Sunday, July 28, 2024

SALEM SUNDARI-35

  SALEM SUNDARI-35

சேலம் சுந்தரி-35

தற்செயலாக தவறு செய்தவர்கள், தவறை நினைத்து வருந்துவார்கள் -தண்டனையை நினைத்து அல்ல. சுந்தரியும் அப்படித்தான் தான் செய்ததற்கு வருந்துகிறாள், எவர் மீதும் துளியும் வெறுப்போ காழ்ப்போ இல்லை. தவறு தனது எனவே, வருந்தி  இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் எந்த கவலையையும் கடந்து போகலாம் என்று உணர்ந்தாள். ஏற்கனவே, ஆஞ்சநேய பக்தை, இப்போது அனவரதமும் மனம் முழுவதும் ஆஞ்சநேயனும், நினைவில் அன்றாட பணிகளும், தங்கையின் திருமண ஏற்பாடுகளும் திட்டமிடுதலும் என்று வாழ்கிறாள்.

நேற்று வரை புலம்பிய சுந்தரி, இன்று தெளிவு கொண்டாள். அவளை கண்டிக்க வேண்டிய அனைவரும் தெளிவாக பேசிவிட, மாடசாமி நீ [என் மருமாள்] கௌரி போல் இருக்கிறாய் அதனாலெனக்கு உன் மீது வன்மமோ கோபமோ இல்லை, உனக்கு தண்டனை தரும் வல்லமை இறைவனுக்கு மட்டுமே உண்டு என்று பாவத்தின் நிழல் கூட தன் மீது படாதபடி ஒதுங்கிக்கொண்டார்.

விருப்பு, வெறுப்பு இன்றி, கேப்ரியல், ராமசாமி, சுப்பு ரெத்தினம் ஆகியோர், தத்தம் நிலைப்பாட்டை விளக்கி விட்டனர். ஆனால், ஒவ்வொருவரும்.  முறையாக, சொல்ல வேண்டியதை சொல்லி, அறிவுரைத்தனர். HR அதிகாரி மிகுந்த வருத்தமுற்றார் என கேப்ரியல் சார் சொன்னார்; எவ்வளவு சுயநலம் கொண்டு புகார் சொல்லக்கிளம்பி விட்டேன் என்று சஞ்சலப்பட்டாள். இது- இப்படித்தான் பயணிக்கும்.

காலப்போக்கில் தான், மனம் அமைதி கொள்ளும். அதனால் ஜங்க்ஷன் புத்தக நிலையத்தில் "ஆஞ்சநேய ஸ்தோத்ரம்" வாங்கிக்கொண்டாள்.. காலை மாலை தவறாது மனமுருக படிக்கிறாள் .மனவேதனை குறைந்து ஒரு சீரான முறையில் வாழவேண்டும் என முடிவு செய்து ஆஞ்சனேயனை தனது மனம் எங்கும் இருத்திக்கொண்டாள்.. திடீரென, இவர்கள் அனைவரும் தனது அண்ணன்மார்கள் என்பதாக உணர்ந்தாள்.

மாடசாமியிடம் எப்படியாவது மன்னிப்பு வாங்க வேண்டும்;அதற்கு ஒரே வழி எந்த தவறும் அவசரமும் குறுக்கிடாமல் பிறர் மனம் அறிந்து பேச வேண்டும். 

ஒரு விதத்தில் ராமசாமி சார் பரவாயில்லை; நாம் ஏதாவது தவறு செய்வதாகத்தெரிந்தாலே பாய்ந்து குதறிவிடுவார்.   [எங்களுக்கு யாருக்காவது  ஆஞ்சநேயர் என்று பேர் வைத்திருக்கிறாயா? என்கிறார். என்ன முணுமுணுக்கிறாய் கொஞ்சம் பொறு என்று நான் சொன்னால் அதில் அர்த்தசம் இருக்கும் என்று சொல்லி விசாலாட்சியின் போட்டோவை மறுநாளே குண்டூர் பி கே சார் வசம் சேர்த்தார்; போஸ்டில் அனுப்பி போய்ச்சேரவிட்டால் என்ன செய்வாய் என்று கண்டித்தாரே அதனால் அவருக்கு ஒத்து வரவில்லை என்றால் கை மேல் பலன்   கிடைத்திடும் -அதனால் அவரிடம் நமது பாவச்சுமை ரொம்ப ஏறாது -உடனே வசமாக கொடுத்துவிடுகிறார்.] 

சுப்புரெத்தினம் சாரும் அப்படித்தான் ;அவருக்கு உடன்பாடு இல்லை என்றால் கடுகடுப்பார் , குரலை உயர்த்துவார். கொஞ்சமும் கூசாமல் மாடசாமிசாரிடம் அவளுக்கு வகுரு பொடச்சுக்கிட்டு இருக்கு என்று சொன்னதாக பிற பெண்கள் சொன்னார்களே.

அவருக்கு ஒளித்து மறைத்து பேசத்தெரியாது. தனக்கே வகுரு உருட்டுது னு தயங்காமல் வெளிப்படையாக சொல்லி மாடசாமிசாரிடம் உதவி கேட்டாரே.

இந்த மாடசாமி சார் கோபமே இருந்தால் கூட எளிதாக கடந்து போகிறார்.  நீங்க, வாங்க, போங்க என்று பேச்சிலும் மரியாதை குறையாமல் பேசுகிறார்.

மன்னிப்பு கேட்டால், நான் யார் உங்களை மன்னிக்க?  என்கிறாரே [அப்படியானால் நீ யார் என் மீது புகார் சொல்ல?  என்று சொல்லாமல் சொல்கிறார் என்பது தானே சரி]. . இந்த மர மண்டைக்கு  அதைக்கூட புரிந்து கொள்ள தெரியவில்லை.  ஏதாவது கேட்டல், நீ கௌரி மாதிரி இருக்கிறாய் என்று அனுதாபம் காட்டி என்னை எளிதாக கூனிக்குறுக வைத்துவிடுகிறார். அந்த கௌரி மிகச்சிறப்பாக பெயர் வாங்கி இருப்பதாக யூனிவர்சிட்டி சுஜாதா மேடம் [சுபத்திரா என்பது சுந்தரியின் மனதில் பதியவில்லை] நான் கௌரி மாதிரி பேரா வாங்கி இருக்கிறேன்?

ஆனாலும், நீ கௌரி மாதிரி என்று அப்பப்ப சொல்லி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார். ஆனானப்பட்ட PK சார் உள்பட பலரும் மாடசாமி சாரிடம் வருந்தி மன்னிப்பு கேட்டதாக கேப்ரியல் சார் சொன்னாரே. அப்படியானால், நான் எவ்வளவு மன்னிப்பு கேட்கவேண்டும்?

மனிதர் அசைந்துகொடுக்க மாட்டேன் என்கிறார். உயர் பதவியில் இருந்தாலும் பெண்களிடம் ஹி ஹீ ஹீ என்று ஜொள் விடும் ஆண்கள் மத்தியில் மாடசாமி சார் இப்படி ஒரு ஆஞ்சநேய அவதாரம்,-   பராக்ரமத்திலும் நுண் அறிவிலும் , விரைந்து செயல் படுவதிலும்  என்று ஒரு மா மனிதர்.. அவரையும் இறைவன் போல வழிபடுவது தவிர எனக்கு மீட்சியே இல்லை என்று ஆஞ்சநேய ஸ்தோத்ரத்தில் ஆழ்ந்து மூழ்கினாள்.  .

தொடரும்                  அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...