Tuesday, July 30, 2024

ADOLESCENCE

ADOLESCENCE        

இடை நிலைப்பருவம் 

இந்த ஆங்கிலச்சொல் 'வளரும் குழந்தைகளின்' இடை நிலை பருவத்தை குறிப்பது. அதாவது சிறுவன்/சிறுமி நிலை கடந்த , இன்னமும் இளைஞன் /யுவதி நிலையை எட்டாத வயதில் இருக்கும் நபர்கள் அடோலஸ்ஸன்ஸ் வகையை சேர்ந்தோர் எனலாம். சிலர் இதை சுமார் 13 முதல் 17 வயது வரை உள்ள பருவ நிலை எனவும் விவரிக்கின்றனர். அதே சமயம் 13 -19 வயது வரை உள்ள நிலையினர் டீன் ஏஜ் பருவத்தினர் [ஆங்கில வரிசைப்படி எண்ஙகள் தர்ட்டின் முதல் நைன்டீன் வரை டீன் என்ற இறுதி கொண்டதால் டீன் ஏஜ் பருவத்தினர்எனப்படுகின்ற்னர்.

. எதுவாயினும் உயிரியல், உளவியல், வளரியல் [developmental science] எந்த அடிப்படையில் பார்த்தாலும் இது மிகவும் மென்மையான வாழ்க்கைப்பகுதி. அறிவியல் ரீதியாக மென்மையான பகுதி ஆனால் கள நிலவரம் வேறாக இருப்பதை உணரலாம். அவை குறித்த சில விவரங்களை புரிந்து கொள்ள முயலுவோம்.

இந்த இடைப்பருவம் உடல் ரீதகியாக உள்ளூர எண்ணற்ற மாற்றங்களை அரங்கேற்றும் கால கட்டம் . சுருக்கமாக சொல்வதானால் உடலில் ஹார்மோன்கள் சுரப்பதும் அவற்றிற்கிடையே விகிதங்கள் மாறுவதும் இயல்பாகவே நடை பெறுகின்றன. அவற்றின் தாக்கம் வலுவானது மட்டுமல்ல அது அந்தந்த நபரின் மனதில் பலவித உணர்வுகளை தோற்றுவிக்கும்.. சிலர் தங்களின் உடல் மாற்றம் குறித்து கவலை கொள்வர். ஐயோ என்ன இது? நான் ஏன் இப்படி ஆய்க்கொண்டிருக்கிறேன் என்று இருபாலரும் திகைப்பது சகஜம். அடிப்படையில் பளிங்கு போல் இருந்த சருமம், மேடுபள்ளங்கள், சதைத்திரட்டுகள், இரண்டாம் பாலியல் மாறுபாடுகள் சார்ந்த மாற்றங்கள் என ஒன்றொன்றாக உடலை ஆக்கிரமிக்க மனம் அச்சம் கொள்கிறது..

அதாவது பிறரிடமிருந்து நான் வேறுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்றே நினைக்கின்றனர் -குறிப்பாக பெண்கள். இவை அனைத்தும் இயல்பாக ஏற்படும் நியாயமான மாற்றங்களே.

ஏதோ விரும்பத்தகாத நிகழ்வுகள் போல் வெட்கம் பீறிட பெண்கள் நாணம் கொள்வது புரிந்துகொள்ளக்கூடியதே.

இதற்கிணையான மாற்றங்களை ஆண் குழந்தைகளும் சந்திக்கின்றனர். அவர்களைப்பொறுத்தவரை திடீரென உயரம் கூடுகிறது, உடல் வலுப்பெறுகிறது , இரண்டாம் நிலை மாற்றமாக மீசை/ தாடி அரும்புதல் இவற்றை உணருகிறான். அனால் அவனே விரும்பாத ஒன்று குரல் மாற்றம் ஆம் திடீரென்று குரல் கொரகொர வென மாறி பின்னர் அவனுக்கு அமைய வேண்டிய குரலைப்பெறுகிறான்.

அதற்கிடையில் வீட்டில் உள்ள ஊரார் அவனை கேலி பேசுவது அறியாமையின் உச்சம். டேய் நீ நிஜம்மாவே கழுதை மாதிரி தாண்டா பேசறே என்று வீட்டில் உள்ளோர் ஏளனம் செய்வது நிச்சயம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். .

அதே பருவ நிலையில் நமக்கும் இவை நிகழ்ந்ததை எப்படி மறந்தீர்கள்? அது ஏன் நமக்கு ஒரு கேலிப்பொருள் ஆகிறது? வேறென்ன மூடர்கள் பிறரை கேலிசெய்ய லோ லோ வென்று அலைவது தான் காரணம். இயற்கை மாற்றங்களை கேலி செய்யும் எவரும் மரியாதைக்குரியவர்களே அல்லர்.

