Monday, June 17, 2024

LIE

 LIE

பொய்

சென்ற சில பதிவுகளில் "ஏமாற்றுப்பேர்வழிகள்" குறித்து,  நிகழ்ந்த சில சம்பவங்கள் அடிப்படையில் பார்த்து வந்தோம் . இந்த நிகழ்வுகளின் அடிநாதம் என்ன ?

வேறென்ன?  பொய் தான். ஏமாற்றுவோர் பயன்படுத்தும் கருவி பொய் தான். அதை கோர்வையாக உணர்ச்சிகரமாக சொல்லத்தெரிந்தவர்கள் எமாற்றுதலை "வாழ்வியல்" கலையாக பயின்றுள்ளோர் என்பதே யதார்த்தம்

அதன் உச்சக்கட்டம் தான்-அரசியல் வழிமுறை. அது ஏன் உச்சகட்டம் ?

அது-- ஒரு நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் ஏக காலத்தில் அதை தருகிறேன், இதை செய்வேன் , அந்த விலையை குறைப்பேன் என்று  வலையை விரிபபான் இந்த வரியை நீக்குவேன் என்று மாயவார்த்தை பேசுவான்

ஏன் எனில் வரியை நீக்குவது புலியின் உடலில் உள்ள வரியை அகற்றுவதை விட கடினமானது..

கூட்டம் கூட்டமாக ஏமாறுவது ஒரு மினிமாமாங்கமாகவே அரங்கேறுதல் கண்கூடு. அது என்ன மினி மாமாங்கம் ? மாமாமாங்கம் 12 ஆண்டுக்கொருமுறை வருவது.   இது 5 ஆண்டுக்கு ஒருமுறை என்பதால் மினி என்று அடையாளப்படுத்துகிறேன். 

இப்போது ஒரு கேள்வி ஏமாற்றுகிறானா ? ஏமாறுகிறோமா ? மனசாட்சிக்கு விரோதமில்லாமல், சொன்னால் ஏமாறுகிறோம் என்பதே சரி.

அரசியல் வாக்குறுதி என்பது பசப்பு வார்த்தைகளே. முதுகெலும்பை முறிக்கும் வரிச்சுமை வந்தால் வரியைக்குறைப்போம் னு சொன்னாங்க நம்பி ஓட்டுப் போட்டேன் , என்று ஈன சசுரத்தில் முனகும் ஏமாளிகள் அநேகம். இதில் வேடிக்கை  என்ன வெனில், சிறிதும் அவமானம் கொள்ளாத செயல் நமது அணுகு முறைகள்

 மீண்டும் மீண்டும் வாக்குறுதி --ஓட்டுக்கு பணம் என்ற பெயரில் வாழ்வை அடகு வைக்கும் எண்ணற்ற மூடர்களால் ஒட்டுமொத்த சமுதாயமும் வஞ்சிக்கப்படுவதை பற்றி சிந்தனையே இன்றி "பொய்யை" மீண்டும் மீண்டும் [அதாவது ஒரே பொய்யை] நம்பி ஹி ஹி இந்தவாட்டி செஞ்சிருவாங்க என்று வழிவதைப்பார்க்க வேண்டுமே/

சிரிப்பதா அழுவதா?

ஒன்று நிச்சயம் அவன் சிரிக்க நாம் அழ என்பதே கள யதார்த்தம். பொய் சொல்லுதல் கொலை நிகர்த்த பாவம் என்று உணராத வரை இந்த சமுதாயம் ஒரு பைத்தியக்கார பாசறை என்பதே பொருத்தமான பெயராக இருக்கும்.

ஏனென்றால் பைத்தியங்களுக்கு தான் நாம் என்ன செய்கின்றோம் --என்று ஒரு நாளும் புரியாது.

அவர்களில் சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் கூரையை . கொளுத்திவிட்டு ஐயா ஐயா என்று குதூகலிப்பர்.

தகாதவர்க்கு ஓட்டளித்தல் கூரையை கொளுத்தும் செயலுக்கு ஈடானது தான். ஆக, நமது வாழ்வின் தலையெழுத்தை   .  பொய்யும்,  பொய்யை நம்பும் பைத்தியங்களும்   தீர்மானிப்பது தான் என பல முறை பார்த்துவிட்டோம்.

இது ஏன் நிகழ்கிறது எனில் பொய்யின்  விபரீதத்தை நம் மக்கள் சரியாக உணர வில்லை என்பதே.

பொய் எந்த ஒரு இடத்திலும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அமைதிக்கும் ஆரோக்கியத்திற்கும் அடித்தளம். பொய்யை எப்படியாவது கொடிய நஞ்சு என்பதை பலருக்கும் விளக்க வேண்டும் 

பொய் குறித்த தனி மனித அளவீடுகளும்  மதிப்பீடுகளும் தெளிவாக நிறுவப்பட வேண்டும் என்றால் ஒரு அமைதிப்புரட்சி நி கழ வேண்டும் . பொய் என்பது நோய் போன்றது , பலருக்கும் தொற்றிக்கொள்ளும் , ஆரோக்கியத்தை குலைத்து , வாழ்வை ஓர் போராட்டமாக மாற்றிவிடும். நோய் தொடர்ந்து உடலில் குடியேறும்போது , வாழ்வே போராட்டமாக வடிவெடுப்பது இயல்பு தானே? எனவே நற்பண்புகளோடு ஒவ்வொரு குழந்தையிடமும், பொய் குறித்த தெளிவு ஏற்பட பல முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இல்லையெனில் பலரும் பஞ்சம், பட்டினி, பற்றாக் குறை என்று  போராட வேண்டியது தான் .

வளரும்

அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...