Sunday, August 18, 2024

SALEM SUNDARI-41

 SALEM SUNDARI-41

சேலம் சுந்தரி- -41

இவ்வளவு களேபரங்களுக்கு இடையில், ராமசாமி 2, 3 ஜோசியர்களிடம் பேசி வரும் ஆகஸ்ட் 23 வெள்ளி நல்ல முகூர்த்தம் என்று கண்டு பிடித்து மாடசாமி மூலம் சுந்தரிக்கு சொல்லி விட்டார்.

இப்போது மேற்கொண்டு என்ன செய்வது? என்று விழித்தாள் சுந்தரி..

மாடசாமியிடம் கேட்க புறப்படும் போது,, மாமா என்று குரல்.

மாடசாமி கண்ணில் தாரை தாரையாக வழிந்த கண்ணீரை அடக்க முடியாமல், செய்வதறியாம்ல் திகைக்க,  வந்தவள் "என்னாச்சு மாமா  ஏன் கலங்கறீங்க? என்றாள்..  வந்தவள்- கௌரி [மாடசாமியின் அக்கா பெண்] சந்தோஷத்துல கண்ணீர் வருதும்மா நல்லாருக்கியா; உங்க ப்ரொபஸர் மேடம் உன்னப்பத்தி சொல்ல சொல்ல, நான் புல்லரிச்சுப்போவேன். உன்னை பாக்க வரணும்னு நெனச்சேன்- நீயே வந்துட்ட.

சுந்தரியிடம்இவ தான் கௌரி சென்னை ஜெர்மன் கான்சலேட் அதிகாரி யா இருக்கா; முழுக்க முழுக்க யூனிவர்சிட்டி சுபத்திரா மேடம் வளத்துவிட்ட பொண்ணு இவ' என்றார் மாடசாமி. சுந்தரி கைகூப்பி கௌரியை வணங்க,-- இவங்க?  என்றாள் கௌரி. நீங்களே சொல்லுங்க என்றார் மாடசாமி . சுருக்கமாக சுந்தரி சொல்லி விட்டு இந்த முகூர்த்ததேதியை இன்விடேஷன்ல சேர்த்து 100-150 காபி அச்சடிக்கணும், அதுதான் கேட்டுகிட்டு இருக்கேன் நல்ல சகுனமா  நீங்க வந்துட்டீங்க என்றாள்  சுந்தரி.

"எங்க அச்சடிக்கணும் ?" -கௌரி

மாடசாமி குறுக்கிட்டு ஆமாம் சொன்னாப்ல உனக்கு சாரதா கம்பியூட்டர் சென்டர் தெரியுமில்ல -ஈவினிங் கூட்டிக்கிட்டு போயேன். ஆமாம் மாமா இப்ப நான் யூனிவர் ஸிட்டி போய் மேடத்தபாத்துட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு ஈவினிங் 4 மணிக்கு வருவேன் அப்புறம் நானே சாரதா மேடத்தையும் பாத்து நன்றி சொல்லி ஆசீர்வாதம் வாங்கணும். இங்கயே வந்து உங்கள கூட்டிகிட்டு போறேன் என்று சுந்தரியிடம் சொல்லி விட்டு, மாமா விடம் இன்னும் 10 நாளில் ஜெர்மனி போய் ட்ரெயினிங் முடித்து வர 2 மாதம் ஆகும். அம்மாவையும் உங்களையும் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிட்டு போலாம் னு வந்தேன். நல்ல இருக்கீங்களா மாமா என்று குன்றாத நன்றியுடன் மாமாவையே பார்த்தபடி பேசினாள்

சுந்தரிக்கு புரிந்தது இந்தக்குழந்தைக்கு தானே மாமா தன வாழ்க்கையையே அர்ப்பணித்தார் என்று கௌரியின் தாய் போனில் சொன்னார்கள் என்று நினைவு கொண்டாள். இந்த மாடசாமி, மாபெரும் மனிதர். அவர் உயர்கல்வி பெற்றிருந்தால் எங்கோ போயிருப்பார், அவர் மனதை புரிந்து கொள்ளாமல் நான் எவ்வளவு பைத்தியக்காரியாக நடந்து கொண்டேன் என்று உள்ளூர வருந்தினாள். கௌரி யூனிவர்சிட்டி நோக்கி பயணித்தாள்

சுபத்திரா ஆவலுடன் காத்திருக்கிறார் கௌரிக்கு பெரும் விழா எடுத்து கௌரவிக்க. என்ன இருந்தாலும் சுபத்திராவின் பெயர், ஊர் உலகம் எல்லாம் பரவ கௌரி ஒரு வலுவான காரணி; மட்டுமல்ல பெரியசாமி [இலஞ்சி] இந்த கல்வியில் சேர கௌரி ஏராளமான அறிவுரைகள் வழங்கி-- அப்படித்தான் பெரியசாமி, மேடம் சுபத்திராவின்   நிழலில் பயில்கிறான் பெரியசாமியை கௌரியிடம்  அடையாளப்படுத்தியது நாதஸ்வர மேதை காசிம். காசிம் வெளிநாடு வாய்ப்புகளுக்கு உதவியவள் கௌரி இப்படி கதைக்குள் கதையாக ஏராளமான நிகழ்வுகள் வெளி உலகுக்கு தெரியாமலே.

 கௌரி --- ராமசாமி-மாடசாமி- சுபத்திரா இவர்களின் எதிர்கால பிரதிநிதியாக பலருக்கும் உதவுகிறாள் சுபத்திராவின் வழி முறைகளை பின் பற்றி ஊழல், லஞ்ச லாவண்யம் போன்ற தவறுகள் நிகழாமல் பெரும் ஆளுமையாய்  திகழ்கிறாள். மாடசாமியின் பண்புகள் இல்லாமலா இருப்பாள் இவள்.? 

