Tuesday, August 6, 2024

THE GENERATION GAP

 THE GENERATION GAP

தலைமுறை இடைவெளி

இது என்ன?  உண்மையா பொய்யா ? எனில் இருவேறு விடைகள் கிடைக்கும் . ஆம் இது உண்டு என்போரும் , இல்லை இது இல்லாத ஒன்றை சித்தரிக்கிறோம் என வாதிடுவோரும் உண்டு.

கிட்டத்தட்ட ஆத்திக /நாத்திக வாதங்களின் நிலைப்பாடு போன்ற ஒன்றே என நான் உணருகிறேன்.

அதாவது ஏற்பதும் மறுப்பதும் ஒரு சில சொந்த வாழ்வு அனுபவங்கள் சார்ந்து தோன்றக்கூடிய புரிதல் என்றே நினைக்க இடமுண்டு. .

இதன் அடிப்படை என்ன எனில் ஒரே குடும்பத்தில் அல்லது ஊரில் வாழும் நபர்களிடையே எழக்கூடிய மனதாளாவிய  வேற்றுமைகள் / வேறுபாடுகள் என புரிந்து கொள்ளலலாம். இவை மனம் சார்ந்து எழும் மாறுபட்டபார்வைகள் என்ற அளவில் புரிந்துகொண்டு அதோடு நிறுத்திக்கொள்வது நலம். இதற்கு சில நடைமுறை நிகழ்வுகளைப்பார்க்கலாம். .

சமகால சினிமா [contemporary movies ]

இன்றையய சினிமா வை 14-30 வயதுவரை இருப்போர் ஏற்பதையும் ரசிப்பதையும் நம்மால் [வயது 50-55 கடந்தவர்களால் ] ஏற்க முடிகிறதா? விடை கிடைத்திருக்குமே ; ஆம் அது தான் சினிமா என்ற ஊடகத்திற்கு நாம் ரசித்து வகுத்து, மகிழ்வுற்ற கால இலக்கணங்கள் வேறு

[நல்ல நடையுடை பண்புகள் ஹீரோ வின் அடையாளம்]  இன்றோ   55 நாள் தாடி, படிய வாராத தலை வாயில் புகையும் ஒரு துண்டு பீடி , அவனைச்சுற்றி அவன் நிகர்த்த 25 வயது வாலிபர் அனைவரும்        8 ம் வகுப்பு / அதற்கும் கீழே முடங்கியோர்.. இந்த ஆசாமியை   house surgeon நிலையில்[MBBS ] உயர்கல்வி பெரும்  நவ  நாகரீக யுவதி  தலையை சாய்த்துக்கொண்டு ஸ்கூட்டரில் இவனைப்பார்த்தபடியே காலையில் பயிற்சிக்கூடம் செல்கிறாளாம்.. 

அந்த பீடி-தாடியை,, இந்த அழகுப்பெண்மணி 'மனம் பறிகொடுத்து' காதலிக்கிறாளாம்.  

நமது பேரன்/ பேத்திகள் இப்படியானவர்களா?

இல்லை ஆனாலும் இந்த பரட்டையனை ஏற்கின்றனர். இதுவே தலைமுறை இடைவெளி என முத்திரை குத்தப்படுகிறது.

எனினும் தலை முறை இடை வெளி என்பது அநேகமாக "ரசனை " என்னும் ஈடுபாடு / விருப்பம் சார்ந்த ஒரு செயல்பாடு எனக்கொள்ளலாம் 

பையன்கள்

இன்றைய பையன்கள் தலை முடி அமைப்பை பார்த்தால் பக்கவாடுகளில் மழுங்க மழித்து, முடி தலையின் மேற்பகுதியில் முளைப்பாரி போல் நீண்டு வளர்த்து புல்வெளிபோல் இருக்க , பார்க்கவே வெறுப்பு தோன்றுகிறது. அது என்னவோ கிடைத்தற்கரிய கேச ஐஸ்வர்யம் என்பது போல் நடந்துகொள்கின்றனர் . பெற்றோர் சொன்னாலும் பலன் இல்லை.. ஒரு சில பள்ளிகளில் கேம்ஸ் ஆசிரியர் இது போன்ற முளைப்பாரி தலையன்களை அனுமதிப்பதில்லை . மாறாக தானே கத்தரி கொண்டு தாறுமாறாக எலி குதறியது போல் சின்னாபின்னமாக முடியை சிதைத்து , வெளியில்  நடமாட முடியாமல்  செய்து விடுகின்றனர்.

ஒரு சில பெற்றோரே இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்க்க, பெற்றோர் ஆசிரியர் மோதல் உருவாகிறது. ஒரு சில பள்ளி நிர்வாகங்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடவடிக்கை எடுப்பதால் அடாவடி பெற்றோர் அடங்கி இருக்கின்றனர், இல்லையேல் பாதி படிப்பில் TC வாங்கிக்கொண்டு வெளியேற வேண்டியதுதான். பெற்றோரும் பையனுக்கு பரிந்து கொண்டு முளைப்பாரி மண்டைக்கு ஆதரவு தருகின்றனரே "எங்கே இருக்கிறது தலைமுறை இடை வெளி?". .

பெண்கள்

அநேக பெண் குழந்தைகள் பின்னல் இடுவது இல்லை.. முடி கொத்துமல்லி கட்டு போல் ஒரு ரப்பர் பாண்ட் கொண்டு பிணைக்கப்பட்டு தொங்குகிறது .

பல தாய்மார்களே இதே போல கொத்து முடி ஆன்மாக்களே. அதனினும் அதிர்ச்சி தருவது "பொட்டு" இருக்கிறதா,  இல்லையா? என்று லென்ஸ் வைத்து தேட வேண்டும்.                                            சில சிலபள்ளிகளின் தீவிர மதநம்பிக்கைகளுக்கு இது போன்ற 'இருந்தும் இல்லாத 'பொட்டு"   , நினைத்ததை சாதிக்க எளிய வழி. எனவே அவர்கள் குறுக்கிடுவது அறவே இல்லை.

நன்றாக பளிச் என்று பொட்டு வைத்துக்கொள் என்று பளிச் என்று சொல்ல தாய்மார்களே தயங்குகின்றனர். வர வர பொட்டு நெற்றியில் இருந்து கீழிறங்கி இரு புருவங்களுக்கிடையில் சிறிய புள்ளி யாக சுருங்கிவிட்டது.

இந்த அழகில் எதை தலைமுறை இடை வெளி என்று பெயர் சூட்டுவது?. .இதுவும் தலை முறை இடை வெளி குறுகி வருகிறது என உணர்த்துகிறது.

ஒன்று தெளிவாகிறது ஏதாவது ஒரு செயல் / நடை முறையை எதிர்த்தால் நீங்கள் பழமைவாதி- அல்லது தலைமுறை இடைவெளியால் துன்பப்படுபவர் அல்லது சகிப்புத்தன்மை இல்லாதவர்

சகிப்புத்தன்மை பெரியவர்களுக்கு இருக்கவேண்டும், இளையவர்களுக்கு அல்ல என்ற சகிப்புத்தன்மை அற்ற நிலையே தலைமுறை இடை வெளி என்று பேசப்படுகிறது. எனவே இந்த சொல்லாடல் தேவைக்கேற்ப களம் காண்கிறது எனில் மிகை இல்லை

நன்றி 

அன்பன் ராமன்   

 

 

1 comment:

  1. இப்போதெல்லாம் மனதில் ஏற்படும் வக்கிர எண்ணங்களை செயல்படுத்துவதே நாகரீகம் என்ற மாயையில் உலா வருகிறது. அவைகளின் சைடு எஃபக்ஸ்ட் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வரை தெரிவதில்லை. தெரியும் போது ஒன்றும் செய்ய முடிவதில்லை. பெரியோர்கள் தரும் நல்ல ஆலோசனைகளையும் அறவே கேட்பதில்லை. மதிப்பதும் இல்லை. இன்னும் சில பிரகிருதிகளுக்கு என்ன நாம் செல்கின்றோம் என்பதே தெரியவில்லை. எல்லாம் காலத்தின் கோலம்.

    ReplyDelete

SWEET FLAG

  SWEET FLAG   Acorus calamus [Tam: vasambu ]  A herb that grows to about 2 feet and has prominent leaves   Vacha ( Acorus calamus  L...