Monday, June 17, 2024

SALEM SUNDARI - 23

SALEM SUNDARI - 23

சேலம் சுந்தரி -23   

சென்ற பதிவில்….

அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

என்ன அதிசயம்  என்கிறீர்களா ?

 எதிர்பாராத நிகழ்வுகளை அதிசயம் /ஆச்சரியம் என்று சொல்வோமல்லவா? அதுதான் இது , தொடருங்கள்.

ஏய் நீ சிவகாமி இல்ல ? என்று எதிர்புறம் இருந்து பெண் குரல் .

இல்லிங்கம்மா --நான் விசாலாட்சி என்றாள் இந்தப்பெண்.

உன்னை இல்ல , உங்காக்காவைக்கேட்கிறேன் -எதிர் முனை.

ஒரு வினாடி நிசப்தம் , பின்னர் சுந்தரி ஒருமாதிரி குழம்பியமுகத்துடன் இருக்க , மீண்டும் எதிர்முனையிலிருந்து பி கே யின் மனைவி -நீ சிவகாமி தானே என்றதும் , சுந்தரி மெல்ல ஆமாம்மா  என்றாள்

இப்போது ராமசாமி வீட்டில் இருப்பவர்கள் விழிக்க , சுந்தரி பேசினாள் ; என் பெயர் சிவகாமசுந்தரி. நான்  9ம் வகுப்பு படிக்கும் போது வீட்டில் ஒரே இன்னல்கள். ஜோசியம் பாத்தோம் . ஜோசியர் ரெங்கநாதஐயர் இந்த பேரை மாத்திக்கோ னு சொல்லி , சுந்தரினு வெச்சுக்கோ னு சொன்னார். அதே போல மாத்திட்டு கவரிமெண்ட் கெஜட்டு லயும் ரெஜிஸ்டர் பண்ணிட்டோம். SSLC சர்டிபிகேட்ல கூட என் பேர்  சுந்தரி .னு தான் இருக்கு என்றாள்.

இப்போதும் சுந்தரி குழப்பம் தீராதவளாக –

"அம்மா நீங்க?  என்று இழுக்க-- என்னடி இது?  உமாவை மறந்து போச்சா உனக்கு? , நானும் சேலம் தான் -என்ன இப்பிடி முழிக்கிற என்றாள் உமாபஞ்சாபகேசன்..

ஐயோ---- ஐயர் வீட்டு உமா அம்மா இல்ல நீங்க, நல்லா  இருக்கீங்களா என்று அழுது கைகூப்பிய படியே , மன்னிச்சிருங்கம்மா உங்களைப்பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு , சட்டுனு ஞாபகம் வரல்ல, நன்றி கெட்டவனு தப்பா நெனைச்சுராதீங்கம்மா என்று கை கூப்பினாள் .இப்போது அமைதி, சற்று குழப்பம், குதூகலம் எல்லாம் வியாபித்த வீடியோ அரங்கம் ஆயிற்று.

நீ மறந்தாலும் நான் உன்னை அடையாளம் கண்டுபிடிச்சேன் பார் என்றார் உமா பி கே... நல்லாருக்கீங்களாம்மா .  நல்லாருக்கீங்களாம்மா .நல்லாருக்கீங்களாம்மா .என்று வேறெதுவும் பேச இயலாமல் அழுதுகொண்டே குழந்தைபோல் உமாவைப்பார்த்து கேட்டு க்கொண்டே இருந்தாள் சுந்தரி.

பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ என்பது எவ்வளவு மகோன்னத கருத்து,

சுந்தரி,  உமா குடும்பத்தினரின் பிரிவுக்குப்பின் உண்மையிலேயே ஆதரவின்றி தவித்ததை சொல்லமுடியாமல் அழுகையை அடக்கிக்கொண்டு பேசினாள் . அம்மா நீங்க குண்டூருக்கு வந்து 15-16 வருஷம் இருக்காது? என்றாள் சுந்தரி

18 வருஷம் முடிஞ்சாச்சு.

இப்போது மீண்டும் குதூகலம் ஏற்படுத்த முயன்ற உமா இதபாரு  சிவகாமி [சுந்தரி] கல்யாண மாப்பிளை எங்க வீட்டு பையன் , அதுனால கவனமா கல்யாணத்தை ஏற்பாடு பண்ணு என்று நகைச்சுவையாக சொன்னார்.

உங்களைப்போன்ற சம்மந்தம் யாருக்கும்மா கசக்கும்? என்றாள் சுந்தரி.

இத பாருங்கோ, பொண்ணு கிளியாட்டம் இருக்கு. அவளை சந்தோஷமா வெச்சுக்கணும் அதை இப்பவே தெளிவா சொல்லிடறோம் என்று ஒரே போடாகப்போட்டாள் அம்புஜம். .

ஒரு குறையும் இருக்காது கவலையே வேண்டாம் என்று சொல்லி உமா பி கே , “சுப்பு உன்னை நம்பித்தான் கமிட் பண்ணிருக்கேன் அதை எப்போதும் காப்பாத்தணும்சரியா என்றார்.

அம்மா உங்க சொல்ல நான் என்னைக்காவது  மீறி இருக்கேனா? இனியும் அப்படியே தாம்மா இருப்பேன் என்றான்.

போறுமா மாமி? மாப்பிள்ளை உத்தரவாதம் குடுத்துவிட்டார் என்றார் உமா.

டேய் சுப்பு ,போப்பா பஜ்ஜி சொஜ்ஜி இல்லாம ஒரு பெண் பார்த்தல் இன்னிக்கு தான் நான் பாக்கிறேன். என்றார் பி கே.

ஏன் இல்லாம என்று ஒரு  பாத்திரத்தில் சொஜ்ஜி, இன்னொன்றில் சுமார் 25-30 வெவ்வேறு வகை பஜ்ஜி என்று கேமரா முன்னே காட்டினாள் அம்புஜம்.

விடீயோவிலேயே சாப்புட்டுக்க வேண்டியது தான் என்றார் பி கே.

அதெல்லாம் ஒண்ணும் இல்ல அதே சொஜ்ஜியும் பஜ்ஜியும் இங்கேயும் நான் வெச்சிருக்கேன் என்று எதிர் சீர் போல காட்டினாள் உமா பிகே..

சரி அங்கங்கே சொஜ்ஜி பஜ்ஜி ஆகட்டும் என்றாள் அம்ஜம்

அம்மா உங்க போன் நம்பர் குடுக்கலாம்னா குடுங்கம்மா என்று உமாவிடம்  கேட்டாள் சிவகாமி என்ற சுந்தரி .

இந்தா நோட் பண்ணிக்கோ என்று நிதானமாக சொல்ல சொல்ல தனது போனில் பதிந்து கொண்டாள் சுந்தரி.  

முடிக்கும் முன் சார் ஒருநிமிஷம் பொண்ணுக்கு அம்மான் பேசறார் சார் என்று பி கே இடம் ராமசாமி சொல்ல, போனில் மாடசாமி பிகே இடம் நலம் விசாரித்தார் . மொத்தத்தில் ஒரே மகிழ்ச்சியாக நடந்தேறியது விசாலாட்சியை பெண் பார்க்கும் படலம் . சுப்பிரமணியின் தாய் உட்பட அனைவரும் இரு தரப்பினரும் பரஸ்பரம் கை  கூப்பி விடை பெற்றனர்.

எவ்வளவு பெரிய மனிதர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் என்று எண்ணிய படி  கண் மூடி நெக்குருக  ஆஞ்சநேயருக்கு நன்றி சொன்னாள் [சிவகாம] சுந்தரி

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...