Monday, July 1, 2024

SALEM SUNDARI-27

 SALEM SUNDARI-27      

சேலம் சுந்தரி -27

இந்த 2 சாமிகளும் பயங்கர நண்பர்கள் மட்டும் அல்ல சரியான பரோபகாரிகள்;

எதை சொன்னாலும் கணப்பொழுதில் எப்படி செய்வதென தயக்கம் இல்லாமல் முடிவெடுக்கிறார்கள். காலையில் திடீரென்று டேய் கணபதி என்று அழைத்து மாலையே கல்யாண மண்டபத்தை பிடித்துவிட்டாரே!  இதெல்லாம் அவர்களுக்கு நடப்பது போல் பிறர்க்கு நடக்குமா?. சரி இனிமேல் லீவு நாட்களை வீணாக்காமல் ராமசாமி சார் வீட்டுக்கு போய் நமக்கு வேண்டியதை செய்து தரும்படி மிகுந்த பணிவோடு கேட்டால் தான் நல்லபடி நடக்கும் . ஆனால் நானாக போனால் மாடசாமி சார உதாசீனம் செய்வதுபோல் அசிங்க மாக இருக்கும் . தப்பித்தவறி கூட கவனக்குறைவாக ஏதாவது செய்து அவர் மனம் வேதனைப்படுவது இனிமேல் என்னால் நிகழக்கூடாது

“ஆஞ்சநேயா காப்பாற்று என்று கண்மூடி பிரார்த்தனை செய்தாள்.

"நீ --என்னை விடப்போறதில்லை; பரவா இல்லை நல்ல கார்யம் நடக்கத்தானே, ஆஞ்சநேயனைத்தேடுகிறாய். கவலைப்படாதே உங்க வீட்டு மாப்பிள்ளை அதான் சுப்பிரமணி பயங்கர ஆஞ்சநேய பக்தன்; அவங்க பாஸ் பிகே -அவர் அவர் மனைவி,  .சுப்புவின் நண்பன் கஸ்தூரிரெங்கன் எல்லாருமே ஆஞ்சநேய பக்தர்கள் தான்; ஆக இப்ப நான் தான் இந்தக்கூட்டத்துக்கு கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரணும். ஆனா ஒண்ணு அவ்வளவு பேரும் உழைப்பில் முன்னேறி வந்தவங்க அதுனால நியாயமான எதுவும் மளமள ன்னு நடக்கும் . தைரியமா இரு என்று சுந்தரியின் காதில் ஆஞ்சநேய த்வனி ஒலித்தது.

உற்சாகம் மேலிட மாடசாமிக்கு போன் செய்தாள். மறுமுனை ஹலோ என்று பெண்குரல். 

மாடசாமி சார் இருக்காரா?  . .மறு முனையில் நீங்க ? நான் அவங்க செக்ஷன் staff என்றாள்.

மறுமுனை "அவன் வெளியே போயிருக்கான் போனை வெச்சுட்டுப்போயிட்டான், ஒரு 1/4 மணிநேரம் கழிச்சு போன் பண்ணுங்க இல்லைனா யார் பேசறீங்கன்னு சொன்னா  அவன் கிட்ட சொல்லிடறேன். என்றார் [மாடசாமியின் அக்கா [கௌரியின் தாய் ].

என் பேரு "சுந்தரி" ங்கம்மா .என்று சொல்லி விட்டு சுந்தரி தொடர்ந்து பேசினாள் "சார் ஒய்ப் இருக்காங்களா , மரியாதைக்கு 2 வார்த்தை பேசி வணக்கம் சொல்லிடறேன்". என்றாள் .

அவன் கல்யாணமே செய்துக்காம எனக்கும் என் மகளுக்கும் தொண்டு செஞ்சே வாழ்க்கையை ஓட்டிட்டான் மா  

அவனை மாதிரி ஒரு உபகாரிய பாக்கறது ரொம்ப கஷ்டம். இதெல்லாம் சொன்னாலே கோவப்படுவான் . நீங்க அவன் ஒய்ப் பத்தி கேட்டபின்ன என்னால மூடி மறைச்சு சொல்ல தெரியல்ல. எங்களுக்காகவே  வாழறவன நன்றி சொல்றமுறையில தான் பேசறேன். அவன் என் தம்பி ஆனா செயல் அண்ணன், தகப்பன், பாட்டன் எல்லாம் அவனே தான். 

இதெல்லாம் அவன் கிட்ட சொல்லாதீங்க ரொம்ப வேதனைப்படுவான் ஆனா ஹெல்ப் னு யார் கேட்டாலும் முத ஆளா நின்னு செய்வான். உங்களுக்கே இதெல்லாம் தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும் சொல்றேன் தப்பா நினைக்காதீங்க என்றார் மாடசாமியின் அக்கா.

இதோ,  மாடசாமி வந்துவிட்டார்.

அவனே வந்துட்டான் பேசுங்க என்று மாடசாமியிடம் போனை தந்தார் அக்கா.

ஹலோ, யாரு என்றார் மா சா. சார் நான் சுந்தரி பேசறேன்

என்னம்மா ?

உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது நான் இந்த உதவிக்கெல்லாம் எப்படி ஈடு கட்டப்போறேன் எதுவுமே புரியல்ல சார். முதல் என் நன்றியை ஏத்துக்குங்க சார் . மேலும் தொடர்ந்தாள். மேற்கொண்டு ஏற்பாடுகள் கல்யாண விவரங்கள் எல்லாம் ராமசாமி  சார் கிட்ட  பேசணும் அவர் வீட்டுக்கு போய் பேச கொஞ்சம் தயக்கமா இருக்கு. நீங்க கூட வந்தீங்கன்னா கொஞ்சம் தயக்கம் குறையும். நான் பஸ்ல வந்துடறேன் . அவங்க வீட்டுக்கு நீங்க வந்தா எனக்கு தெம்பா இருக்கும் . உங்க டயத்துக்கு நான் அட்ஜஸ்ட்  ஆகி வரேன். உங்களுக்கு இடைஞ்சல் இல்லாம போய் வரலாம். இதை, நீங்க எனக்காக செஞ்சு குடுத்தா நான் ரொம்ப பாக்கியமா நெனப்பேன். என்றாள் சுந்தரி.

மாடசாமி 'பாக்கியம், சௌபாக்கியம் , குசேலோபாக்யானம் எல்லாம் இருக்கட்டும் . பொதுவா 2ம் சனிக்கிழமை , ஞாயிறு இதுலென்ன முன்னாலேயே சொல்லிட்டு போனா அவங்களுக்கும் இடைஞ்சலா இருக்காது. எப்பன்னு சொன்னீங்கன்னா நான் ராமசாமிக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்.”

சரி சார் இந்த சண்டே காலைல 10.00 மணி சுமார் னு சொல்லி பிக்ஸ் பண்ணிடுங்க. ரொம்ப நன்றி சார் என்றாள் சுந்தரி. 

தொடரும்                           அன்பன் ராமன்

 

 

 

 

No comments:

Post a Comment

Of KINGS AND CABBAGES

  Of KINGS AND CABBAGES கோஸ் / முட்டை கோஸ் In response to the previous blog post of mine on “Curry leaf” my revered friend Dr. KANNA...