TEACHER —TO PROCEED TOWARD SUCCESS -2
ஆசிரியர் -வெற்றி நோக்கி பயணிக்க -2
ஆசிரியப்பணி என்பது ஆயுட்கால
கட்டமைப்பு மற்றும் தொடர் மேம்பாடு, இவ்விரண்டையும் நீக்கி விட்டு வெற்றி
பெறுதல் என்பது கற்பனையே. பிற பணிகளில் இல்லாத நுணுக்கங்களும், குழப்பங்களும்
ஆசிரியப்பணியில் ஏராளம்.
பலரும் என்ன நினைக்கிறார்கள் ? ஆசிரியர் படித்து
முடித்து விட்டவர் . எனவே அவர் கற்பதற்கு எதுவும் இல்லை .கற்றதை கற்பித்தால்
போதுமானது. இது ஒரு பலவீனமான ஆதாரமற்ற நிலைப்பாடு.. ஒவ்வொரு வகை பாட தகவல்களும்
தொடர்ந்து மேம்பாடு அடைபவை ;எனவே 4, 5 ஆண்டுகளுக்கு
முன்னம் பயின்ற தகவல்கள் , இன்றைய சூழலில்
வெறும் அடிப்படைத்தகவல் [foundation]
என்ற அளவில் தான் பயன் படும். பின் வரும் தகவல் அனைத்து ஆசிரிய நிலைகளுக்கும்
பொருந்தும்.
ஒரு படி நிலையில் போதிக்கும் ஆசிரியர்
, குறைந்தது அதை விட
4 படிநிலைகளை கடந்த
ஞானம் பெற்றிருந்தால் மட்டுமே திறம்பட செம்மையாக போதிக்க இயலும். . 4, 5 ம் வகுப்பு
போதிப்பவர் குறைந்தது 10ம்
வகுப்பு தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். அப்போது தான் தயக்கமின்றி தகவல்களை
பிழை/குறை இரண்டும் இன்றி போதிய தன்னம்பிக்கையுடன் கற்றுத்தர இயலும்.
பலவகையான பணிகள் ,
பணியாளர்கள் வேலை பார்க்கும் இடங்களிலேயே முற்றாக செய்யப்படுவன. ஆசிரியப்பணி அவ்வாறானதல்ல. முற்றிலும் வேறுபட்டது. அலுவலகப்பணி
என்பது, காலை அலுவலகம் வந்த பின் கோப்பு தகவல்களைப் பொறுத்து நடவடிக்கை மேற்கொண்டால் போதுமானது .[ எனவே அவர்கள் பணி
அலுவல் நேரத்தில் மட்டுமே
நடக்கிறது ] ஆசிரியன் நீராவி எஞ்சின் போல நாளைய பணிக்கு இன்றே ஆயத்தப்பட
வேண்டும். பொது மக்களுக்கு இவை பற்றி எதுவும் தெரியாது. மேலும் ஒவ்வொரு நாளும் 2, 3 மாறுபட்ட
வகுப்புகள் மற்றும் அவற்றிற்கான பிரத்தியேக பாட தேவைகளு க்காக தயார் செய்து கொள்ள வேண்டும். வகுப்பறையில்
போய் படித்துவிட்டு சொல்லித்தர முடியாது.
சொல்லப்போனால் தேர்ந்த ஆசிரியன் தன்னை
கட்டமைக்க அதிகநேரம் செலவிடுவதும், அவற்றைகட்டவிழ்க்க
வெறும் 50நிமிடமோ 60 நிமிடமோ
எடுத்துக்கொண்டு மடை திறந்தவெள்ளமென
விரைந்து விளக்குவதும் இரண்டுமே நேர மேலாண்மை [TIME MANAGEMENT] என்பதில் அடங்கும்..
சுமார் ஒவ்வொருநாளும் 5 மணி நேரம் தான்
ஆசிரியர் வேலை பார்க்கிறார் என்று பேசுவோர், இதைப்புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வகுப்பையும் முறையாக
சந்தித்து செயலாற்ற வகுப்பு ஒன்றுக்கு 11/2 முதல் இரண்டு மணி
நேரம் அலுவலகத்திற்கு வெளியே வீட்டிலோ அறையிலோ செலவிடுவது குறித்து எவரும் நினைப்பது
உண்டா ? இவற்றை கருத்தில் கொள்வதே இல்லை . ஒரு ஆசிரியன்
முறையாக போதிக்க வேண்டுமெனில் அவன் கடிகாரத்தையும் காலண்டரையும் பார்த்துக்கொண்டு
செயல் பட முடியாது. மாறாக உண்மையான ஆசிரியன் ஒவ்வொரு நாளும் தன்னை தகவல் சார்ந்து
புதுப்பித்தல் மிக மிக அவசியம்.
UPDATING
இல்லாத எவரும் பெருமையும் பேராண்மையும் கொண்ட ஆசிரியனாக பரிமளிக்க இயலாது.. நான்
தெரிவித்துள்ள கருத்துகளை நன்றாக உள்வாங்கி ஆசிரியப்பணியின் சிறப்புகளை புரிந்து
கொள்வீர்.
சரி BA , B.Sc , B Com
தினசரி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் நன்கு தயார் செய்துகொள்ள
காலை மாலை இரவு என 5,6அல்லது 7 மணி நேரம் ஒதுக்கி
தன்னை அமைத்துக்கொள்ளாமல் வகுப்புகளை சந்தித்தால், வெகு விரைவில் கேலிப்பொருள் ஆவர். இது ஒரு புறம் இருக்க , M A , M Sc , M Com , M Phil போன்ற
நிலைகளில் செயல் பட விரிவான தகவல்,
தெளிவு மற்றும் ஆழ்ந்த அனுபவம்,
தகவல்களை தடங்கல் இன்றிப் பொழியும் செயல் வேகம் இவை மிகவும் இன்றியமையாதன.
தொடர்ந்து படித்து தன்னை
மேம்படுத்திக்கொள்ளும் எந்த ஆசிரியரும்,
வகுப்பறையில் தடுமாறுதல் முன்னுக்குப்பின் முரணாக பேசுதல் போன்ற குறைகளுடன்
இயங்குவது இல்லை. எனவே அவர் தம் வகுப்புகள் மாபெரும் விவாத அரங்குகள் போல பல்வேறு
தகவல்களை அலசி ஆராயும் களங்கள் . துடிப்பும் விறுவிறுப்பும் நிறைந்து மாணவரிடையே
பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவன. அவர்களின் செயல் பாடுகள் மாணவரிடையே பெரும்
வரவேற்பையையும் எதிர்பார்ப்பையும் தோற்றுவித்து பயில்வது ஒரு வேள்வி
என்ற பெரும் மதிப்பீட்டை ஏற்படுத்தவல்லன . இவர்கள் தான் செயல் மாதிரிகள் [ரோல்
மாடல்கள் ] எனில் மிகை அல்ல.
ஆசிரியரின் கட்டமைப்பில் இருக்கவேண்டிய கவனம்
ஆசிரியரின் கட்டமைப்பு என்பது சற்று
மாறுபட்டது. .
அது தனக்கு என்ன தெரியும் என்பதை விட
கற்பிக்க என்னென்ன தகவல்கள் தேவை என்ற ஒரு பட்டியல்அமைத்து அதன் படி செயலாற்றுதல்.
இந்தப்பட்டியல் வகுப்புக்கு வகுப்பு மாறுபடக்கூடும். அதாவது மாணவ மாணவியரின்
புரிதல் அடிப்படையில் கற்பித்தலின் தீவிரம் [intensity] மாறுபடும். அதற்கேற்ப தகவல் தொகுப்பு , அடிப்படைக்கூறுகள்
,அவை குறித்த
விளக்கங்கள் என்பனவற்றில் பல
தருணங்களில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுதே தேவையான மாறுதல்களை செய்துகொள்ள
வேண்டி வரலாம்..
அந்த மாறுதல்கள், அமைப்பையோ [structure] / தகவல் [details] விவரங்களையோ
கூட மாற்றி அடுக்குதல் [RE
-ORGANIZE செய்தல்]
நல்ல பலன் தரும். இதுபோன்ற உடனடி மாற்றங்கள் [INSTANT CHANGES] செய்யவேண்டுமெனில்
ஆசிரியன் அந்தபாடத்தொகுப்புக்குத்தேவையான அனைத்து விவரங்களையும் பறவையின் பார்வை
என்பது போல [BIRD'S EYE VIEW] எங்கும்
தரையிறங்கத்தெரிந்த விமானிபோல
கீழிறங்கவும் குழப்பமின்றி மீண்டும் மேலெடுத்துச்செல்லவும் எப்போதும் ஆயத்தமாக
இருப்பது நல்லது..
சகல தகவல்களையும் அவற்றின் முறையான
தொடர்புகளையும் விரல்நுனியில்
வைத்துக்கொள்ள பலவித நூலாசிரியர்கள் தரும் விளக்கங்களையும், அவர்களின் விவாத
நுட்பங்களையும் நன்றாக உள்வாங்கி இருத்தல் மிக மிக அவசியம். [இதற்குத்தான் ஒவ்வொரு
நிலையையும் [STAGE] விட 3, 4 படிகளாவது
அதிகம் பயின்று வந்தால் தான் சிறப்பாக பயிற்றுவிக்க இயலும். என்று,முன்னமே
வெவ்வேறு தருணங்களில் குறிப்பிட்டுள்ளேன் தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment