Tuesday, August 20, 2024

PRONUNCIATION-2

 PRONUNCIATION-2

உச்சரிப்பு -2

சென்ற பதிவில், சில சொற்களை கொடுத்து அவற்றின் உச்சரிப்பின் விவரங்களை முயன்று பார்க்க சொல்லி இருந்தேன். இப்பதிவில், அவை தெளிவாக்கப்பட்டுள்ளன அவற்றை தேவையானபோது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ENVELOPE,   RENDEZVOUS, SUPERFLUOUS , ISLAND , RAPROCHMENT, DEBRIS , RESUME

ENVELOPE = [ங் ]வெலப் [அடைப்புக்குறிக்குள் இருக்கும் 'ங் '[ மூக்கினால் வெளிப்பட உச்சரித்து பேசவேண்டும் என்வலப் அல்ல.

RENDEZVOUS = ரென்டெ வூ [ரெண்டஸ்வஸ் அல்ல]

SUPERFLUOUS =சூப்பர் Fளூ   [சூபர்ப்ளூவஸ் அல்ல]

ISLAND = ஐலண்ட்  [ஐஸ் லாண்ட் அல்ல அது iceland என்னும் வேறுஒரு இடம்.  Raprochment = ராப்ரோச்மா, DEBRIS = டெப்ரி

RESUME =ரெஸ்யூமே

இவற்றின் உச்சரிப்பின் முறை அறியாமல் பேச முயலுதல், நம்மை  கேலிப்பொருளாக்கும்.

இப்போது உச்சரிப்பின் முக்கியத்துவம் பற்றிய ஒரு வீடியோ காண நேர்ந்தது . இசை அமைப்பாளர் அமுத பாரதி அவர்கள், தமிழ் திரைப் பாடலில் எவ்வளவு நுணுக்கமாக உச்சரிக்காவிடில் தாங்கொணா துயர் விளையும் என்றும் , டி எம் எஸ், சுசீலா இருவரும் எவ்வளவு சிறப்பாக பாடியுள்ளனர் என விளக்குகிறார். பாடல்களை ரசிகர்கள் பலவாறாக பகுத்தாய்வதுண்டு . சுபஸ்ரீ ஒரு வகை,  ஸ்ரீவத்சன் ஒருவகை, அமுதபாரதி பிரத்தியேகமாக ஒரு அணுகுமுறையை கடைபிடிப்பவர். அவர் வெகு நேர்த்தியாகவும் ஆழ்த்தும் விளங்குபவர். அவர் கூறுவதைக்கேளுங்கள். இணைப்பு இதோ  

https://www.youtube.com/watch?v=47IOOYs7IIQ

அது ஒரு புறம் இருக்க நமது ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தி, தேர்ந்த மொழியறிவு கொண்டவர் என்ற பரவலான கருத்தை உருவாக்குவதற்கு சில அடிப்படைகளை நாம் நன்கு உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

இந்தியமொழிகள் போல் அல்லாமல் ஆங்கில மொழியில் 'அமைதி எழுத்துக்கள் ' [silent letters] உள்ளன. அவை சொற்களைப்பொறுத்து ஒலிக்கவோ, ஒடுங்கவோ கூடும் . ROBOT [ரோபோ] REPEAT [ரிப்பீட்] எனவும்,  ஒலிப்பன ஒரு சொல்லில் T [அமைதி கொள்ள] மற்றதி ல் அதே T தெளிவாக ஒலிப்பதைக்காணலாம்..

மற்றுமோர் நடைமுறை யாதெனில் தமிழில் [இந்திய மொழிகளில் பொதுவாக] அனைத்து எழுத்துகளும்   ஒலி வடிவமாகவே இயங்குபவை . உதாரணம் : London லண்டன் என தமிழில் வழங்குகிறது.. ஆனால் ஆங்கில மொழியினர் LONDON என்பதை லண்ட் ன்  என்றும் , BRITAIN என்பதை ப்ரிட்ன் என்றும், Briton என்பதை பிரைட் ன் என்றும் உச்சரிப்பதை அறிவோம். நாம் லண்டன்என்று சொன்னால் அவர்கள் நம்மை ஏளனப்பார்வை பார்க்கின்றனர். அதாவது நமது மொழி ஆளுமை மிகவும் மலினமாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் நமது புரிதலில் சிலபிள் "SYLLABLE "  எனும் சொல் அமைப்பு குறித்த சட்ட திட்டங்கள் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டவை என்பதே. எழுத்துக்கூட்டி படிப்பது இதை பிற மொழிகளின் சொற்களின் மீது பொருத்தும்போது அது அம்மொழியின் இயல்பினை வெகுவாக சிதைத்துவிடுவதால்  அம்மொழியை தாய்மொழியாய் உபயோகிப்போர் சஞ்சலமும் கோபமும் கொள்கின்றனர்.

அதனால் நமக்கு எதுவும் புரிவதில்லை என்று தீர்மானிக்கிறார்கள். உச்சரிப்பின் அடிப்படையில் பிறரின் அறிவை நிர்ணயிக்க முற்படுகின்றனர். பிழையான உச்சரிப்பு ஒருவரின் பல திறமைகளைக்கூட ஏற்பதற்கு தடை க் கல்லாக   குறுக்கிடுகிறது; இவற்றிற்கானக் தீர்வு , முறையான உச்சரிப்பை அதிகாரபூர்வமான அகராதிகள் [dictionaries]    உதவியால் அறிந்து கடைப்பிடித்தல் நல்ல பலனையும் நற்பெயரையும் ஏற்படுத்தும்.

ஆங்கில மொழியின் நளினம், அதன் உச்சரிப்பில் இருந்தே துவங்குகிறது என்பது அடியேனின் புரிதல்.

அதைத்தான், phonetics என்னும் ஒலிப்பயிற்சியின் வாயிலாக கற்று மொழியில் தேர்ச்சி பெறுகின்றனர்.

நமது நாட்டில் மொழிப்பாடங்களில் phonetics என்னும் பாடப்பிரிவு உள்ளது ;அவற்றின் சட்ட திட்ட மரபுகளை கற்பிக்கின்ற்னர் ஆனால் சொற்களின் ஒலி வடிவம் செயல் முறையாக கற்பிக்கும் நடை முறை வலுவாக இல்லை என்றே தோன்றுகிறது. ஒலி வடிவப்பயிற்சி ஒருவரின் தாய் மொழி ரீதியாக அமையவேண்டிய ஒன்று ;வேற்று மொழியினர் என்னதான் முயன்றாலும் அவ்வப்போது உச்சரிப்பு காட்டிக்கொடுத்து விடும் . உதாரணத்திற்கு மலையாள மொழியினர் தமிழ் பேசும்போது 'இரண்டு அல்லது ரெண்டு என்று சொல்வதிற்கு பதில் "ரண்டு" என்பதைக்காணலாம் . 3 = மூ நு , 40= நால் பது

அதேபோல கன்னடமொழியினர் தமிழில் பேசும் போது  "இவர் தான் உங்க அப்பாவா? என்று கேட்கவேண்டிய நிலையில் "இவர்தான் உங்க அப்பா 'னா' என்பார்கள்.  அதுபோல                  அப்பாவுடையது என்பதற்கு "அப்பன் து "என்றும் அக்காவுடையது என்பதற்கு "அக்கன்  து "என்பார்கள். மற்றுமோர் குறியீடாக கன்னட மொழியினர் பேச்சு வழக்கில்   து , னு , மு .ரு போன்ற குறில் வடிவங்கள்  தூ , நூ , மூ , ரூ என்றே நெடில் அமைப்பில் .  வெளிப்படும்

அவர் வந்தார் என்பதை, அவரூ [] ந்தா ரூ என்பர். அதாவது /  இரண்டும் கலந்த ஒலி யில்                [] ந்தா ரூ என்பர்.

அது போலவே வடை என்பதை ஒ[/வ] டை என்று சொல்லக்கேட்கலாம். பிற மொழியில் பேசும் பொழுது தாய் மொழிக்குறுக்கீடு வரும் அதை கவனமாக தவிர்க்க பழகிக்கொண்டால் நமது மொழி ஆளுமை பாராட்டு பெறும் .

தொடரும்  அன்பன் ராமன்

2 comments:

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...