Tuesday, June 18, 2024

T M SOUNDARARAJAN-9

 T M SOUNDARARAJAN-9

டி எம் சௌந்தரராஜன் -9

குயிலாக நான் இருந்தென்ன [செல்வ மகள் -1967] வாலி, எம் எஸ் வி,  டி எம் எஸ், சுசீலா

கேட்கவே புதுமையாய் அமைந்த தாளத்தில் ஜனித்த / பயணித்த பாடல் .

எம் எஸ் வி அவர்களின் தனித்துவம் 90% மெலடி எனும் மனம் கவரும் ராக அமைப்பே என்பது திரை இசை ரசிகர்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளும் உண்மை. மிகவும் நுணுக்கமாகப்பார்த்தால், எந்த குறிப்பிட்ட ராக அமைப்புக்குள்ளும் சிக்காமல் நளினமாக தப்பித்து வெளியேறும் நுட்பம் அறிந்தவர் எம் எஸ் வி.  

அது அவருக்கு மட்டும் எப்படி கட்டுப்பட்டது என்றால் அவர் முழு பாடலையும் ராக வரைமுறைக்குள் அடைப்பதற்கு பதிலாக ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் பாவம் என்ற உணர்விற்கும் மெருகேற்றும் ராக சாயல்களை க்களப்படுத்தி ஒவ்வொரு பாடலிலும் வியப்பினை  ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம்..

இந்த விளக்கத்தை உணர 

"குயிலாக நான் இருந்தென்ன" பாடல் பெரும் வாய்ப்பாக இருப்பதை உணரலாம். ஒவ்வொரு சொல் ஒலிப்பதையும் அதே சொல் பிற பகுதிகளில் வெவ்வேறு அமைப்புகளில் பாடப்பட்டுள்ளதையும் கூர்ந்து கவனியுங்கள்.

 பாடகர்கள் நடிப்போரின்[ஜெய்சங்கர் -ராஜஸ்ரீ ] குரல் எல்லைக்குள் பாடி அந்தந்த கலைஞர்களே பாடுவதுபோன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதை நன்கு கவனியுங்கள். பாடலின் இசை /கருவிகளின் ஒலி நயம்  இயைந்து பயணிப்பது ஆரம்பத்திலேயே துவங்கி "நான் எம் எஸ் வியின் தயாரிப்பு" என பறைசாற்றுவதை உணரலாம். ரசிக்க இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=kuyilaaga+nan+irundhenna&oq=kuyilaaga+nan+irundhenna+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRifBTIHCAIQIRifBdIBCTE2NjE4ajBqNKgCALACAQ&sourceid=chrome& selva magalvaali msv tms ps

அவன் நினைத்தானா  [செல்வ மகள் -1967] வாலி எம் எஸ் வி , டி எம் எஸ்

சோகத்தைப்பிழிய பியானோவை இயக்க தயங்காதவர் எம் எஸ் வி. அவரைப்பொறுத்தவரை பாவம் குன்றாமல் பாடினால் பிற எதையும் எந்த சூழலுக்குள்ளும் பொறுத்திவிடலாம் எனும் நம்பிக்கையும் ஆளுமையும் பாடலை தூக்கி நிறுத்தும் என செய்து காட்டியவர்.. பாடல் முழுவதிலும், நாயகனின் சோகத்தை பியானோவே பேசும் வகை இசைக்குறியீடுகள்.

டி எம் எஸ் இப்போது ஜெய்சங்கரின் சோகத்தைவெளிப்படுத்துகிறார்.  பாடல், காட்சியை தெளிவாக விளக்குகிறது ;இது போன்ற இசைத்தொகுப்புகள் சரித்திர நிகழ்வுகள் ஆகி விட்டன சமகாலத்தில் இல்லவே இல்லை..சினிமாவில் இசை என்றோ மறைந்துவிட்டது எனில் பிழையோ மிகையோ அல்ல.  பாடலை கேட்டு உணர இணைப்பு 

https://www.google.com/search?q=avan+ninaiththaana+idhu+nadakkumenru&oq=avan+ninaiththaana+idhu+nadakkumenru+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTE3OTYwajBqNKgCALACAQ&sourceid=chro AVAN NINAITHTHAANA TNS MSV PIANO

. ஆம் எந்த வகைப்பாடலையும் சிறப்பாகக்கையாளும் டி எம் எஸ் எப்படி எல்லாம் தன்னை தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டுள்ளார் என்பதை நன்கு கவனியுங்கள். எப்போதுமே எந்த பாடலையும் நடிக நடிகையரின் பங்களிப்பாக மட்டுமே பலர் பேசுகின்றனர். அனால் உண்மையில் பேசப்படவேண்டியவர்கள் நமது கண்களுக்கு தெரியாமல் திரை மறைவில் இயங்கிய எண்ணற்ற கலைஞர்கள். இந்த புரிதலோடு பாடல்களை அணுகினால் , உழைப்பின் அளவும் பெருமையும் விளங்கும். அப்படிப்பட்ட ஒரு பாடல் தான்

