Monday, September 2, 2024

SALEM SUNDARI-47

 SALEM SUNDARI-47

சேலம் சுந்தரி- -47

குண்டூரில் கல்யாண அழைப்பு சுப்பிரமணி நண்பர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறான்.

முதல் அழைப்பு PK சார் இல்லத்தில் தட்டில் வெற்றிலை பாக்கு பழம் பூ வைத்து சாஷ்டாங்கமாக வணங்கி பவ்யமாக பத்திரிகை வைத்தான்.

பெரியவங்க கண்டிப்பா வரணும் , நீங்க வந்தா  தான் நான் கல்யாணம் கட்டுவேன் அதை சொல்லி தான் பொண்ணு பாக்கவே ஒத்துக்கிட்டேன் கண்டிப்பா வரணும் .

என்னடா அவ்வளவு தூரம் திருச்சி வரைக்கும் வரச்சொல்ற என்றார் உமா பஞ்சாபகேசன். என்னம்மா நான் என்ன பஞ்சாபுக்கா கூப்பிடறேன் நம்ம தமிழ்நாட்டுக்கு அதுவும் கல்யாணத்து க்கு தானே மறுக்காம வந்தே ஆகணுமென்று ஓங்கி சொல்லிவிட்டான்.

வரோம் வரோம் கவலைப்படாதடா என்றார் PK சார். நன்றி சார் என்று கைகூப்பி வணங்கினான். பத்திரிகை பார்த்த PK தம்பதி யினர் மிரண்டனர்.

சுப்பு என்னடா இது பத்திரிகைக்கே ஏகமா செலவு பண்ணிருப்ப போலிருக்கேஎன்றார் உமாPK .

தெரியாதும்மா, பொண்ணு வீட்டுக்காரவுங்க பத்திரிகை போட்டு அனுப்பி இருக்காங்க. ரொம்ப செலவு செய்யக்கூடாது னு கறாரா சொல்லி தான் ஏற்பாடுகளே நடக்குது.

நெஜம்மாவே ரொம்ப நன்னா பத்திரிகை டிசைன் பண்ணிருக்காங்கடா.”                       

சிவகாமிகிட்ட நான் சொன்னேன் னு  சொல்லு -எக்ஸலண்ட் என்றார் உமாPK.

சரி நீ என்ன சொல்ல, உனக்கு சங்கோஜமா இருக்கும் நானே சொல்றேன் என்று சிவகாமி [சுந்தரி] க்கு போன் போட்டார் உமா.

 சிவகாமி பத்திரிகை பாத்தேன் அப்ப் பா எவ்வளவு FINE டிசைன் -கங்க்ராட்ஸ் என்றார் உமா.

"அம்மா எனக்கு ஒண்ணுமே தெரியாதும்மா. இங்க ஆபீஸ் ராமசாமி சார் / மாடசாமி சார் சொல்லி ஒரு கம்பியூட்டர் சென்டர்ல செஞ்சு குடுத்தாங்க. சும்மா ஹை குவாலிட்டி யா பண்றாங்க. பத்திரிகை நல்லாருக்குனு சொன்னது ரொம்ப சந்தோசம்மா, கண்டிப்பா சாரக்கூட்டிக்கிட்டு கல்யாணத்துக்கு வந்துருங்கம்மா" என்றாள் .

"என்னடி சொல்ற, சார் தான் என்னை கூட்டிக்கிட்டு வரணும்" என்றார் உமா.

"சரிம்மா நான் ராமசாமி சார் மாடசாமி சார் ரெண்டுபேரையும் சார் கிட்ட பேசச்சொல்றேன்" என்றாள்  சுந்தரி. .  நீ ஏன் கவலைப்பட  உங்க வீட்டு மாப்பிளை[சுப்பு] நீங்க கல்யாணத்துக்கு வந்தாதான் கல்யாணம் னு கறாரா சொல்லிட்டான். அதுனால அவசியம் வருவோம். என்றார் உமா.

"கண்டிப்பா வாங்கம்மாஎன்று சுப்பு கோரிக்கை வைத்தான்.

வரோம் வரோம் என்றார் PK .

ரொம்ப நன்றி சார் என்றான் சுப்பு கண்ணீரை மறைத்தபடி.

இப்போது ரெ வுக்கு முறைப்படி பத்திரிகை வைத்து "அவசியம் வாங்கண்ணா" என்றான் சுப்பு. மேலும் உங்கவூர் தான் கல்யாணம்." என்றான்

சரி எங்கவூர்ல என்ன இருக்கு? ம் வெய்யில் தான் என்றான் ரெ

ஓ-- இங்க 24 மணியும் நிலாக்காயுதாக்கும் என்றான் சுப்பு.

எப்புடியும் குண் டூர்ல ரிசெப்ஷன் வெப்பீங்கள்ல என்று நழுவப்பார்த்தான் ரெ .

என்னது   குண்டூர்ல ரிசெப்ஷனா அதெல்லாம் கிடையாது முக்கியப்பட்டவங்க கல்யாணத்துக்கே வந்துடுவாங்க. மற்றபடி ஒரு சில ஆளுங்களுக்கு இங்கயே கான்டீன்ல சமோசாவும் டீயும் தான். வேற ஒன்னும் தாம் தூம் னா அப்புறம் என் பொண்டாட்டி என்னை சும்மா விடமாட்டா, நாம ரெண்டு பேரும் பிளாட்பாரத்துலேயே அடுத்தவர் காதைப்பிடிச்சுக்கிட்டு தோப்புக்கரணம் போடவேண்டி வரும் .   

இதெல்லாம் பேசிட்டீங்களா உங்க ஒய்ப் கிட்ட? என்றான் ரெ . அவங்க போன் நம்பர் கெடச்சுடுத்தா? என்று  உள்ளூர ஏக்கத்துடன் துருவினான் [அந்த விஜி அட்ரஸ் / போன் நம்பர் தரமாட்டாள்  ஆனாலும் இவன் மாதம் 2 தடவை சென்னையில் குப்பை .  பொறுக்குபவன் போல அலைகிறான் ]..

அன்னக்கி போட்டோ வந்துச்சுல்ல, பின்னால அட்ரஸ் போன் நம்பர் இருந்துச்சு நைசா குறிச்சுக்கிட்டேன். சாருக்கு தெரிஞ்சா திட்டுவாரு.

தெரியாத்தனமா ஹலோ, சுப்பிரமணி னு சொன்னேன். எந்த சுப்பிரமணி? னு கொதித்துவிட்டாள் . நல்லவேளையா குண்டூர் சுப்பிரமணி னு சொல்லவும், அப்படி சொல்லுங்க சும்மா சுப்பிரமணினா என்ன தெரியும்?  என்ன போன் ? என்ன விஷயம் னு அதிகாரி மாதிரி கேக்கறா .

ஒன்னும் இல்ல கல்யாணம் ரொம்ப செலவு அது இதுனு வேண்டாம்அப்படீன்னேன்.

அதெல்லாம்பெரியவங்க கிட்ட பேசுங்க னு சொல்லிட்டு,  இந்த பாருங்க வெத்திலை பாக்கு பீடி சிகரெட் இப்பிடி எல்லாம் பழக்கம் இருந்தா விட்டுருங்க ;என்னடா இப்பிடி 'ஆதிக்க நாயகியா 'இருக்காளே னு வருத்தப்படாதீங்க . உங்க நன்மைக்கு தான் சொல்றேன். அதுவும் நீங்க போன் கூப்பிட்டதால சொல்றேன் நானா எதுவும் ஆரம்பிக்கல னு கறாரா சொல்லிட்டா. இந்த அழகுல  குண்டூர் ரிசெப்ஷன் என்று கற்பனையே உதவாது சார்.

கரெக்ட் கரெக்ட் தான், அனாவசிய செலவு வேண்டாம் னு சொல்றது ரைட் தான் என்றான் ரெ.

அதுனால தான் திருச்சிக்கு என்று இழுத்தான் ரெ .

சுப்பிரமணிஎன்ன பிரென்ட் கல்யாணத்துக்கு போறது அனாவசிய செலவா? என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான்

“ஆமாம், நீங்க மாசம் 2 வாட்டி சென்னைக்கு போறீங்களே, அது என்ன செலவு சார்? என்று முறைத்தான் சுப்பு. அது அது அது ஹி ஹீ என்று தடுமாறினான் ரெ

நிஜமாகவே க ரெ மிரண்டான்.

சுப்பு "சார் உங்களுக்கு ராமசாமி சாரை பாக்க பயம் இந்தியாவுல எங்க போனாலும் அவருக்கு எப்பிடியோ தெரிஞ்சுடுது .அவரு நீங்க என்னிக்கி எங்க போனீங்க எந்தெந்த தெருவுல சுத்தினீங்கன்னு, புட்டு புட்டு வெக்கறாரு ;உங்களால பதில் சொல்ல முடியல. அன்னைக்கே நீங்க தவறை ஓத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டிருந்தீங்கன்னா இப்பிடி ஓடி ஒளிய வேண்டாம். மேலும் எத்தனையோ வகையில  அவர் உங்களை கை தூக்கி விட்டிருப்பார். இந்த அட்டெண்டர் க்கு என்ன தெரியும் னு பாரா முகமா இருந்தீங்க , இப்ப நீங்க அவரு முகத்தைபாக்கவே முடியாம , சொந்த ஊருக்கு போறதுக்கு வெய்யில் மழை னு ஏதோ வானிலை அறிக்கை வாசிக்கிறீங்க”.. “

எல்லாரையும் போல நீங்களும் வாங்க சார்; அவங்கள்லாம் அனுபவசாலிங்க சார். அப்படி   எல்லாம் இங்கிதமில்லாம நடந்துக்கமாட்டாங்க..

நான் உங்களை கூட்டிகிட்டு வந்திருக்கேன் னு தெரியும் சார். உங்களோட சண்டை போடறது \தான் அவுங்க வேலையா?  நீங்களா குழம்பிப்போய் மேல மேல தப்பு பண்ணாதீங்க. சகஜமா பேசி பழகுங்க உரிய நேரத்துல மன்னிப்பு கேட்டா மாட்டேன்னா சொல்லுவாங்க? பெரியவுங்க பெரியவங்க தான். நீங்க கல்யாணத்துக்கு வர்றீங்கஎன்று ரெ பேசமுடியாமல் அமுக்கி விட்டான் சுப்பு.. இந்த முறை மன்னிப்பு கேட்டுவிடுவதென முடிவெடுத்தான் ரெ

பின் குறிப்பு

இந்த சுப்பிரமணி 3 விசாலாட்சியை சமாளிப்பான் என்று நினைத்தேன்; இருக்கும் நிலவரத்தை பார்த்தால் இந்த விசாலாட்சி 4 சுப்பிரமணியை இடது கையால் சமாளிப்பாள் என்று தோன்றுகிறது. இருக்கட்டும். பெண்களுக்கு, இந்த ஆளுமை அவசியம் தான். . க ரெ-- பாவம், விஜி விஜி என்னும் விதியை துரத்திக்கொண்டிருக்கிறான். ஈஸ்வரோ ரக்ஷது.

தொடரும்

அன்பன் ராமன்

2 comments:

  1. க. ரெ. ரொம்ப விஜிலெண்டா விஜியை லென்ஸ் வெச்சு தேடி அலைகிறான். பாவம்.

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...