 இதை ஏன் ஓங்கி ஒலிக்கிறேன் என்றால். இந்த இடைப்பருவத்துக்குழந்தை [ஆணோ /பெண்ணோ] உள்ளூர பயந்து பிறரிடம் இருந்து வேறு படுவது/ அந்நியப்படுவது போல கலைக்கமைடைந்த நிலையில் இருக்கும் . அவர்களுக்கு தேவை அரவணைப்பும் ஆறுதலும் தான்.

யாரிடம் கேட்பது என பரிதவிக்கும் நிலை.

நல்ல வேளையாக ஒரு சில ஆசிரியைகள்,  பெண் குழந்தைகளை அரவணைத்து வழி நடத்தி உடல் ரீதியான வேற்றுமைகளை புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வைக்கிறார்கள். பையன்களுக்கு இந்த குழப்பம் சிறிதுகாலமே மேலும், அவர்களுக்கு பலவற்றை அறிந்துகொள்ள பல வாய்ப்புகள் உள்ளன. இவ்வனைத்தையும் தாண்டி ஒரு பெரும் போராட்டம் உள்ளூர நிகழ்ந்து கொண்டிருதான் இருக்கிறது இப்பருவத்தில் தொடக்கப்பகுதியில்

உரிய பருவத்தில் இயற்கையாகவே ஹார்மோன்கள் சுரப்பது நிகழும்

இரு ஹார்மோன்கள் பேசப்படுகின்றன அவை ஈஸ்ட்ரோஜன் [ESTROGEN][பெண்களுக்கானது] , [ANDROGEN]அன்ட்ரொஜென் [ஆண்களுக்கு] .இவ்விரண்டும் ஒவ்வொரு உடலில் தோன்றுகின்றன .எனினு மெல்லமெல்ல இந்த விகிதம் [ratio ] மாறுகின்றது. ஆண்களுக்கு அன்ட்ரொஜென்[ [டெஸ்டோஸ்டீரோன்] அதிகளவிலும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகளவிலும் என்ற விகிதாச்சாரம் அமையும் போதுஉடலில்  முறையான மாற்றங்கள் ஏற்படும் 

ஆனால், இந்த ஹார்மோன்களின் இயக்கம் பலவித கோப தாப நிலைகள், சீற்றம் கொள்ளுதல், எவரையும் எதிர்த்துப்பேசுதல், எதற்கும் அனுசரித்துப்போகாமல் சண்டித்தனம் செய்தல் போன்ற மூர்க்க குணங்கள் தலை தூக்குவதைக்காணலாம்இதுதான்,பெற்றோர்கள் புரிந்துகொண்டு சிறார்களை மெல்ல புரியவைத்து வழி நடத்த வேண்டிய கால கட்டம்.

அப்போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. வீட்டில் தங்காமல் நட்பு வட்டங்களை நாடும் இயல்பு அதிகரிக்கும். இது தான், இக்கட்டான தருணம்.

நண்பர்கள் யாவர் என மிக கவனமாக கண்காணியுங்கள்.. விரும்பத்தகாத நட்புகளை வளர விடாமல் உரிய பாதுகாப்புஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.. இப்போது செல்போன், கவர்ச்சி புத்தகங்கள், வீடியோ காட்சிகள் பரவலாக மாணவர்களிடையே புழங்குகின்றன. இந்த ஒரு 14-15 மநாதங்கள் மிகவும் கவனமாக கையாண்டால் பெரும் இன்னல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்..

இயர்கையாகவே பரீட்சித்துப்பார்க்கும் ஆர்வம் மேலிடும் படி, தூண்டும் ஹார்மோன் யுத்தம்.--உடலையும் மனதையும் ஆட்டிப்படைக்கும். [எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் என்ற "கணவனே கண் கண்ட தெய்வம் படப் பாடல் ] இந்த மனநிலை யை விளக்குகிறது.

முள்ளில் விழுந்த மெல்லிய ஆடை போல வெகு கவனமாக இடைநிலை பருவத்தினரை கையாளுதல் அவசியம்   .

மேலும் நான் சீக்கிரம் வளர்ந்து பெரியவன் /பெரியவள் ஆகிவிடவேண்டும் என்ற உந்துதல் இடைநிலைபருவத்தில் மிகுந்து மேம்பட மேம்பட அவர்களின்  கவனம் முழுவதும் உடல் சார்ந்ததாகவே இருக்கும் . இதை மென்மையாக, அரவணைப்பாக கையாண்டால் நல்வழியும் மேம்பாடும் கைகூடும்.      கோபம், ஏளனம், உடல்சார்ந்த மிமிக்ரி தவிர்ப்பீர்.

இயற்க்கை நிலையை கடக்க செயற்கை அணுகுமுறைகள் இடையூறு உண்டாக்கும்.

கருத்துகள் தவறெனில் மன்னிப்பீர்.

 நன்றி                                                                             அன்பன் ராமன்   

No comments:

Post a Comment

Of KINGS AND CABBAGES

  Of KINGS AND CABBAGES கோஸ் / முட்டை கோஸ் In response to the previous blog post of mine on “Curry leaf” my revered friend Dr. KANNA...