Tuesday, August 6, 2024

T M SOUNDARARAJAN-16

 T M SOUNDARARAJAN-16

டி எம் சௌந்தரராஜன்-16

மஹராஜா ஒரு மஹராணி [இரு மலர்கள் -1967] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ், சதன் , ஷோபா

டி எம் எஸ் பாடல்களில் வித்யாசமான ஒன்று . பாடல் நகைச்சுவையும் குறும்பும் மிளிரும், குறிப்பாக இறுதிச்சரணம் முற்றிலும் -வினைமுற்று என்றே சொல்லலாம் . சிவாஜி கணேசன் குறும்பு காட்டி நடிக்க எதுவாக கையில் பொம்மை , பொம்மைக்கு குரல் சதன் அவ்வப்போது பாடுவது சிரிப்பது என அட்டகாசம். சிறுமிக்கென பாடியிருப்பது அன்றைய சிறுமி ஷோபா [இன்றைய நடிகர் விஜய் யின் தாய்

 ஷோபாவும் பின்னணிப்பாடகர் சுரேந்தரும் ஒரே கால கட்ட த்தில் குழந்தைப்பாடகர்களாக அறிமுகம் ஆனவர்கள். . கேட்டு மகிழ  இணைப்பு இதோ

https://www.google.com/search?q=magataaja+oru+maharaani+video+song&oq=magataaja+oru+maharaani+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYC   iru malargal 1967  vaali  tms sadhan shoba msv 

கேட்டவரெல்லாம் பாடலாம் [தங்கை-1968] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ்

மற்றுமோர் குறும்பு/ விளையாட்டு  நிறைந்த, பாடல். முற்றிலும் கிண்டல் தலைதூக்கும் பாவம் , தாள மாறுபாடுகள் , சேஷ்டைகள் என பயணிக்கும்  பாடல் . இந்த இறுதி மெட்டு பதிவிடுவதற்கு முன் கைகலப்பு ஒன்று தான் பாக்கி என்னும் அளவிற்கு கருத்து யுத்தம். ஒரு போஸ்ட்மேன் சொன்ன படி தேர்வான 3 வது ட்யூன். அந்த சுவாரஸ்யங்களை பாடகர் அனந்து விளக்குகிறார் 2 இணைப்புகளையும் கேட்டு ரசியுங்கள்

https://www.youtube.com/watch?v=KblelQwERhc kettavarellam thangai 1968

https://www.youtube.com/watch?v=wsL6LCqhXT0 ananthu

பூமியில் இருப்பதும் [சாந்தி நிலையம் -1969] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ் குழுவினர்.

முற்றிலும் புதிய வகை இசை/காட் சி படப்பிடிப்பு . பலூனில் பறக்கும் நடிகர்கள்;  டி எம் எஸ் குரல் நாகேஷிற்காக. மிகவும் குதூகலமும் விறுவிறுப்பும் பாடலின் சிறப்புப்பண்புகள். பல்லவி முடிந்து சரணம் வந்ததும் தபலா வில்  ஒலித்த தாள ஜாதியும், கையில் இடும் தாளமும் வெகுசிறப்பாக பயணிக்க பாடல் உண்மையிலேயே வான் வெளியில் மிதக்கிறது. தாளம் ஹனுமந்தப்பா ; காட் சி / பாடலையும் மேலும் உயர தூக்கிய இரு துணைகள் கோரஸ் குரல்களும் மார்கஸ் பார்ட்லே அவர்களின் வண்ண ஒளிப்பதிவும்.. இவை போன்ற பிலிமில் அமைந்த வண்ண ஜாலங்களை இனி காண முடியாது.. கேட்டு ரசிக்க இணைப்பு இதோ:  

https://www.google.com/search?q=boomoyil+ituppadhum+video+song&oq=boomoyil+ituppadhum+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHCAQQIRigAdIBCTIz shanthi nilaiyamkd msv  tms

மதன மாளிகையில் [ ராஜபார்ட் ரங்கதுரை -1974] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் பி சுசீலா

மிகவும் நுணுக்கங்கள் நிறைந்து பிரமிக்க வைக்கும் அமைப்பு .ஆம் சொல்லாடலில் , சொற்கட்டுகளில் கவிதை நயம் ஒரு புறம், மறுபுறம்  நாடக பாணியில் துவங்கி, உடனே நவநாகரீக இசைக்களத்துக்கு மாறி ,விதவிதமான ஓவர்லாப்பிங் / கௌன்டர்பாய்ண்ட் உத்திகளில் டி எம் எஸ் /சுசீலா சர்வ அலட்சியமாக ஒருவரை ஒருவர் கடந்து  பாடுவது , ஷெனாயின் சிலிர்ப்பில் தோன்றும் வசீகரம் ஹே ஹெ ஹே ஆஹ ஹா என்று ண் குரல் மேல் மண்டலத்தில் சஞ்சரிப்பது கேட்க வெகு ரம்மியம். இந்தப்பாடல் தேர்வும் வார்த்தை யுத்தத்திற்கு பின்னரே தேர்வான 2 ட்யூன்களை கலந்து உருவானது . கேட்டு மகிழ இணைப்பு.

https://www.google.com/search?q=madhana+maligaiyil+video+song+download&newwindow=1&sca_esv=24cfdd5209cb3bf0&sca_upv=1&sxsrf=ADLYWIJIalI89TdWbRhj6AB_ZZS_3UVsag%3A1722089509289&ei=JQClZp

இப்பாடலின் பிற பண்புகளை QFR குழுவின் விளக்கங்களுடன் ரசிக்க இணைப்பு இதோ :

https://www.google.com/search?q=madhana+maligaiyil+QFR+song+download&newwindow=1&sca_esv=24cfdd5209cb3bf0&sca_upv=1&sxsrf=ADLYWIKbS4dAtEmrhPrbXqXC-AuF9WiOyA%3A1722076214747&ei=Nsyk qfr

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...