Wednesday, August 21, 2024

MUSIC DIRECTOR RAJESWARA RAO

 MUSIC DIRECTOR   RAJESWARA RAO                                   

இசை அமைப்பாளர் ராஜேஸ்வர ராவ் 

மிகவும் திறமையான இசை அமைப்பாளர், ஆந்திர மாநிலத்தவர் . இந்திய பாரம்பரிய இசையையும், பிற வகை இசையையும் அழகாக பிணைக்கும் நுணுக்கமும், பிற கலாச்சார இசைக்கருவிகளை நேர்த்தியாக கையாளும் திறனும் பெற்றவர் . அவர் தமிழில் கோலோச்சிய படம் மிஸ்ஸியம்மா [1955]. அவர் அநேக குரல்களை ஒரே படத்தில் உபயோகித்து நல்ல பாடல்களை உருவாக்கியுள்ளார். ஆனால் அவருக்கு உள்ளூர நமது இசை அமைப்பு தோற்று விடும் , மூட்டையைக்கட்டிக்கொண்டு  கிளம்ப வேண்டியது தான் என்றே நம்பினாராம் . ஏன் என்றால் இசை வடிவத்தில் திரு சக்ரபாணியின் [நாகி ரெட்டி -சக்ரபாணி -விஜயா வாஹினி ஸ்டூடியோஸ்] குறுக்கீடு மிகவும் இருந்ததாம் . ஆனால், இறுதியில் பாடல்கள் பெரும் வெற்றி பெற்று ராஜேஸ்வர ராவின் இசை திறன் பாராட்டு பெற்றது. இந்தப்பதிவில், மிஸ்ஸியம்மாபடப்பாடல்களே கொடுக்கப்பட்டுள்ளன. பாடலை ப்பாடுவோர் [நடிகர்/நடிகை] யாராயினும் பிறர் பாடலைக்கேட்டு அதற்கான முகபாவம் காட்டுவது இப்படத்தில் இடம் பெற்றுள்ளது . அதனால், குடும்ப அமைப்பின் யதார்த்தம் சிறப்பாக உள்ளது. இது பரவலாக உள்ளது. சில காட்சிகளில் சாவித்ரி காட்டும் உடல்மொழி அந்த முதல் காலகட்டத்திலேயே பெரும் திறன் வெளிப்பாடு எனில் மிகையே அல்ல. மொத்தத்தில் எதிலும் செயற்கைத்தனம் இல்லாத படம் என்று சொல்லலாம்.   இனி பாடல்களை பார்ப்போம்.

பாடல்கள் : தஞ்சை ராமையா தாஸ்

அறியாப்பருவமடா [பி சுசீலா ]

அழகாகப்பாடப்பட்ட பாடல்; குரல் வளம் மற்றும் பாடும் திறன் நன்கு வெளிப்பட்டுள்ளது. எனினும் ஆரம்பகால சுசீலா பெரிதும் மொழிப்பயிற்சி இன்றி பாடியுள்ளது தெரியத்தான் செய்கிறது.. குறிப்பாக, "பருவமடா" என்ற சொல் பரூவமடா   பரூவமடா   என்றே ஒலிக்க கேட்கலாம். குறை சொல்வதற்காக வரவில்லை. ஏனெனில், மொழியின் பண்பு மாறுகிறதல்லவா -அதை உணர்த்தவே சொல்கிறேன். ஆனால் அந்தநிலையில் கவிஞரைத்தவிர பிறர் அனைவரும் தெலுங்கு மொழியினர் .

பாடலைக்கேளுங்கள்--  இணைப்பு

https://www.google.com/search?q=ariyaparuvamada+video+song+missiyamma+download&newwindow=1&sca_esv=53119dc2d4566d04&sca_upv=1&sxsrf=ADLYWIJqAUMWEO-O3rgRStoVpCoqF9c_aw%3A1723897830348 missiyamma 1955 ps

வாராயோ வெண்ணிலாவே - எம் ராஜா , பி லீலா

இவ்விருவரும் நன்கு தமிழில் பயிற்சி பெற்றவர்கள் அதனால் உச்சரிப்பில் இடர் இல்லை. மேலும் , இவர்கள் வெவ்வேறு நிலைப்பாடு கொண்டு பாடுவது இப்பாடலின் சிறப்பு . ஒருவரை ஒருவர் குறை கண்டு புலம்புவது பாடலின் அடிநாதம், நிலவு சாட்சிப்பொருளாக உள்ளது.

