Wednesday, August 21, 2024

T M SOUNDARARAJAN-18

 T M SOUNDARARAJAN-18                    

டி எம் சௌந்தரராஜன் -18

இன்றைய பதிவில் டி எம் எஸ் பங்களித்த சில பக்திப்பாடல்களை [திரைப்படங்களில் இடம் பெற்று வெற்றி ஈட்டிய] காணலாம். பாவம் என்பது அவருக்கு குரலில் அபரிமிதமாக வெளிப்படும்: எனவே எந்த நடிகர் ஆயினும் பக்திப்பாடலுக்கு முதல் தேர்வு டி எம் எஸ் அவர்களின் குரல் என்பதில் ஐயம் இல்லை. அப்படி சிலவற்றை இன்று பேசுவோம் 

கண்ணன் வந்தான் [ராமு- 1966] கண்ணதாசன், எம் எஸ் வி, சீர்காழி கோவிந்தராஜன் , டி எம் சௌந்தரராஜன்

எளிய சொற்களில் விளைந்த கவிதை யாவர்க்கும் தெம்பூட்டும் விளக்கங்கள் என்று நாகையா ஓங்கி ப்பாட அருள்வேண்டுவோர் அரங்கில் இருக்க , தற்கொலை நாடிச்சென்ற தந்தையையும் தனயனையும் இழுத்துவந்து பங்கேற்க வைக்கும் கிருஷ்ண யுக்தி. அவ்விடத்திலிருந்து பாடலில் நுழையும் டி எம் எஸ் பாவம் கொப்பளிக்கப்பாடுவதை கேட்கலாம். பாடல் நெடுகிலும் ஒலிக்கும் இசை ஸ்வரங்கள் நம்மைகட்டிப்போட , தொடர்ந்து மனமெங்கும் வியாபித்த படி அருள் வேண்டி உருகிப்பாடும் நடிகர்கள்ஜெமினி கணேசன் , நாகையா. ஊமைச் சிறுவன்[ராமு ] விஜயகுமார் இன்று தேர்ந்த கிட்டார் இசைக்கலைஞன் ..சிறுவன் நீங்கலாக ஏனைய கவிஞர், எம் எஸ் வி , பாடகர்கள், பல இசைக்கலைஞர்கள் , நடிகர்கள் அனைவரும் மறைந்துவிட்டனர். ஆயினும் இன்றளவும் பாடல் கேட்பவரை மனம் லயிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. கேட்டு ரசிக்க இணைப்பு இதோ.  

https://www.youtube.com/watch?v=e90W0fMMZLI rammu 1966 kannan vandhan kd msv sg tms

அழியாப்புகழ் கொண்ட பாடல் "கண்ணன் வந்தான் " என்பதற்கு சான்றாக சென்ற ஆண்டு ஸ்ரீ ஜெயந்தி [கிருஷ்ண ஜெயந்தி ] விழாவில் மேடை நிகழ்வாக சுபஸ்ரீ குழுவினர் இப்பாடலை வழங்கினார். இன்றைய கணக்கில் பாடலுக்கு வயது 60 [2023 இல் ] ஆயினும் இளைய தலைமுறையையே ஈர்த்துள்ள பாடல் என்று உணர முடிகிறது. அதையும் மறக்காமல் ரசியுங்கள், ஏனெனில் இளம் கலைஞர்கள் வெளிப்படுத்தியுள்ள திறமை பாராட்டுக்குரியது. இது முந்தைய இணைப்பின் தொடர்ச்சியாக வருகிறது பொறுமையாக பார்த்தால் கிடைக்கும் . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=e90W0fMMZLI subasree team

கேட்டதும் கொடுப்பவனே [தெய்வ மகன்- 1968] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் . அன்று பிறர்க்கு கண்ணனின் பெருமைகளை உரைத்த நாகையா உடல் முடங்கி இருக்க இப்போது சிவாஜி கணேசன் மனமுருகி கிருஷ்ண அருள் வேண்டி ப்பாடுவதைக்காணலாம். இதுபோன்ற பாடல்கள் பெரும் தாக்கம் தர வல்லவை. அவ்வகையில் இது ஒரு பெரும் வெற்றிப்பாடல் எனில் மிகை அல்ல. பாடலுக்கு இணைப்பு இதோ.

https://www.google.com/search?q=kettadhum+koduppavane+video+sing&oq=kettadhum+koduppavane+video+sing+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTIyMTMxajBqNKgCALACAQ&sourceid=chrome&ie deiva magan 1969  kd msv tms

https://www.google.com/search?q=aattuviththaal+yaaroruvar+aadaadhaare+kanna+video+song&newwindow=1&sca_esv=5a54ede1e073dd21&sca_upv=1&sxsrf=ADLYWIJ4GppASHio-sH1Orc36pTrGrwedQ%3A1723718 avan thaan manidhan 1975 kd msv tms

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா [அவன் தான் மனிதன் 1975 ] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ்

வாழ்வில் நேர்மையாய் வாழ்ந்து வீழ்ந்தவன் கிருஷ்ணனை நேரில் பார்த்தபோது என்ன பேசுவான் என்பதே பாடலின் சாரம், கண்ணதாசனுக்கு சொல்லித்தர வேண்டுமா? மனிதன் சிறப்பாக பேசியுள்ளார். உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா என்ற அறிவின் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் இடம் பாடலின் பெரும் பண்பிற்கு சான்று. கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=aattuviththaal+yaaroruvar+aadaadhaare+kanna+video+song&newwindow=1&sca_esv=5a54ede1e073dd21&sca_upv=1&sxsrf=ADLYWIJ4GppASHio-sH1Orc36pTrGrwedQ%3A1723718 avan thaan manidhan 1975 kd msv tms

கண்ணா நீயும் நானுமா [கௌரவம்- 197] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ்

இந்த 'கண்ணன்' வேறு நபர் , பகவான் அல்ல . ஆயினும் உணர்ச்சி பீறிட வெளிப்பட்ட பாடல். பாடலில் மகாபாரதம் பேசப்படுகிறது, வாழ்க்கையில் நிகழ்ந்த போட்டியினை மகாபாரதத்திற்கு ஒப்பிட்டு பாடல் புனைந்த கவியை சொல்லவா? எல்லா உணர்வுகளுக்கும் கருவிகளை தொகுத்தஎம் எஸ் வி யை சொல்வதா , பாவங்களுக்கு உரிய சிறப்பினை வெளிப்படுத்திய பாடகர் டி எம் எஸ் அவர்களை சொல்வதா. எதுவாயினும் இனி இவை போன்ற பாடல்கள் கனவாகிப்போய்விட்ட அந்நாளைய சரித்திரங்கள் என்பதே இன்றைய நிலவரம். பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=Vb85AOWRpFc gouravam kanna neeyumo

தொடரும்

அன்பன் ராமன்.

 

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...