Friday, August 9, 2024

SALEM SUNDARI-38

SALEM SUNDARI-38

சேலம் சுந்தரி- 38

குறித்த நேரத்தில் வந்தனர் சுந்தரியும், மாடசாமியும். எதிர்வரிசையில் அவர்களை உட்கார சொல்லிவிட்டு    

 கேப்டன் குக் [சேஷாத்ரி] இவர் தான் என்று அறிமுகம் செய்வித்தார் ராமசாமி .

வேதாந்தம் பையன் பூணூலுக்கு இவர்தானே சமையல்?  அந்த சாப்பாடை இப்ப நெனச்சாலும் -மணமும் சுவையும் மறக்கவே முடியல்ல என்று மாடசாமி எழுந்து நின்று சேஷாத்ரிக்கு வணக்கம் தெரிவித்தார்

கேப்டன் குக் "ஐயோ பெரியவா எழுந்துநின்னு நமஸ்காரம் பண்ற அளவுக்கு நான் இல்ல சார். நீங்கல்லாம் கைதூக்கி விட்டதால் மூணு வேள  சாப்பாடு தீபாவளி பொங்கல் னு குறையில்லாம எங்க ஜீவனம் நடக்குது.

ராமசாமி சாரைப்போல மனுசாளை பாக்கறதே கஷ்டம்; எல்லாரும் சான்ஸ் வாங்கித்தருவா ஆனா கமிஷன் எதிர்பாப்பா. . அந்த வேலை எல்லாம் சாருக்கு பிடிக்கவே பிடிக்காது, டேய் இந்த "பிச்சைஎடுத்துதாம் பெருமாளு அதையும் பறிச்சுதாம் அனுமாருவேலையயெ ல்லாம் வேண்டாண்டா ன்னு உரக்க சொல்வாரு

அண்ணா நெனைச்சார் னா  கோடியா சம்பாதிக்கலாம் ஆனா அவர் நண்பர்களை சம்பாதிச்சிருக்கார். அவரால வளந்தவங்க தான் அதிகம் அவர் 5 பைசா அளவுக்கு க்கூட பலன் அடைஞ்சதில்ல. இருந்தாலும் எப்பவுமே சந்தோஷம் ,கவனம்கண்டிப்பு இது மூணும் அவருக்கே உரித்தானதுஅவர் அசீவாதம் இருந்தாலே போதும் என்றார் குக்.

சுந்தரி கதி கலங்கினாள் . இவ்வளவு பெரிய ' குக் 'கை  இங்க வரவெச்சுட்டாரே2 நொடியில்?  என்று பவ்யமாக வணக்கம் தெரிவித்தாள்.

ராமசாமி சொன்னார் 

டேய்"கன்னா பின்னா மசாலா , அப்புறம் நார்த் இந்தியன் சைனீஸ் , ரஜனீஷ் னு எதையாவது பண்ணி குப்பைல கொட்டுற வேலை எல்லாம் இருக்கப்படாது. எல்லாரும் திருப்தியா சாப்பிட்டு தம்பதிகளை வாழ்த்தணும்.  அதுக்கு என்ன செய்யணுமோ- அதைப்பாரு.

உன் ஆளுங்க சம்பளம், மளிகை -தளிகை   எல்லாம் நியாயமா கணக்கு போட்டு வாங்கிக்கோ. உன்னை கூப்பிட்டு அது ஏன் இது ஏன் னு கேக்கற மாதிரி வெச்சுடாத. ஆமாம் சொல்லிட்டேன் என்று கறாராக பேசினார் ராமசாமி.

குக்.: “அண்ணா 50 பேர் தானே வருவா; எங்கிட்ட விட்டுருங்கண்ணா நீங்க சந்தோஷமா பில் செட்டில் பண்ணுவேள் அதுக்கு நான் கியாரண்டி ; மெனு ஏதாவது முக்கியமா இருக்கணுமா சொல்லுங்கோ”.

டேய் எல்லாம் வெளியூர் விருந்தாளிகள். நிச்சயமா நம்ப ஸ்டைல் புளியோதரை - அக்கார அடிசில் ரெண்டும் இருக்கணும், உன் பேரை சொல்லணும் . எதையும், குறை இல்லாம செய்.

தாம்பூல பொட்டலம் + பட்சணம் எல்லாம் நீட்டா போட்டுடறேன் -கவலையே வேண்டாம் என்றான் குக்

சுந்தரி நடுங்கினாள் ஏதாவது பெரிய செலவு வந்துடுமோ   என்னமோ தளிகை அக்கறை வெடி னு ஏதோ சொன்னாரே 'ஆஞ்சநேயா " என்று பிரார்த்திக்க ராமசாமி, ஆரம்பிச்சுட்டியே-- ஆஞ்சனேயாவா? செலவெல்லாம் ஒன்னும் அதிகமா ஆகாது. வந்தவங்க நல்லா சாப்பிட்டுட்டு வாழ்த்தணும்.  ஏன் கவலைப்படற? , பேசாம இரு,. எல்லாம் நல்லா நடக்கும் -சூப்பர் குக் அவரு என்று தெம்பூட்டினார் ராமசாமி.