சொன்னபடி மாலை 4.00 மணி சுமார் இருக்கும் கௌரி வந்தாள் பெரிய மாலை செண்டு, பெரிய கிப்ட்  பேக்   உடன்  யூனிவர்சிட்டில மேடம் தடல்புடல் பண்ணிட்டாங்க மீட்டி ங் போட்டு  கௌரவப்படுத்தி எனக்கே அழுகையா வந்திடுச்சு மாமா எவ்வளவு பெரிய அறிவாளி அவங்க -எனக்க்கு போய் இவ்வளவு மரியாதைன்னா ரொம்பவே கூச்சமா இருந்துச்சு அவங்க நான் என்னவோ பெரிய மனுஷி மாதிரி மேடம் கௌரி மேடம் கௌரி னு நொடிக்கு நொடி பேசி என்னை ரொம்பவே நெகிழ வெச்சுட்டாங்க. முன்னெல்லாம் மேடம் பக்கத்துல போகவே நடுங்குவோம்; அதெல்லாம் எதுக்குங்குறா மாதிரி எல்லா ஸ்டாப் முன்னாலியும் பெரிய மரியாதை பண்ணிட்டாங்க அவங்க அவங்கதான் னு சொல்லாம சொல்லிட்டாங்க என்று சொல்ல சொல்ல மாமா மாடசாமி கண்ணீரை அடக்கிக்கொண்டு , ராமசாமியை ப்பாக்காம போகாதே அவன் இல்லேன்னா உனக்கு இந்த நிலைமையே கிடைச்சிருக்காது என்றார் மாடசாமி. நிஜம் தான் ராமசாமியை வணங்கி நன்றி சொன்னாள் கௌரி.  

சொன்னபடியே மாலை நேரம், சாரதா கம்பியூட்டர் சென்டரில் சுந்தரியுடன் நுழைந்தாள் கௌரி.

 ஹாய் கௌரீ  என்று காதைப்பிளக்கும் குரலால் அழைத்தபடி ஓடி வந்த சாரதா , கௌரியை வாஞ்சையையாகக்கட்டி அணைத்து தூக்கினாள் . 3/4 அடிகூட தூக்க முடியவில்லை

நீ வெய்ட்டு போட்டுட்டட டி;

ஜெர்மன் கான்சலேட் அதிகாரி பதவி, பதவிசு, அதிகாரம்,  வெளிநாட்டு தொடர்பு னு கொடி கட்டி பறக்கற என்றாள் சாரதா

.ஏய்- மேடத்தை பாத்துட்டயா? என்றாள் சாரதா. ஆமாம்க்கா பாத்துட்டேன் .

 நீங்க என்ன சொன்னாலும் நான் என்னிக்கும் உங்க கௌரி தான். உங்க உதவி இல்லாமற் இந்த இடத்துக்கெல்லாம் நான் வந்திருக்கவே முடியாதுக்கா. ..அந்த நன்றி என்னை விட்டு போகாதுக்கா.

இவங்க மாமா ஆபீஸ்ல என்று கௌரி ஆரம்பிக்க

சாரதா "தெரியுமே --சுந்தரி, இன்விடேஷன் தேதி முகூர்த்த விவரங்கள் [ரெண்டையும் குடுங்க]சேர்த்து அடிக்கணும் அதானே   . அது தெரியாமயா இங்க கடை போட்டு உக்காந்திருக்கேன் என்றாள். ரெண்டு 'ரி' களும் [கௌ ரி , சு ந்த ரி] அம்மாடி என்று அரண்டனர்.

டிசைன் பாத்தியா என்று கௌரிக்கு காட்டி, சுந்தரியிடம் எந்த     டிசைன் செலெக்ட் பண்ணியிருக்கீங்க என்று கேட்டு அவளது தேர்வில் படு ஸ்டைலாக தேதி கிழமை  முகூர்த்த விவரங்கள் மூன்றையும் அழகான font அமைத்து காட்டினாள். சுந்தரிக்கு, ஒரே மகிழ்ச்சி.

எவ்வளவு காபி என்றாள் சாரதா .

சுந்தரி- 150 போதும்

நீங்க பேசிக்கிட்டுருங்க 15-20 நிமிஷத்துல அடிச்சசுதரேன். . கவர் டிசைன் லாம் ரெடியா இருக்கு தேதி கிழமையை போட்டுட்டு அதுவும் முடிச்சுக்குடுத்தடறேன். என்றாள் சாரதா. . மனம் மகிழ்ந்தாள் சுந்தரி ஏனெனில் சொன்னபடி சிறப்பாக செய்து கொடுத்தாள்  சாரதா .

பில் எவ்வளவு? என்றாள் சுந்தரி. அதுவா, மேடத்தைக்கேட்டு சொல்றேன்.

ஏன்னா-- இந்தாடி ஏதாவது தாம் தூம் பண்ணாத னு சொல்லிருக்காங்க. அதுனால-- அவங்க என்ன சொல்றாங்களோ அதையே குடுங்க போதும்.

மேடம் இல்லாம நாங்க யாருமே இல்ல .  அவங்க தான் தெய்வம்  என்றாள் சாரதா

தெய்வத்த மீறி செய்ய முடியுமா?.

“சந்தோஷமா போயிட்டு வாங்கஎன்றாள் சாரதா.              விடை பெற்று கௌரி கிளம்ப, சுந்தரி நானும் உங்களோடயே உங்க வீட்டுக்கு வந்துட்டு அப்புறம் ரூம் போறேன் என்றாள். 

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...