பாடுவோர் பாடினால் [கண்ணன் என் காதலன் =1968] வாலி, மெல்லிசை மன்னர் எம் எஸ் வி - டி எம் எஸ்

இப்பாடல் அந்நாளில் பெரிதும் பேசப்பட்டது ஏனெனில் மாறுபட்டஇசைத்தொகுப்பு, பியானோவுக்கு தாளத்துணை மிருதங்கமும் தபாலாவும் -எவரும் நினைத்துப்பார்த்திருப்பார்களா? மேற்கத்திய பியானோ வுக்கு தாள துணை இந்திய மிருதங்கம்/ தபலா ; நம்நாட்டு குழல் ஒலிக்கும் போது இணைவதோ ஆப்ரிக்க தாளக்கருவி போங்கோ ;ஆனால் கேட்பதற்கு வெகு நளினம் மேலும் வினாடிகூட ஓய்வின்றி ஒலிக்கும் இசைக்கோர்வைகள் . இந்த ஜாலவித்தையில் எம் எஸ்வி ஒரு ஜாம்பவான் .

மேலும் பியானோவின் நளினத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மெட்டில் எவ்வளவு நுணுக்கங்கள் இழையோடியுள்ளன? டி எம் எஸ்ஸின் கம்பீர நடையும், பாடலின் சொல்லாட்சியும்-- என்று கேட்டாலும் மங்காத புதுமையின் வசீகரம். துரதிர்ஷ்ட வசமாக பாடல் இப்போது ஆடியோ அமைப்பில் மாத்திரம் கிடைக்கிறது ,

எனினும் கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=UbxEeGWQhoM

கண்ணன் எந்தன் காதலன் [கண்ணன் என்காதலன்-1968]  வாலி, எம் எஸ் விஸ்வநாதன் . டி ஈம எஸ் பி சுசீலா

முற்றிலும் மாறுபட்ட எம் எஸ் வி யை காணலாம் .

ஆம் பாடலின் போக்கே வேறு ஒரு உருவில் தெரிகிறது. ராகம் மெல்ல தவழ , குரல் கள் குழைய, கருவிகள் மெல்ல ஊர்ந்து வர -இது என்ன எம் எஸ் வி யின் இசையா என கேட்கத்தோன்றும்.

சந்தேகமில்லாமல் எம் எஸ் வி வழங்கிய நளினமான ரொமான்டிக் டூயட் . பாருங்கள் 1968 இல் அவர் களப்படுத்திய இசை ஜாலம் , ஓசை நயம் , மென்மையாக துணை நிற்கும் கிட்டார் ; பாடலில் தாளம் என்பது கூட மீட்டல் உத்தியாகவே தொடர என்னை பலவாறாக சிந்திக்க வைக்கிறது.

எதுவும் அறியாமல், பாடலை கேட்டால் இளையராஜா வை நினைக்கத்தோன்றும். இந்த இசைக்கூறுனை பின்னவரின் வரவுக்கு 8 ஆண்டுகள் முன்னமே எம்ஜியார் -ஜெயலலிதா ஜோடி  க்கு உருவாக்கியவர் மெல்லிசை மன்னர்.

இசையும் எனக்கு இசையும் என்று ஒரு பாடலில் வரும் அது எம் எஸ் விக்கு முற்றாக பொருந்தும்.  பாடலின் மென்மையான அசைவுகளில் திளைக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=4XT7BibKTI8 KANNAN EN KAADHALAN VAALI MSV TMS PS

மின்மினியை கண் மணியாய் [[கண்ணன் என் காதலன்-1968] 

வாலி , எம் எஸ் வி, டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி

அந்த நாட்களில் தினமும் ஒலித்தபாடல். பாடல் மெல்ல பயணிக்க , இசை துடித்து பீறிட கருவிகள் கட்டிய ஜாலம் இப்பாடல் . ஜெயலலிதாவுக்கு ஈஸ்வரி பாடிய பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை.அவ்வரிசையில் இதுவும் ஒன்று. வாலியும் தன்  பங்குக்கு சொல்லாட்சியை மிளிரவைத்த காலம் இப்பாடல். என்று கேட்டாலும் புதிதே என்றுதோன்றும் ராகமும் இசையும் தனிச்சிறப்பு . கேட்டு மகிழ  இணைப்பு

https://www.youtube.com/watch?v=CIAixyRAAbE MINMINIYAI KAN MANIYAI TMS LRE

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...