Tuesday, May 7, 2024

T M SOUNDARARAJAN -3

 T M SOUNDARARAJAN -3

டி எம் சௌந்தரராஜன்- 3

இப்போது நாம் தமிழ்திரையின் முக்கியமான காலகட்டத்திற்குள் நுழைகிறோம். ஆம் 1960களில் திரைப்பாடல்கள் மாறுபட்ட கோணத்தில் சஞ்சரிக்க பல காரணிகள் வலுவாக உருவெடுத்த்ன . அவை புதிய தயாரிப்பு நிறுவனங்கள் , தொழில்நுட்ப பரிட்சைகளுக்கு ஊக்கம் தந்த இயக்குனர்கள், கவித்துவமும் தமிழிலக்கியமும் நன்கறிந்த கவிஞர்கள் , சமுக கதைகளை திரையில் காட்சிப்படுத்திதான் வெகுஜன ஆதரவை ஈர்க்க முடியும் என்ற கள யதார்த்தம். இவ்வனைத்தையும் சார்ந்து பரிமளிக்கக்கூடிய மாறுபட்ட இசைக்கோலமான "மெல்லிசை" என்ற ஒரு கலவை வகை இசை அமைப்பு;  அவற்றில் பெரும் தாக்கம் விளைவித்த கலவைதான் எனினும் கவலைதராத சுவையான பயணம் கொண்ட ஏ எம் ராஜா பாடல்கள், விஸ்வநாதன் -ராமமூர்த்தி வழங்கிய புதிய வகைப்பாடல்கள். இவை அனைத்தும் சங்கமித்த கால கட்டம் தான் தமிழ்த்திரை இசையின் பொற்காலம் என்று பெருமையுடன் பேசப்படுவது. அவற்றில் பெரும் தாக்கம் விளைவித்த படம் - "பாவ மன்னிப்பு" [1961]. நேர்த்தியான இசை நளின உணர்வுபாவங்கள், மென்மையான காதல் என்று பலரையும் ஈர்த்த படம்.

பாடல் "வந்த நாள் முதல்" [பாவ மன்னிப்பு -1961] கண்ணதாசன், வி, ரா , டி எம் எஸ் கம்பீரமான குரல் சைக்கிளில் பயணித்தபடி மனித வளர்ச்சி வீழ்ச்சி குறித்து எழுதப்பட்ட கவிதை. கேட்கவே வசீகரமான சொற்கள் ஆழ்ந்து அனுபவித்து பாடிய டி எம் எஸ்- சொல்லிக்கொண்டே போகலாம். கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=vandha+naal+mudhal+video+song&oq=vandha+naal+mudhal+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHC paava mannippu , 1961 KD, VR , TMS

அந்நாளைய மற்றுமோர் காவியம் "பாசமலர்" சாவித்ரியா சிவாஜி கணேசனா யாருக்கு முதலிடம் என்று இருவரும் போட்டிபோட்டு நடித்து இறுதியில் சோகத்துக்கே முதலிடம் என்று நெஞ்சைப்பிழிந்த படம். பாடல்கள் அனைத்தும் இன்றளவும் மங்காத புகழ் கொண்டு மிளிர்வன . கவித்துவத்திற்கு பஞ்சமே இல்லாத பாடல்கள் . இசையில் வேறு பரிமாணம் காட்டிய விஸ்வநாதன் ராமமூர்த்தி. அதில் ஒரு மென் உணர்வுப்பாடல் 

"மலர்களைப்போல் தங்கை' பாசமலர் [1962] கண்ணதாசன், விசு-ராமமூர்த்தி , குரல் டி எம் எஸ் .

ஆசையின் பாதையில் ஓடிய பெண்மையில் , அன்புடன் கால்களில் பணிந்திடக்காண்டான் "

பூ மணம் கண்டவள் பால் மணம் கொண்டாள் '  போன்ற சூழல் சார்ந்த வர்ணனை என்று கண்ணதாசன் காட்டிய பரிமாணங்களும் ஏன் பரிணாமங்களும் பின்னிப்பிணைந்த கவிதை யாப்புகள் . கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=malargalaippol+thangai+urangugiraal+video+song&oq=malargalaippol+thangai+urangugiraal+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKAB pasamalar1962  malargalaippol  KD , VR tms

கனமான உணர்வுகள் மிகுந்த அந்நாளில் கூட மென்மையான கேலி, கிண்டல் , கலாட்டா வம்பு  வகைப்பாடல்களும் அவ்வப்போது வந்தன. அவற்றில் ஒன்று இதோ

"பாரப்பா பழனியப்பா"   பெரிய இடத்துப்பெண் 1963 - கண்ணதாசன் , வி-ரா, குரல் டி எம் எஸ்

வெகு யதார்த்தமாய் ஒலித்த பாடல், நேர்த்தியான சொற்கள், பாவம் மற்றும்  கிண்டல் மிகுந்த அமைப்பில் பாடல் கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=paarappa+pazhaniyappa%2C+video+song&oq=paarappa+pazhaniyappa%2C+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQ

என்னை யாரென்று எண்ணி எண்ணி 'பாலும் பழமும் ' 1963] கண்ணதாசன் , வி ரா, குரல்கள் டி எம் எஸ் பி சுசிலா

விதியின் விளையாட்டில் நேர்ந்த பிரிவினால் துயருற்ற இருவர் வெளியே சொல்லிக்கொள்ள முடியாமல் தவித்துப்பாடும் வகைப்பாடல் . அந்நாளில் வெகு பிரபலம் மிகுந்த சோகமும் ஆழமும் கொண்ட பாடல் https://www.google.com/search?q=ennai+yaarendru+enni+enni+old+song+video&oq=ennai+yaarendru+enni+enni+old+song+video+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhG paalum pazhamum kd v r4 tms ps

அந்த மாப்பிள்ளை காதலிச்சான் -"பணம் படைத்தவன் " [1965] வாலி, வி-ரா, குரல்கள் பி சுசீலா, டி எம் எஸ்

அந்நாளில் காதல் வயப்பட்டவர்கள் தனிமையில் பாடுவதாக வந்த பாடல்களில் இதுவும் ஒன்று . நாயகி பாடிக்கொண்டே வர இடையில் ஓரிடத்தில் நாயகன் தொடர்வது ஒரு அமைப்பு . சுசீலா அற்புதமாகப்பாட, லயித்து ரசித்து எம் ஜியார் கூத்தாடி க்குதூகலிப்பதாக அமைந்த பாடல் இது ஒரு தெம்மாங்கு வகை மெட்டில் அசைந்து அசைந்து இயங்குவதை கேட்டால் புரியும்- எவ்வளவு நேர்த்தியாக இசைஅமைப்பும் , பாடும் முறையும் பிணைந்துள்ளன என்பது விளங்கும் கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=andha+maqppillai+kadhalichan+song+download&newwindow=1&sca_esv=e99de710a118b989&sca_upv=1&sxsrf=ACQVn09OtWi3sAY5LQByxNnm3U-FhobQxQ%3A1 panam padaiththavan

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...