T M SOUNDARARAJAN-11
டி எம் சௌந்தரராஜன் - 11
கன்னி நதியோரம் [நீர்க்குமிழி- 1965] ஆலங்குடி சோமு -இசை வி. குமார் -குரல்கள் டி எம் எஸ், பி சுசீலா
எத்தனையோ நடிகர்களுக்கு குரல்வழங்கிய பாடகர்கள் இருவரும், திரு நாகேஷ், ஜெயந்தி இருவருக்கும் பின்னணி பாடியுள்ளனர். ஏதாவது குறை காண இயலுமா? எவ்வளவு அனுசரணையாக பாடலைப்பாடியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, நாகேஷ் காட்டியுள்ள நடன அசைவு, உடல் இயக்கம் எதிலும் ஒரு நேர்த்தி -எப்போது 1965இல் [சுமார் 3 ஆண்டுகளில் அவர் காட்டிய பிரமிப்பு]
தமிழ் திரை விமரிசகர்கள் அந்த நாளில் எதைப்பார்த்தார்கள் ? ஏனோ தானோ என்று விமரிசனம். இது போன்ற காட்சிகளை பிரபலப்படுத்தாமல் விட்டு விட்ட விமரிசகர்கள், பின்னாளில் வேறொரு நடனக்கலைஞரை வானளாவாப்புகழ்ந்தார்கள்.
பழைய படங்களில் நடனம் ஒரு பொருட்டாகவே கருதப்படவே இல்லை அன்று பரதநாட்டியம் மட்டுமே நடனம் என்ற அங்கீகாரமும் உரிமமும் பெற்றிருந்தது. எத்துணையோ அற்புத நடன அசைவுகளை பேசாமலே, கவிழ்த்த பெருமை பழைய விமரிசகர்களுக்கு உண்டு. நல்ல வேளையாக சுப்புடு என்றொருவர் விஸ்வரூபம் எடுத்து பல விமரிசர்களை வாய் பேச முடியாமல் விளாசினார் -குறிப்பாக இசைக்கு ;அதுவே நடனத்துக்கும் ஒரு பார்வையை பெற்றுத்தந்தது.. போகட்டும் இப்பாடலில் நாகேஷ் மரண வாயிலில் சிகிச்சையில் உள்ளவர் . வேறொருவர் சரியாக ஆடவில்லை, என்று நாகேஷ் உள்ளே புகுந்து புறப்படுகிறார். டாக்டர்கள் மேஜர் மற்றும் சௌகார் திகைத்து நடுங்குவது உணர்த்தப்பட்டுள்ளது. காட்சிக்கு இணைப்பு
கல்யாண சாப்பா டு போடவா [மேஜர் சந்திரகாந்த்-1966] வாலி, வி. குமார், டி எம் எஸ்
மீண்டும், நாகேஷுக்கு டி எம் எஸ்ஸின் குரல். நேர்த்தியாக பொருந்தியுள்ளது. நாகேஷின் நடிப்பாற்றலை காட்சிப்படுத்திய பல பாடல்களில், இதுவும் பேசப்படவேண்டிய பகுதி. தங்கைக்கு மண ம் முடிக்க விரும்பும் அண்ணனின் பாசமும் குதூகலமும் பொங்கும் தையற்கலைஞராக நாகேஷ் உதவியாளராக சிறுவன்- சிறப்பான அபிநயம் காட்டுகிறார்
கா ட்சியின் இணைப்பு இதோ
https://www.google.com/search?q=kalyaana+sappaadu+podavaa++video+song&newwindow=1&sca_esv=2f7f4dd99b3b670f&sca_upv=1&sxsrf=ADLYWIIFyiofkjcuaCeoWicSxZe8pHaEDQ%3A1719707036284&ei=n kalyana sappaadu major
chandrakanth tms
முத்துகுளிக்கவாரீயளா [அனுபவி ராஜா அனுபவி -1967] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன்
, குரல்கள் டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி
பட்டி தொட்டி எங்கும் பட்டையைக்கிளப்பிய பாடல். கண்ணதாசனின் சொல்லாடலில் நெல்லை-தூத்துக்குடி மணம்
கமழுகிறது. "வாரீயளா"
[=வரீங்களா
] ஆளான [வயது வந்த] பொண்ணுக [பெண்கள் ] பாக்குவெக்கும் முன்னமே [பரிசம் போடும் முன் ] என்னவென்னு சொல்லுவாஹ [என்னென்று
