DIRECTOR - TR RAMANNA
இயக்குனர் டி ஆர் ராமண்ணா
தஞ்சை மாவட்டம் இவரது பூர்விகம். தமிழ் சினிமாவில் நெடுங்கால அனுபவம் உள்ளவர்.
இயக்குனர் மாத்திரம் அல்ல, தயாரிப்பாளரும் கூட.. துணிச்சல் நிறைந்த தயாரிப்பாளர். தரமான பாடல்களை வழங்கிய
பெருமைக்குரியவர். ராமண்ணாவின் படங்களில் பாடல்கள் சிறப்பு
கவனம் பெறும் என அனைவரும் அறிந்ததே..
" உடலுக்கு உயிர் காவல்" மணப்பந்தல் [1961] கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி , குரல் பி பி ஸ்ரீனிவாஸ்
மிகுந்த தத்துவார்த்தப்பாடல்.. அதைப்பிழியும் இசை அதற்கான சோகம் இழையோடும்
குரல் என பல் பெருமைகள் கொண்ட தொகுப்பு இப்பாடல் . இரண்டு இணைப்புகள் ஒன்று பாடல் காட்சியின் தொகுப்பு
https://www.youtube.com/watch?v=VANydj_UrcY
UDALUKU UYIR KAAVAL MANAPPANDHAI 1961 KD
V R PBS
இன்னொன்று இசைக்கலைஞர் ஜி எஸ்
மணி கூறும் நேர்த்தியான கருத்து https://www.youtube.com/watch?v=sixJLiIDdz4
2 "அன்று வந்ததும் இதே நிலா" பெரிய இடத்துப்பெண் 1963
, கண்ணதாசன் வி ரா,
டி எம் எஸ் , பி சுசீலா
மிகப்பெரும் வெற்றிப்பாடல், 1963 இல் பியானோ அடித்தளத்தில் எழுப்பப்பட்ட இசைக்கோலம்;
அந்நாளைய மெல்லிசை மன்னர்களின் கற்பனையில் எழுந்த
இசைக்கூறுகளை கவனியுங்கள். மிக வளர்ந்துவிட்ட இந்நாளிலும் கூட இது போன்ற நாத
இனிமைகளையும், கருவிகளின்
நேர்த்தியான வாசிப்பும் கேட்பதரிது. முற்றிலும் மனித முயற்சி [manual effort ] என்பதை புரிந்துகொண்டால் அந்நாளைய கலைஞர்களின் பெருமை
விளங்கும் . பாடலைக்கேட்டு ரசிக்க இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=AnHfs0P_k8c
ANDRU VANDHADHUM PERIYA I PEN 1963 KD V R TMS PS
3 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை'
பணக்கார குடும்பம் [1964] , கண்ணதாசன் , வி, ரா,
பிசுசீலா , டி எம் எஸ் அந்நாளைய விஸ்வநாதனின் முத்திரையானஹோ ஹோ ஹோய் ஹோய் எவ்வளவு அழுத்தமாக பதிந்துள்ளது
அதுவும் பாடலின் வரிகள் இயல்பான நாண உணர்வின் பரிமாணமாக --கவிஞரின் யாப்பு
சொல்லவும் வேண்டுமோ? இசை அமைப்பில் , சொல் அடக்கி, மடக்கி ஒலிக்கும் மாறுபட்ட அணுகுமுறையை காண்பீர் கேட்டு மகிழ
இணைப்பு இதோ https://www.google.com/search?q=panakkara+kudumbam+songs+download&oq=PANAKKAARA+KUDUMBAM+&gs_lcrp=EgZjaHJvbWUqCwgEEAAYDRgTGIAEMgYIABBFGDkyBggBEEUYQDIGCAIQIxgnM
IDHUVARAI NEENGAL PANAKKAARA KUDUM1964
kd vr ps tms
4 "கண் போன போக்கிலே கால் போகலாமா "பணம் படைத்தவன் -[1965
] வாலி , வி, ரா,
டி எம் எஸ்
எழுதியதென்னவோ வாலி தான், ஆனால் பலரும் இது கண்ணதாசன் பாடல் என்றே நினைத்தது உண்டு. ;அவ்வளவு நேர்த்தியான சொல்லாடல் / கருத்தாழம். இசையின் நேர்த்தியினால் மேலும் ஏற்றம் பெற்ற
பாடல். இசைக்கூறுகளை கவனியுங்கள், மேற்கத்திய உத்திகள், மெலிய அக்கார்டியன் ஒலி மற்றும் மிடுக்கான பியானோ
மீட்டல்கள், கோரஸ் குரல்கள் என
அற்புத ஒலிக்களைவைகள் நிறைந்த பாடல்; மேற்கத்திய இசையின் மேன்மை/ மென்மை இரண்டையும் இயல்பாக
இழையவிட்ட எம் எஸ் வியின் ஆளுமைக்கு ஒரு அமைதியான சான்று இப்பாடல். கேட்டு மகிழ
இணைப்பு
https://www.google.com/search?q=kan+pona+pokkile+kaal+pogalama+video+sdong&oq=kan+pona+pokkile+kaal+pogalama+video+sdong+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIICAEQABgWGB7SA
kanpona pokkile panam padai 1965 vaali vr tms
5 ‘வெள்ளிக்கிழமை
விடியும் வேளை’ படம் “ நீ “ -1965, வாலி எம் எஸ் வி ,
பிசுசீலா குடும்பப்பாங்கான காட்சியும் பாடலும் ,
ஜெயலலிதா வின் நடனம்.நடிப்பு என பல அம்சங்கள் நிறைந்த படம்.
இப்பாடல் வெகு துடிப்பான அமைப்பில் அமைந்த ஒன்று. கவிஞர் வாலியின்
சொல்லாட்சி மிளிர்ந்த பாடல் , பொருள்பொதிந்த சொல்நேர்த்தி பாடலின் தனிச்சிறப்பு . இணைப்பிற்கு
https://www.google.com/search?q=vellikizhamai+vidiyum+velai++video+sdong&newwindow=1&sca_esv=f28e476185e14b90&sca_upv=1&sxsrf=ACQVn0-HTlNBEydK0YSjrjQ26otmp7_uRw%3A171469518
nee 1965 vellikkizhamai vaali msv ps
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment