Wednesday, August 21, 2024

SALEM SUNDARI-42

 SALEM SUNDARI-42

சேலம் சுந்தரி- -42

மாடசாமி வீட்டுக்கு சுந்தரி போகிறாளா? ஒரு தைரியம் தான் கௌரியுடன் போவதால் மாடசாமி ஒன்றும் சொல்ல மாட்டார், மேலும் ஒளிந்து மறைந்து எந்தப்பெண்ணும் / பெண்ணிடமும் பேசுவதை விரும்பாதவர்; மேலும் வீட்டில் வேறு நபர்கள் இருப்பார்களே போன்ற பல கேடயங்கள் இருப்பதால் கோபித்துக்கொள்ள மாட்டார் [இதெல்லாம் கதாசிரியினனின் மனஓட்டம். போடா நீயும் உன் மன ஓட்டமும் என்கிறீர்களா? சிந்தனைத்திறன் இல்லாதவன் எதையாவது பேசுவது எழுதுவது      இயல்பு தானே.கடந்து செல்லுங்கள். ].

வேறொன்றுமில்லை,, திருமண பத்திரிகை வந்து விட்டது. முதல் அழைப்பே மாடசாமி வீட்டினருக்கு வழங்கினால் தனது உள்ளார்ந்த நன்றிக்கடனை வெளியிட்டது போலவும் இருக்கும்; அப்பட்டம்மான தம்பட்டம் என்றோ, ஜால்ரா என்றோ  சொல்லிவிட முடியாது. அப்படியானால், ராமசாமி வகையினர்? அவர்கள் முக்கியஸ்தர்கள் தான். எனினும் முதல் அறிமுகம் மாடசாமி ; அவர்மூலம் தான் பிற நட்புகள் தோன்றியது.

சுந்தரியைப்பொறுத்தவரை மாடசாமி அண்ணன் ஸ்தானத்தில். இருப்பவர்.  அவரோ, இவளை கௌரியின் பிரதியாகவே நினைக்கிறார் நடத்துகிறார்.

மேலும் ராமசாமி, அம்ஜம் , சுபத்திரா , மாடசாமி, கௌரி இவர்கள் செயல்களைப்பார்த்து பல நுணுக்கங்கங்களைப்புரிந்து கொண்டுள்ளாள். எனவே, மெயின்கார்ட் கேட் பகுதியில் வரும் வழியிலேயே, வெற்றிலை பாக்கு, பழம் புஷ்பம் அனைத்தும் வாங்கிக்கொண்டாள்.

பஸ் ஒன்றை தவிர என்னென்னவோ தெருவில் ஓடிக்கொண்டிருந்தது. கௌரி-- பொறுமை இழந்தாள் -"அக்கா ஆட்டோவுல போய்டலாமா? அம்மாவைப்போய் பார்க்கணும் . காலைல  5 நிமிஷம்   பார்த்தது தான் என்று வெளிப்படையாகப்பேசினாள் , சரிக்கா  என்றாள் சுந்தரி.  

யார், யாருக்கு அக்கா? இருவருமே யோசித்தனர்.  சரி, மரியாதை நிமித்தம் இருந்துவிட்டுப்போகட்டும் என சமாதானம் அடைந்தனர்.

கௌரி ஆட்டோ பிடித்தாள் 10 நிமிடத்தில் வீடு வந்தனர். எளிமையான வீடு,

சிறிய குடும்பம் பாட்டி, மாடசாமியின் தமக்கை +மாடசாமி இவர்களே.

மாடசாமி குளித்து விட்டு வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு தீபம் ஏற்றிவிட்டு நமஸ்கரித்து மாடிக்கு ஓடி உச்சிப்பிள்ளையார், மற்றும் சமயபுரம் அம்மன் திக்கு நோக்கி ஆழ்ந்து வணங்கி பின்னர் கீழே வந்தார்.

மாடசாமி, -சுந்தரி-- பரஸ்பரம் கை கூப்பி வணங்கினர். கௌரி, தன் தாயை அறிமுகம் செய்வித்து மாமா ஆபீஸ் சுந்தரியக்கா என்றாள்.. ஆங் அன்னக்கி போன் பண்ணினீங்கள்ல, வாங்க என்று கைகூப்பி வரவேற்றார்..

தாயார் [ பாட்டி] அறைக்கு சென்று அறிமுகம் வணக்கம் எல்லாம் ஆயிற்று.

சார் கல்யாண அழைப்பு என்று வெற்றிலை பாக்கு பழம் வைத்து தட்டுடன் மாடசாமிக்கு கொடுக்க, அவர்" கௌரி   வாங்கிக்க என்றார்.. கௌரி வாங்கிக்கொள்ள, இன்னொரு அழைப்பை மாடசாமி பெயர் எழுத அவர், மாடசாமி அண்ட் பேமிலி-- மொத்தமா போட்டுருங்க. கௌரி அது உனக்கு, இது நம்ம வீட்டுக்கு என்றார்.     எங்க மூணு பேருக்கும் 1 அழைப்பு போதும்;

கௌரி வெளியூர், அதுவும் அதிகாரியென்று சிரித்தார் மாடசாமி..

 . போங்க மாமா, நீங்கல்லாம் இல்லைன்னா நான் வெறும் கரி தான் அதிகாரியாவது ஒண்ணாவது என்று மாமனை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் கௌரி.

 கல்யாணத்துக்கு பெரியசாமி தான் நாதஸ்வரம் போல இருக்கு என்றாள் கௌரி. பலரும் வியக்க கௌரி சொன்னாள் -அற்புதக்கலைஞன், உலகப்புகழ் அடையும் திறமை இருக்கு எங்க பங்க்ஷன்லயே அபார வாசிப்பு;   மிரண்டு போனாங்க.

அவரே [பெரியசாமி] போன் பண்ணி சொன்னார் உங்க ஆசி யில் மேடம் .ஒரு கல்யாண சான்ஸ் வாங்கி கொடுத்திருக்காங்க என்று சொன்னார்.

மேடம் போலவே இந்த கௌரியும் பயங்கர ஆளுமை தான் போல என்று வியந்தாள் சுந்தரி. இரவு உணவுக்கு- சுந்தரியையும் அமர்த்தி சிறப்பான தோசை, செட்டிநாடு குழம்பு வழங்கினர்.  சுந்தரி உண்டு மகிழ்ந்து, விடை பெற்ரறாள். கௌரியும் உடன் வந்து கண்டோன்மெண்ட் போகும் பஸ்ஸில், அனுப்பி வைத்தாள் சுந்தரியை.

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. It's a delight to read your write up every morning. I wish you publish these articles in a book form. I never knew that you had so much talent. Please continue the good work. God bless you . RK

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...