சொல்வார்கள் ]
ஏளா [ஏனடி ] முத்தம்மா என்று மண் மணம் சொல்லாடலில். அதற்கேற்ற துள்ளி ஓடும் பாடல் இசை காட்சி. நாகேஷ்-மனோரமா இயல்பாக ஓடி ஆடும் கிராமீய பாடல் ஆடல் ஊடல்
எல்லார் ஈஸ்வரி பாடுவதில் ஒரு ராட்ஷசி
"மாமா" என்று கூவி எப்படி உசுப்பேற்றுகிறார் பாடலில்
காத்தவராயனை ஆரியமாலா காதலிச்ச மாதிரியில்லா? என்று அவன் கேட்க
அக்கோளாறு பண்ணாமே [இடக்கு பண்ணாமல்] கிட்டே வந்து கொஞ்சுங்கோ சினி மா வில்
கொஞ்சுறாப்பல என்று தன்
விருப்பத்தை வெளியிடும் [ஈஸ்வரியின் குரலில்]
மனோரமா
/ ஜிஞ்ஜின்னா
க்கடி
ஜிஞ்ஜின்னா
க்கடி
பாத்தீஹ
ள்ளே
நீங்களும்
[பார்த்தீர்களே
-என்று
மரியாதை
மாறாமல்]
என்று
அருமையான
பாடல்
ஹிந்தியிலும் இதே துவக்கம் பெற்ற-- அகிலஇந்தியப்புகழ் கொண்ட பாடல். இணைப்பு
https://www.google.com/search?q=muthukulika+vareeyalaa+video+song&oq=muthukulika+vareeyalaa+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAHSAQkxNjgxMmowa Muthukulikka vareeyalaa tms lre
மூன்று தமிழ் தோன்றியதும் [ பிள்ளையோ பிள்ளை - 1972 ] வாலி, எம் எஸ் வி, பி சுசீலா
டி
எம்
எஸ்
தமிழ் திரை வரலாற்றில் அரசியல் நுழைந்த நிகழ்வு-இப்படம் எனில் உண்மை. ஆனால் இங்கே நமது பார்வை, இசை குரல் , குரல் பொருத்தம் இவை குறித்தே. அவ்வகையில் ஒரு வெற்றிப்பாடல் டி எம் எஸ் குரல் மு.க முத்துவுக்கு, பி எஸ் குரல் லக்ஷ்மிக்கு . பாடல்ஆனால் பிரபலம்.
பாடலுக்கு இணைப்பு
,
https://www.google.com/search?q=moondry+thamizh+thondriyadhum+song+video+song&newwindow=1&sca_esv=2f7f4dd99b3b670f&sca_upv=1&sxsrf=ADLYWILU3DPtlarnCX_3kTBxFL4F6Ow6_Q%3A1719706902
moondru thamizh pillaiyo pillai ps tms
மற்றுமோர் வெற்றிப்பாடல்
காதலின் பொன் வீதியில் [பூக்காரி
1973] , பஞ்சு அருணாசலம் எம் எஸ் வி, குரல்கள் எஸ் ஜானகி, டி எம் எஸ்
அதியற்புதமான இசை நுணுக்கங்கள் நிறைந்த
பாடல். பாடலில் வெண்ணிற ஆடை நிர்மலாவின் பங்களிப்பு சிறப்பானது. விறுவிறுப்பான இசை, துள்ளி ஆடும் பெண் நடனம். ஆள்நடமிட்டமில்லாத பகுதியில் படப்பிடிப்பு. வெளிப்புறக்காட்சிக்குரிய
, கண் கவர் சோலைகளோ, மலைகளோ நீரோடையோ இல்லை. அசட்டு துணிச்சலில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பாடல் நல்ல அமைப்பில் உள்ளது. இதிலும் டி
எம் எஸ்ஸின் பங்களிப்பும் ஜானகியின் பங்களிப்பும்
நன்கு புலப்படுவதை உணரலாம். .
இணைப்பு
https://www.google.com/search?q=kadhalin+pon+veedhiyil+song+video+song&newwindow=1&sca_esv=2f7f4dd99b3b670f&sca_upv=1&sxsrf=ADLYWIJQ8F8sIau8jc-2YTSm9ib0-R4iYw%3A1719706522432&ei=mq
kadhalin pon veedhiyil pookkaari tms sj
நன்றி அன்பன்
ராமன்
No comments:
Post a Comment