SALEM
SUNDARI-37
சேலம் சுந்தரி-37
புடவைகளுக்குரிய விலையை பேங்க் மூலம் அனுப்பி புடவைக்கடை செட்டியார் கணக்கில் சேர்த்துவிட்டாள் சுந்தரி. போன் போட்டு பேசியதும் செட்டியார் ரொம்ப மகிழ்ச்சியாக பணம் வந்துருச்சும்மா , பேங்க் தரப்புலேயும் தகவல் அனுப்பிருக்காங்க. . நீங்க விசாலாட்சிக்கு மூத்தவங்களா , இப்ப திருச்சியில வேலை பாக்குறீங்கன்னு தங்கச்சி சொல்லுச்சு. ; கவர்மெண்ட் உத்தியோகமா ? பரவால்லை. ரொம்ப கஸ்ட ப்பட்ட குடும்பம் , உங்க தாயார் புண்ணியம் நீங்க நல்லாஇருக்கீங்க.. அப்புறம் உங்க தெருவு பெரிய வீட்டு அய்யர் வெளிநாடு போய்ட்டாரு. அவங்க மக ஆந்திராவுக்கு போயிருச்சுனு கேள்வி. அவங்களாலதான் உங்க தெருவுல வியாபாரத்துக்கு வந்தோம். 5 பைசா பாக்கி இல்லாம அப்பப்ப எத்தினி புடவை எடுத்தாலும் கச்சிதமா பணம் குடுத்துடுவாங்க. 50, 000/- ரூவாயைக்கூட . நம்பி கடன் குடுக்கலாம். ஆனா கடன் வேலையே வச்சுக்க மாட்டாங்க . கடைசியா அந்த உமா கல்யாணத்துக்கு எல்லா புடவையும் ஆடர் வாங்கி செஞ்சு கொடுத்தோம்
பெரியவர்,1லட்சத்து பதிமூணாயிரத்தையும் ரொக்கமா கொடுத்துட்டு , செட்டியார் பணத்தோட பஸ் ல போகாதீங்கன்னு சொல்லி ட்ரைவரை வரச்சொல்லி அவங்க கார்லியே பனைமரத்துப்பட்டியில வீட்டுல கொண்டாந்து விட்டாரு. பெரிய மனுஷன் அதைவிட பெரிய மனசு, இனி அந்த மாதிரி மனுசாளை பாக்கமுடியாது. எப்ப போனாலும் அந்த அம்மா காபி தருவாங்க அவ்வளவு மணமும், டேஸ்ட்டும் பெரிய ஸ்டார் ஓட்டல் ல கூட கிடைக்காது. மவராசி காலமாயிட்டாங்க. எங்க இருந்தாலும் அவங்கபிள்ளை குட்டிங்க நல்லா இருக்கணும் .
வியாபாத்துக்கு ஆந்திரா போனா உமா வை பாத்திட்டு வரணும் எந்த ஊர் னு தெரியல்ல
விசாரிக்கணும் என்றார் செட்டியார்.
சுந்தரி சொன்னாள் “அவங்க குண்டூர்ல
இருக்காங்க. அவங்க வீட்டுக்காரர் ரயில்வே ல பெரிய அதிகாரி., குண்டூர் போனா சொல்லுங்க , நான் போன் நம்பர் வாங்கித்தரேன் பாத்துட்டு வாங்க
என்றாள் . [ராமசாமி ட்ரெயினிங், கையில் இருக்கும் போன் நம்பரை வாங்கி தருகிறேன் என்று
சொல்கிறாள்]. அவர்களை கேட்காமல் நம்பரைக்கொடுத்து , ஏன் கொடுத்தாய் என்று கோபித்துக்கொண்டால்
..? அதனால் உமாவின் ஒப்புதல் கிடைத்தால் செட்டியாருக்கு நம்பர் கிடைக்கும் . இதோ அனுமன்
விளையாடுகிறார் . என்ன விளையாடுகிறார்? பொறுத்திருப்போம்
பின்னர் புரியும்.
புடவைகளும் பத்திரிகை டிசைனும்
தேர்வு ஆகி விட்டது -- வேறென்ன? வேறென்னவா
--கல்யாணத்தின் வெற்றியே சாப்பாட்டின் வெற்றியில் அல்லவோ இருக்கிறது. அது அனைவருக்கும்
தெரியும், அனுமனுக்கும் தெரியும் மட்டுமல்ல சுந்தரிக்கும் தெரியும் என அனுமனுக்கு தெரியும்
. .
மணி மாலை
2.50 அண்ணா அண்ணா என்று குரல் .
நிமிர்ந்து பார்க்கிறார் ராமசாமி , வெற்றிலை வாயுடன் சேஷாத்திரி [அதான் சாட்சாத் கேப்டன் குக் -
சமையல் கில்லாடி] இங்க எங்க வந்த ? கழியாண மஞ்சவம் [கல்யாண மண்டபம் ] வாக்க வந்தேன் [பாக்க வந்தேன்] வெற்றிலை நிரம்பிய வாயால் சொல்ல , ராமசாமிக்கு புரிந்து விட்டது -இவன் ரயில் கல்யாண மண்டபத்தை பார்க்க வந்திருக்கிறான் .
ரைல்வேல வேலையா இருந்தா தானே தருவான் என்றார் ராமசாமி. ஆமாம் என் தங்கை நாத்தனார் ஹஸ்பண்ட் ரயில்லே வேலைஅண்ணா அதுனால இடம் பிடிச்சாச்சு , ரீமாடல் பண்ணினப்புறம் ஜோக்காருக்கு. என்றான் கேப்டன் குக்.
டேய் ஒரு சின்ன கல்யாணம் ஆகஸ்ட்ல உன்னைத்தான் பிடிக்கணும் னு நெனச்சேன் நீயே வந்துட்ட . என்றார் ராமசாமி .
ஆகஸ்ட்ல தான் தங்கை உறவுக்காரங்க கல்யாணம் என்று விழித்தான் கேப்டன் குக். டேய் இது மினி மண்டபம் டா --ரா சா .
ஆமாம் உள்ள ஒன்னு இருக்கு என்றான் குக்.
. நீ வந்து நல்ல படியா வேஸ்ட் இல்லாம காபி பொடி திருடாம , ஒழுங்கா நல்ல டேஸ்ட்டா பண்ணனும் சரியா. அண்ணா கோச்சுக்கப்படாது ரொம்ப டேஸ்ட்டா பண்ணினா 2 வது ரவுண்ட்லியே காலியாயிடும்.,
அதுனால குறையில்லாம சந்தோஷமா சாப்பிடணும் அவ்ளோதானே , எல்லாம் ஜமாய்ச்சுடறேன். என்றான் காப்டன் குக் .
சரி ஒரே தேதியா வந்துட்டா எப்பிடிடா என்றார் ராமசாமி ; நல்லதா போச்சு 2 இடத்தையும் பாத்துக்கலாம் , தம்பியை வரசொல்றே ன்
"யாருடா-?
அவன்தான் சுதர்சனம் ;
ஆமாம் அவன் டிவிஎஸ் ல இருந்தானே.
இப்பவும இருக்கான். மேனேஜர் சௌந்தரத்துக்கு அவனை ரொம்ப பிடிக்கும் . அதுனால கல்யாணம் னு லீவு கேட்டால் சந்தோஷமா லீவு குடுத்துடுவார். மாமிக்குத்தெரியாம ஜாங்கிரி ய கொண்டுபோய் குடுத்துடுவான். ரொம்ப குஷியாயிடுவார்..
சரி வா போவோம் என்று கீழே போய் .மாடசாமி ,
சுந்தரி இருவரையும்
3.20 க் கு கேன்டீன் வரச்செய்தார் ராமசாமி.
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment