Thursday, October 24, 2024

MUSIC DIRECTOR T R PAPPA

 

MUSIC DIRECTOR  T R  PAPPA

இசை அமைப்பாளர்  டி ஆர் பாப்பா

நீண்ட நெடிய பழுத்த அனுபவம் கொண்ட இசை அமைப்பாளர், மலையாளம், சிங்களம் , தமிழ் தெலுங்கு மொழியில் பெரும் வரலாறு உடையவர். இசையை முறைப்படி பயின்றவர். சொல்லப்போனால் ஜாம்பவான் என்றே சொல்லலாம். அவரின் படைப்பாற்றல் அலாதியானது. . சுவையான பாடல்களை வடிவமைத்தவர் . . அவரின் சில ஆக்கங்களை இன்று காண்போம்.

வருவேன் நான் உனது மாளிகையின் [மல்லிகா -1957]  டி ஆர் பாப்பா குரல்கள் எம் ராஜா , பி சுசீலா

மிகவும் மென்மையான சோகம் ததும்பும் பாடல் . எப்போது கேட்டாலும் ஒரே மாதிரி உணரவைக்கிளறும் இசை. ; இருவரின் குரல்களையும் நன்கு கட்டுபடுத்தி இயக்கி இருப்பதை காணலாம் . கேட்டு மகிழ இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=tamil+mSONG+VARUVEN+NAAN+UNADHU+MAALIGAIYIN+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=72649dfb51480aee&sxsrf=ADLYWIJIua535v1oKwpqAgiZ-P_xeS5vvg%3A1729728443751&ei=u48ZZ8nLLcy4seMP  MALLIKA 1957 AMR PS

ஒண்ணுமே புரியல உலகத்திலே [குமாரராஜா - 1961 ] பாடல் K D சந்தானம் , டி ஆர் பாப் பா   குரல் ஜே .பி சந்திரபாபு

இன்னுமோர் சோகம் மிளிர்ந்த பாடல் . தன்னை தானே நொந்து கொள்ளும் பாடல் சந்திரபாபு குரலில். யாதார்த்தங்களைப்பேசும் பாடல். எனினும் ஆடியோ மட்டுமே மீட்க முடிந்தது .இதை போன்ற யதார்த்தங்கள் இப்போது தமிழ் சினிமாவில் அடியோடு இல்லை -காலம் செய்த கோலம்   இசையின் வலிமையை கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.youtube.com/watch?v=qhdNVYinC5I ONNUME PURIYALE JPC KUMAARARAJA1961  KD SANTHANAM TR P

தமிழ் சினிமாவில் கவிஞர் வாலி கால் ஊன்றுவதற்கு முயன்று கொண்டிருந்த காலத்தில் அறிஞர் அண்ணாவின் ஆசியுடன் இப்படத்தில் [நல்லவன் வாழ்வான் -1961 ] பாட்டெழுதினார். அது டி ஆர் பாப்பாவின் இசையில் வந்து வெற்றி கண்ட பாடல் .

சிரிக்கின்றாள் இன்று சிரிக்கிறாள் [நல்லவன் வாழ்வான் -1961] வாலி, டி ஆர் பாப்பா, சீர்காழி கோவி ந்தராஜன் , பி சுசீலா

மகிழ்ச்சியில் பாடும் பாடல், அழகான ஓட்டம், கருவிகளின் ஒலி ரம்மியம் என அந்நாளைய வெற்றிப்பாடல்

எம் ஜி மற்றும் ராஜசுலோச்சனா நடிப்பில் -கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=TAMIL+SIRIKINDRAAL+INDRU+VIDEO+SONG+NALLAVAN+VAAZHVAAN+&newwindow=1&sca_esv=b4d3f7bebdf6aa5f&sxsrf=ADLYWIIM5AerpaO7oEYPRHU_UbqoldHATA%3A1729737957580&ei=5bQZZ5KPI7ua4- NALLAVAN VAAZHVAAN 1961 VAALI  TRP    SEERKAAZHI, PS

“முத்தைத்திரு பத்தைத்தரு “அருணகிரிநாதர் ,1964 , அருணகிரிநாதர் , டி ஆர் பாப்பா , குரல் டி எம் எஸ்

 

அருணகிரிநாதர் படத்திற்கு முதலில் இசை அமைத்தவர் ஜீ ராமனாதன் ;இடையின் நோய்வாய்ப்பட்டார் ;எனவே மீதி வேலைகளை நிறைவு செய்தவர் டி ஆர் பாப்பா அவர்கள்.அருணகிரிநாதர் பதிகத்தையே டி எம் எஸ் அவர்கள் திரையில் தோன்றி  சிறப்பாகப்பாடி யுள்ளார்  . கரடு முரடான சொற் கள் கரணம் தப்பி னால் மரணம் வகை கவிதை. மிகுந்த கவனமும் வேகமும் இல்லாமல் பாடவே முடியாது இப்பாடலை . வெற்றிகரமான பாடல் எந்தப்பாடகனையும் கவிழ்த்துவிடும் இடையூறுகள் மிகுந்த பாடல் . கேட்டு ரசிக்க இணைப்பு. 

https://www.google.com/search?q=tamil+movie+aRUNAGIRINADHAR+MUTHTHAITHIRU+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=b4d3f7bebdf6aa5f&sxsrf=ADLYWIIUfyVotpM3WNuiMKJhQ9YfJ8wzbA%3A1729737925302&ei=xbQZZ9aREuaI4-EPuImF2Qk&ved=0ah MUTHTHAITHARU –ARUNAGIRI NADHAR 1964 TR P TMS

இரவு வரும் பகலும் வரும் [இரவும் பகலும் -1965] பாடல் ஆலங்குடி சோமு , டி பாப்பா ,குரல் டி எம் எஸ்

இது ஒரு தத்துவப்பாடல்.. தமிழில் திரு ஜெய்சங்கர் நடிப்பை துவங்கிய படம். முதல் படத்திலேயே இரட்டை வேடம் , வெற்றி நாயகன் ஜோடி சி வசந்தா [சமீபத்தில் மறைந்தார்.] பாடல்கள் அனைத்தும் வெற்றி  . முதல் பாடலிலேயே டி எம் ஸ் , ஜெய்சங்கரின் நாடி யை பிடித்துவிட்டார் எவ்வளவு அழகாக குரல் பொருந்தியுள்ளது கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=IRAVUM+VARUM++PAGALUM++VARUM+VIDEO+SONG++&newwindow=1&sca_esv=b4d3f7bebdf6aa5f&sxsrf=ADLYWILfVOHREpdTtSFD1ZwhNvnhJ9eNAQ%3A1729738639416&ei=j7cZZ4-KGfP7g8UPhPuIgAI&ved=0ahUKEwjPjaDJgqaJAxXz_aACHYQ9AiAQ4dUDCA8&oq=IRA IRAVUM PAGALUM [1965] IRAVU VARUM AALANGUDI SOMU ,  TRP TMS

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN –28

  TM SOUNDARARAJAN –28 டி எம் சௌந்தரராஜன்-28 சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் [ பிராப்தம் -1971] கண்ணதாசன்                    எம்...