சுந்தரி-- உன் கைல எவ்வளவு இருக்கு ?--ராமசாமி.

சார்-- 700/- என்றாள்.

சரி 500 கொடு என்று வாங்கி, 500 /-தன்னிடமிருந்து எடுத்து கொடுத்து சுந்தரியிடம் -இதை நீயே கொடு என்று 1000/- ரூபாய் அட்வான்ஸ் என்று குறித்துக்கொள் அவர் பெயர் சேஷாத்திரி குக் ஸ்ரீரங்கம் என்று தெரிவித்தார்

உக்கார்ந்த இடத்துல எப்பிடி எல்லாம் செய்யறாரு!  

 வரேன் மா என்று குக் விடைபெற்றார்.. இருடா காபி சாப்பிட்டுட்டு  போ என்று அனைவரும் காப்பி சாப்பிட்டு விடை பெற்றனர் .

பின்னர் மாடசாமியிடம்சார் மளிகை அப்புறம் ஏதோ குளிகை மாதிரி ஏதோ சொன்னாரே சார் என்று இழுத்தாள் சுந்தரி.

அதுவா-- குளிகை இல்ல தளிகை.

அப்பிடீன்னா? என்றாள்

தளிகைன்னா சமையல் -அது அய்யங்கார் பாஷை. அப்புறம் அக்கறை வெடி னு ஏதோ சொன்னாரே    அது அக்கறை வெடி இல்ல- அக்கார அடிசில்-- IN BETWEEN சக்கரைப்பொங்கல் AND பாயாசம் ,

BUT டிபிக்கல் ஐயங்கார் VERSION -பட்டயகிளப்பும் என்றார் மாடசாமி

சுந்தரி. –“ குக் ஐயங்காரா?

ஏன்? உங்களுக்கு-- ஐயர் தான் வேணுமா? சாப்பாடு நல்லா இருக்கணுமா?

அவர் அதெல்லாம், பக்காவா பாத்துப்பாரு.-- என்றார் மாடசாமி

டேய் நம்ப ஸ்டைல் புளியோதரை - அக்கார அடிசில் னு சொன்னாரே சார்,  அப்ப ராமசாமி சார் அய்யங்காரா.?

சேலத்துப்பொண்ணு ங்குறது சரியாத்தான் இருக்கு ஐயர் /ஐயங்கார் /ராவ்ஜி இதெல்லாம் வேற வேற னு தெரியாம தடுமாற ர என்றார் மாடசாமி.

ஐயோ நெஜம்மாவே இதெல்லாம் தெரியவே தெரியாது சார் எல்லாமே ஐயரு ன்னு   சொல்லுவோம். எங்கூர்ல என்றாள் சுந்தரி. உங்கவூர்ல என்ன அநேகமா எல்லா ஊர்க்காரங்களுமே அப்பிடித்தான் சொல்லி வழக்கம். உங்களுக்கு எப்பிடி சார் இதெல்லாம் தெரியுது என்று கண்களை அகல விரித்து மாடசாமியை வியப்புடன் பார்த்தாள் சுந்தரி.  

.அவன் ஸ்கூல் மேட், அவங்க அப்பா அம்மா காலத்துலே இருந்தே நல்ல பழக்கம் டேய் வாடா போடானு பேசறமே கவனிச்சதில்லையா?. என்றார் மாடசாமி

இல்ல குக் கிட்ட சொன்ன பேர்களை வெச்சு அவர் ஐயங்காரானு கேட்டேன் என்றாள் சுந்தரி.

கவலையில்லாம போய், வேற வேலைகளைப்பாருங்க. என்றார் மாடசாமி

நான் என்னத்த பாக்குறது, உங்களைத்தான் தொந்தரவு பண்ணப்போறேன் .இதுக்கெல்லாம் நான் எப்பிடி ஈடு கட்டுவேன் -ஒண்ணுமே புரியல்ல -'ஆஞ்சநேயா' என்று பிரார்த்தித்தாள். 

போய், தத்தம் வேலைகளைப்பார்க்க கிளம்பினர்.

தொடரும்

அன்பன் ராமன் 

3 comments:

  1. சாபம் பலிச்சிடும் என்று நினைக்கிறேன். 😃

    ReplyDelete
  2. என்ன சாபம் ? யாருக்கு -- புரியவில்லை

    ReplyDelete
  3. சேலம் சுந்தரி கதையை நாவலாக
    வெளியிடலாம் என்ற ஒரு நண்பருக்கு "ஓய் சாபமிடாதீர்" என்று பதிலளித்திருந்தீர்கள். அந்த சாபம்.

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...