Going about a work
பணியாற்றுதல்
எந்தப்பணி ஆயினும் ஒரு
குறைந்தபட்ச அடிப்படை ஏற்பாடுகள் செய்துகொள்ளாமல் யாரும் அந்தப்பணியை துவங்குதல்
கூடாது இது ஏன் ?
ஆரம்ப ஏற்பாடுகள் இன்றி துவங்கும் எந்தப்பணியும் மந்த கதியில் தான் இயங்க முடியும் ;இதனால் கால விரயம், பொருள் விரயம் [ பணம்/ பொருட்கள்] என்று பன்முக இழப்புகள் நிகழ்வது சர்வ நிச்சயம் .
போகப்போக ப்பார்த்துக்கொள்ளலலாம் என்ற நிலைப்பாடு ஒருசில செயல்களுக்கு சரியாக இருக்கக்கூடும் ;ஆனால் அனைத்துவகை பணிகளுக்கும் பொருந்தாது . மேலும் அடிப்படை திட்டமிடல் என்ற உதவியுடன் களம் இறங்கினால், மென்மேலும் என்னென்ன மாற்றங்கள் தேவைப்படும் என்பதை விரைவிலேயே கணித்து விடலாம்..
ஆரம்பதிட்டமிடல் என்பது தான் என்ன?
செய்யவேண்டிய பணி பற்றிய தெளிவு, கையிலிருக்கும் நேரம், எவ்வளவு விரைந்து செயலாற்ற வேண்டிவரும் , நமக்கு இருக்கும் ஆட்கள் பலம் போதுமானதா அன்றி அதிகமானதா போன்ற தகவல்கள், நிர்வாக தேவைகள் பற்றிய தெளிவான கருத்து கொண்டு இயக்கம் துவங்குவதே ஆரம்ப திட்டமிடல் என்பது.
நான் ஏதோ தேவையற்றை பொருளை வாதிடுவதாக எண்ண வேண்டாம்.
சற்று பின்னிக்கி உங்கள் நினைவை செலுத்துங்கள் . 1980 களில் தென் இந்தியாவில் சமையல் எரிவாயு விற்பனைக்கு வந்த கால கட்டம். எரிவாயு நிறுவனங்கள் இன்டேன் , பர்ஷேன் , இன்ன பிற துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பர் . அவற்றில் குக்கர் வைத்து சமையுங்கள் , தேவையான பொருட்களையும் அளவான தண்ணீரையும் வைத்து, நறுக்கிய காய்கறிகளை வெவ்வேறு தட்டில் வைத்து , குக்கரை அழுத்தமாக மூடி பிறகு அடுப்பை மூட்டினால் எரிபொருள் வீண் ஆவது தடுக்கப்படும். சிறிதளவு ஆவி தொடராக வெளியேறும் நிலையில் குக்கரின் மீது வெய்ட் போடவும்.
இதை வைத்துக்கொண்டு பெண்களுக்கு சமைக்கத்தெரியாது என்று எரிவாயு நிறுவனம் சொல்லிவிட்டதாக கொந்தளிக்கமுடியுமா? மாறாக எரிபொருள் சேமிப்பு குறித்த அடிப்படை அறிவுரை என்பது தான் உண்மை.
அது போலத்தான் ஆரம்ப ஏற்பாடு/ திட்டமிடல் இரண்டையும் முறையான செயலுக்கு சரியான முன்னேற்பாடு எனக்கொள்க.
திட்டமிடல் என்று வரும்போது தான் , என்னென்ன வேண்டும், மேற்கொண்டு எவை வேண்டும் என்ற பார்வையே துவங்குகிறது. இவற்றை கற்றுத்தரும் கல்வி முறைக்கு ப்பெயரே மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் [management studies ] என பெரும் பேராற்றல் உருவாக்கும் கல்வியாக வியந்து போற்றப்படுகிறது. அந்தக்கல்வி முறையின் அணுகுமுறைகளை கூர்ந்து கவனித்தால் , எதையும் ஆழ்ந்து யோசித்தல் என்ற வலுவான பண்பினை போதிக்கின்றனர். அவற்றுள்ளும் மிகச்சிறந்த ஆளுமைகளை உருவாக்கவல்ல நிறுவனங்களே இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் [IIM ] என்ற புகழ் பெற்ற நிறுவனங்களின் பொதுவான பெயர். இதுபோன்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் வகை நிறுவனங்கள் பலவேறு துறைகள் -சயன்ஸ், மேத்தமாட்டிக்ஸ், என்விரான்மென்டல் சயன்ஸ் , சோஷியாலஜி தொடர்பான மேம்பட்ட பயிற்சி வழங்கி பெரும் புகழ் பெற்றுள்ளன.
அதனால் என்ன என்கிறீர்களா? வேறொன்றுமில்லை நுணுக்கமான திட்டமிடல் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் எந்த முறையும் வெற்றி ஈட்டும் மற்றும் வெகு விரைவாக பல்நோக்கு பார்வைகளையும் , அவற்றுக்கான எதிர்கால வாய்ப்புகளையும் துருவி ஆராய்ந்து நல்ல வளர்ச்சிக்கு வித்திடும். எனவே தான் அவற்றில் நுழைவது எளிதன்று .
மேலும் , அந்த பார்வை கொண்டு பயணிக்க தலைப்படும் எவரும் போட்டிகளை எளிதிலெதிர்கொள்வர், மற்றும் எது குறித்தும் ஆழ்ந்து உணர்ந்து விவாதிக்கும் திறமையை சிறப்பாக வளர்த்துக்கொள்வர்.
சலுகைகள் / பாதுகாப்பு கேடயம் தேடி
காத்திராமல் நேரடியாக களம் காணும் மனோவலிமை அவர்களிடம் வேரூன்றிக்கிடப்பதைக்காணலாம்
எனவே பணியாற்றுதல் என்பது காலம் , களம் , தேவை அனைத்தையும் கணக்கில் கொண்டு தேவைகளை செவ்வனே நிறைவேற்றுதல் என்பதே.
ஆகவே முறையான பங்களிப்பே
வெற்றிக்கு உதவும்
நன்றி
அன்பன் ராமன்
நல்ல துவக்கம் நல்ல முடிவைத் தரும். பதறாத காரியம் சிதறாது என்பதுதான் இந்த கட்டுரையின் அடிநாதமாக ஆசிரியர் கூறுகிறார். ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்பாகவே திட்டமிடும் போது அதன் லாப நஷ்டங்களை ஓரளவு கணித்து தொடர ஏதுவாகும்.
ReplyDelete