Monday, May 6, 2024

SALEM SUNDARI -11

 SALEM SUNDARI -11

சேலம் சுந்தரி-11

அடுத்த 20 நிமிடத்தில் செக்ஷன் திரும்பிய மாடசாமி ஒரு சீட்டில் குறித்திருந்தார் ஞாயிறு காலை 6..45 மணி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் எதிரே மைசூர் காபி ஸ்டாலி ல் நில்லுங்கள். பிற விவரம் பின்னர்..

இது என்ன டெலிகிராப் மெஸேஜ் போலிருக்கே தெரியாத இடம் என்ன செய்வது ? சற்று தயங்கினாள் . சரி சீரங்கம் இந்த பகுதியில எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்  -அங்க விசாரிச்சுக்கலாம் என்று முடிவெடுத்தாள் .

சொன்ன நாள், நேரத்தில் சுந்தரி பஸ்ஸில் இருந்து இறங்கி சற்று நடந்ததும் மைசூர் காபி கடை தெரிந்தது 4 பேர் காப்பி சாப்பிட எதிர்வரிசையில் தேன் கூடு போல் கூட்டம்.. 6.46 மணி மாடசாமி தடதட என்று வந்து சுந்தரியின் எதிரில் பைக்கை நிறுத்தினார். ;வணக்கம் தெரிவித்து முடித்ததும் , அங்க என்ன சார் அவ்வளக்கூட்டம் ?  என்றாள் சுந்தரி .

அது காப்பிக்கடை என்றார் மாடசாமி  "சார் காப்பி சாப்பிடுவோமா சார்" என்றாள் சுந்தரி  .சரி வாங்க உண்மையான காப்பி சாப்பிடுவோம் என்று சுந்தரியையும் ஏற்றி க்கொண்டு வண்டி பாய்ந்தது. ஒரு காப்பி சாப்பிட இவ்வளவு தூரமா போவணும்? என்றாள் ."ஒரு காப்பி இல்ல உண்மையான காபி" என்று சொல்லிக்கொண்டே ராமசாமியின் வீட்டு முன் வண்டியை நிறுத்தினார் மாடசாமி..

வீடு மாதிரி இருக்கு ? -சுந்தரி.

மாதிரி இல்ல வீடே தான்- மாடசாமி.

."சண்டே ல தூக்கிக்கிட்டு இருக்கப்போறாங்க சார்"- என்றாள் சுந்தரி.  நீங்க வேற அவங்க அய்யருங்க 5.00 மணிக்கெல்லாம் எந்திருச்சு குளிச்சு கோயிலுக்கு போய் --எல்லாம் முடிச்சு இப்ப லஞ்ச் வேலையை துவங்குவாங்க.\; நம்மள மாதிரி தூங்கிக்கிட்டு இருக்க மாட்டாங்க. என் க்ளாஸ்மேட்  அவன் ;அந்த மேடம் ஒரு தெய்வீகத்தாய் அவங்க நட்பு எல்லாருக்கும் கிடைக்காது ;போகப்போக நீங்களே உணருவீங்க என்று சொல்லிக்கொண்டே கால் பெல்லை அழுத்த , டேய் வாடா என்று உள்ளிருந்து ராமசாமியின் குரல் . உள்ளே ஹால் பகுதியில் நுழைந்ததும் 'வாங்கோ ' என்று       பெண்  குரல்.  மாடசாமி பழங்கள் கொண்டு வந்திருந்தார் அவற்றை ராமசாமி இடம் தர , அம்ஜம்  "காபி "     சாப்படறீங்களா ?" என்றார் .

மாடசாமி " அதுக்குதானே உங்க வீட்டுக்கு அடிக்கடி வறோம் ".

சுந்தரி யை அறிமுகம் செய்து வைத்தார்   மாடசாமி

அம்ஜம் ஒரு சமையல் நிபுணர் என்பதை காபியின் சுவையே உணர்த்த, சுந்தரி சற்று மிரண்டு தான் போனாள் இவ்வளவு தரமான காப்பியா ? ஓட்டலில் ரூ 80-100 /- பில் போட்டுவிடுவான், ஐயோ எப்படி சமாளிக்கிறார்கள். என்று யோசித்தாள். மாமி காப்பி எப்படி செய்யணும் னு சொல்லித்தரு வீங்களா ? --சுந்தரி.

நல்ல காபி வேணும் னா காபி பில்டர் இருந்த தா தான் சரிப்படும் - அம்புஜம்  

3, 4 அளவுகளில் பில்டர் காண்பித்து தேவைக்கேற்ப வாங்கிக்கொண்டால், நல்லா காபிபோடலாம்,     காபி+  சிக்கரி, A B  வகைகள், பியூர் காபி, ப்ளன்ட் வகைகள்  என்று ஒரு மினி லெக்ச்சர் நடத்தி, சுந்தரி மீண்டும் கண்கள் இரண்டும் ஒரு விதமாய் நிலையில் உணர்ந்தாள். இவ்வளவு இருக்கா ? அம்மாடி என்றாள் .

 THIS IS RIDICULOUSLY SIMPLE என்று ஓரக்கண்ணால் பார்த்தாள் அம்ஜம். .சுந்தரி சற்று மிரண்டாள் -ஒரு காப்பிக்கு இவ்வளவு விவரமான தகவலா , பெரும் திறமையான குடும்பம் போலும் என்று உள்ளூர வியந்தாள் .. சுந்தரியை ராமசாமிக்கு அறிமுகம் செய்து, வந்த விஷயத்தை சொல்லி , பஞ்சாபகேசனிடம் சுப்பிரமணி பற்றிய விவரங்களை நீதான் பேச வேண்டும் என்று அந்தப்பொறுப்பை ராமசாமியை நிறைவேற்றித்தரச்சொன்னார் மாடசாமி. ஏய் நம்ப கஸ்தூரிரெங்கனை கேட்டா நெறைய தெரிஞ்சுக்கலாமே என்றார் மாடசாமி. ராமசாமி கண்கள் இருண்டு  முகம் சிவந்தார்

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...