நிலவுக்காட்சி என்றால் மார்க்கஸ் பார்ட்லே[ ஒளிப்பதிவாளர்]  க்கு கேட்கவா வேண்டும் , சிறப்பாக ஒளி அமைத்துள்ளார் . பாடலில் கவிஞரின் திறன் பளிச்சிடக்காணலாம் .

https://www.google.com/search?q=vaaraayo+vennilave++video+song+missiyamma+download&newwindow=1&sca_esv=53119dc2d4566d04&sca_upv=1&sxsrf=ADLYWILkXaZnd6t1zQBLQUMNlPJhs2W_7Q%3A17 AMR PL

தெரிந்து கொள்ளணும் பெண்ணே - பி லீலா

பெண்ணுக்கு அறிவுரை சொல்வது போல பாடி ஆண்களின் சில நடவடிக்கைகளை கிண்டல் செய்யும் சாவித்ரி , மெல்ல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார் , நல்ல பாடல். ஜமுனா அதைக்கேட்பது போல் காட்சி. அது முடிந்ததும் ஆண் பாடி பெண்களின் சில பண்புகளை கிண்டல் செய்வதாக காட்சி.

பழகத்தெரியவேணும் - எம் ராஜா பாட , ஜமுனா ரசித்து அபிநயிக்கிறார் . கிட்டத்தட்ட இவ்விரு பாடல்களும் ஒரே நடை யில் அமைந்தவை.. கேட்க இனிமையானவை. ஜமுனா பங்கு பெரும் பாடல்கள் அனைத்திலும் ஒரு பயிலும் மாணவியாகவே வருவதால் மிக எளிய நடன அசைவுகள் அவருக்கு அமைத்துள்ளனர். கேட்டு ரசிக்க இணைப்பு 

https://www.google.com/search?q=THERINDHU+KOLLANUM+PENNE+++++video+song+missiyamma+download&newwindow=1&sca_esv=53119dc2d4566d04&sca_upv=1&sxsrf=ADLYWILbOWv0vaYNrmdlaq_C PL

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - எம் ராஜா, பி சுசீலா

அந்நாளைய மெகாஹிட் பாடல். வசீகர குரலில் எம் ராஜா பாட சுசீலா தொடர்ந்து பாட ஜமுனா வாயசைத்து அபிநயிக்கும் காட்சி. இது சாவித்ரிக்கு எரிச்சலூட்ட காண்பவர்க்கு நல்ல விருந்து. இன்றளவும் இப்பாடல் தன் ரசிகர் பட்டாளத்தை இழக்கவே இல்லை. அவ்வளவு நயமான அமைப்பு, இசை கருவிகளின் மென்மையான ஆதிக்கம் . கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=BRINDAVANAMUM+NANDHA+KUMAARANUM+VIDEO+SONG&oq=BRINDAVANAMUM+NANDHA+KUMAARANUM+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCA AMR PS

எனை ஆளும் மேரி மாதா -பி லீலா

ஒரு கட்டத்தில் சாவித்ரி மனமொடிந்து தன இஷ்ட தெய்வம் மேரி மாதாவை வணங்கிப்பாட, மொத்த குடும்பமும் குழப்பமும் அதிர்ச்சியும் கொள்வதாக காட்சி. லீலா தேர்ந்த பாடகி, உணர்ச்சி ப்ப்பூர்வமாக சோகம் ததும்ப  துயர் வெளிப்பட பாடியுள்ளார். இப்பாடல் படத்தில் திருப்புமுனை என்றே சொல்லலாம் சாவித்ரி அற்புதமாக பாவம் காட்டி நடித்துள்ளார். காட்சிக்கு இணைப்பு.

https://www.google.com/search?q=YENAI+AALUM+MARY+MATHA+++++video+song+missiyamma+download&newwindow=1&sca_esv=53119dc2d4566d04&sca_upv=1&sxsrf=ADLYWILSUqn0gVNBUjZcVvhWcKRhzIO P L

இவ்வாறு ஒரே படத்தில் வெற்றிப்பாடல்களாகவே தொகுத்த இசை அமைப்பாளர் ராஜேஸ்வரி ராவ், போற்றுதலுக்குரியவர் .

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...