Thursday, August 29, 2024

MUSIC DIRECTOR T CHALAPATHI RAO

 MUSIC DIRECTOR  T CHALAPATHI RAO           

சலபதி ராவ்

 

தமிழ் திரையில் நல்ல பாடல்களை வழங்கிய பெருமை இவருக்கும் உண்டு. ஆயின் இவர்நர்கமாக வீனஸ் நிறுவனத்தின் படங்களுக்கே இசை அமைத்ததாக தோன்றுகிறது. ஒருக்கால் இயக்குனர் பிரகாஷ் ராவின் உறவினர் என்பதால் அவர் இயக்கிய படங்களில் பணி புரிந்தாரோ என்னவோ, சரியாகத்தெரியவில்லை. எதுவாயினும் இவர் குறித்த இன்றைய பதிவுகள் அநேகமாக இயக்குனர் ஸ்ரீதர் எழுதிய கதை களே என்பதே முக்கியம் . .

ஆயினும் வெகு நேர்த்தியான இசைக்கோலங்களை வழங்கி தனது ஆளுமையை நிரூபித்துள்ளார் திரு சலபதி ராவ் அவர்கள்       

தேன் உண்ணும் வண்டு [அமர தீபம்  1956]  கவிஞர் : காமாட்சி சுந்தரம் , சலபதி ராவ் , எம் ராஜா பி சுசீலா

அந்தக்காலத்தைய மெகா ஹிட் பாடல் இது ; முணுமுணு க் காத நபர்களே இல்லை என்னும் படி பிரபலம் . மிகவும் கம்பீரமான டூயட் ஆனால் குரலில் மேன்மை. வெகு நயம் . திரும்பத்திரும்ப கேட்கச்சொல்லும் வகை ட்யூன் , இசைக்கருவிகளின் குழைவும் , அவ்வப்போது வெட்டிப்படுத்தலும் அந்நாளில் புதுமை [உதாரண ம் காற்றினிலே   என்று நிறுத்தி மீண்டும் தென்றல் காற்றினிலே என்று தொடரும் அமைப்பு. சொல்லிக்கொண்டே போகலாம் கேட்டு ரசிக்க இணைப்பு இதோ                     

AMARA DEEPAM

https://www.youtube.com/watch?v=nPtdMNdX1iQ then unnum AMR, PS KP KAAMAATCHI SUNDARAM. TC RAO1956

அதே படத்தில் அமைந்த மற்றுமோர் துள்ளல் நடனப்பாடல்

பச்சைக்கிளி பாடுது கவிஞர்; மருதகாசி   குரல் : ஜிக்கி [ஜி . கிருஷ்ணவேணி தான் ஜிக்கி என்று ஆயிற்று]. அட்டகாசமான திறமைசாலி , எந்த வகைப்பாடலையு ஆனாயாசமாகப்பாடும் அந்தநாளைய பாடகி [பின்னாளில் எம் ராஜாவை மணந்தார் ]. பாடலின் வீச்சைக்கக்கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=lPjZiIMkdRQ PACHAIKILI PADUTHU JIKKI MARUTHAKASI

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் - [மீண்ட சொர்கம் 1960] கண்ணதாசன், சலபதி ராவ் , எம் ராஜா, பி சுசீலா . எம் ராஜாவின் மார்க்கெட்டை வெகுவாக உயர்த்திய பாடல். அதியற்புதமான கவிதை, கேட்கக்கேட்க வசீகரிக்கும் நயம் பாடலின் தனிச்சிறப்பு. மேலும் சுசீலாவுக்கு ஹம்மிங் மட்டுமே எனினும் வெகு சிறப்பான பங்களிப்பு தந்துள்ளார் சுசீலா  . இவனைத்தையும் தாண்டி காட்சி அமைப்பும் வெகு நேர்த்தி , வின்சென்ட் அந்தநாளிலேயே மென்மையான ஒளிப்பதிவு செய்துள்ளார் ; இப்படத்தின் சில கொசுறு செய்திகள் இந்த பதிவின் இறுதியில் காணலாம் https://www.youtube.com/watch?v=pCMH0xhKnEk KALAIYE EN KD AMR , PS HUMMING

இதே படத்தில் மற்றுமோர் மய ங்கவைக்கும் நளினம்

துயிலாத பெண் ஒன்று [ மீண்ட சொர்கம் -1960] கண்ணதாசன் , சலபதிராவ் , எம் ராஜா  சுசீலா

வெகு ரம்மியமான கிற ங்கவைக்கும் நளினமும் , தாலாட்டும் சொற்கட்டும் பாடலின் நேர்த்திக்கு உறுதுணை. 'பிறர் காண முடியாத மேடை , அதில் நடமாடி பலனேதும் இல்லை' என்று நயம் மிளிர்ந்த சொல்லாட்சி. கேட்டு மயங்காதகவர் இலர். காட்சியின் தன்மை பார்த்துதான் ரசிக்க இயலும்.

இணைப்பு

https://www.youtube.com/watch?v=v25_XFducWo THUYILAADHA PEN KD AMR PS

உள்ளங்கள் ஒன்றாகி [புனர் ஜென்மம் -1961] பட்டுக்கோட்டை, சலபதிராவ் , எம் ராஜா, பி சுசீலா

அதியற்புதமான டூயட், விறுவிறுப்பும் குறும்பும் மிளிரி பின்னிப்பிணைந்த ஒருவகை துடிப்பான இசை அமைப்பு. அதை விளக்கும் வலிமை எனது எழுத்துக்கு இல்லை. எனினும் கேட்பவரை ஈர் க் கும்  வல்லமை மிக்க யாப்பு எனில் சத்தியம் . கேட்டு மகிழ இதோ இணைப்பு

PUNAR JENMAM 1961

https://www.youtube.com/watch?v=iuYsm_1raqg ULLANGAL ONDRAAGI AMR PS PATTUKKOTTAI

இந்தப்பாடலை கோபால் சப்தஸ்வரம் குழுவினர் பாடக்கேளுங்கள்

https://www.youtube.com/watch?v=5nw5yw9XZaM GOPA; SAPYHAS ONDRRAAGI

இந்தப்படகி பாவ்யா நல்ல பாடல்நுணுக்கம் அறிந்தவர் என்றாலும் உச்சரிப்பில் மிகவும் அசட்டையாக ஒன்ட்றாகி ஒன்ட்றாகி என்று பாடி, பாடலின் நளினத்தை மிகவும் குலைத்துவிட்டார். மேடைக்கு பாடவருபவர்கள் வல்லின மெல்லின, ''கர ''கர ''கர '' கர ஒலிகளை சிறிதும் பிறழாமல் பாடும் பயிற்சி இன்றி அரங்கேறுதல் தவறு.

அதுவும் பழையபாடல்களின் சிறப்பே அவற்றின்  [அவட் றின் அல்ல] ஒலி நேர்த்தியே என்றுணர்தல் நலம்.

MEENDA SORGAM TRIVIA

படப்பிடிப்புக்கு பத்மினி இஷ்டத்துக்கு லேட்டாக வந்ததால், ஸ்ரீதர், வின்சென்ட் சுந்தரம் கோபு அனைவரும் ஸ்டூடியோ வெளியில் கோலிக்குண்டு ஆடுவார்களாம் . என்ன சார் கோலி என்று பத்மினி கேட்க , ஸ்ரீதர் சொன்னாராம் உங்களை மாதிரி எங்களுக்கெல்லாம் வேலையா இருக்கு. நடிக்கிற ஆசாமி வரல்ல அதான் கோலி ஆடுறோம் நீங்களும் வாங்க என்று கிண்டல் செய்ய மறுநாளில் இருந்து நேரத்துக்கு பத்மினி வந்தாராம்.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...