பொட்டலம் போட்டு தந்த அம்புஜத்திடம் விடை பெற்று மீண்ட இருவரில் ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில்  ஏற்றி சுந்தரியை அனுப்பி விட்டு மாடசாமி பைக்கில் வீடு திரும்பினார்.

சுந்தரி ,அம்புஜம் ராமசாமியின் அமைதியான குடும்பம் குறித்து உள்ளூர பெரும் ஆச்சரியம் கொண்டாள் . மாடசாமி பெரும் திறமையும் ஆளுமையும் உள்ளவரே தான் , இவரைப்போய் தேவையில்லாமல் வாய் உளறி எதிரியாக்கி பெரும் ஆபத்தில் சிக்க இருந்தேனே ; யார் செய்த புண்ணியமோ நூலிழையில் தப்பித்தேன் [ஒரு வேளை இனிமேல் அறைந்தால் ? ஐயோ ஆஞ்சநேயா காப்பாற்று ] என்று பஸ்ஸில் வரும் வழியில் உள்ளூர நினைத்துக்கொண்டே வந்தாள்.

திங்கள் செவ்வாய் இரு தினங்கள் நகர பல்லைக் கடித்துக்கொண்டிருந்தாள் சுந்தரி. சுப்புரெத்தினத்திற்கு ஒரே ஏமாற்றம் , இந்த மாடசாமி 2 அறை விடாம அவளை ஆசுபத்திரிக்கு கூட்டிக்கிட்டு போய் வைத்தியம் பாத்துக்கிட்டு இருக்கிறார் . நம்ம ஏதாவது தெளிவு படுத்தலாம் னு பாத்தா, சும்மா இருங்க அவளுக்கு இன்னும் கலியாணமே ஆவல, நீங்க வேற ஏததோ சொல்றீங்கனு புலி  மாதிரி பாக்குறாரு; நமக்கு நேரமே சரியில்லை , இதுக்கு மேல பேசுனா அறை நமக்கு விழுந்துரும்போல இருக்கு என்று ஏமாற்றமாய் உணர்ந்தார்.. 

தொடரும்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...