Tuesday, October 22, 2024

TM SOUNDARARAJAN –27

 TM SOUNDARARAJAN –27

டி எம் சௌந்தரராஜன்-27

ஆடாத மனமும் உண்டோ [-மன்னாதி மன்னன் [1960] மருதகாசி, விஸ்வநாதன் ராமமூர்த்தி , டி எம் எஸ்,   எம் எல் வசந்தகுமாரி

கண்ணதாசன் வழங்கிய படத்தில் மருதகாசியை பாடல் எழுதவைக்க, அந்நாளில் பேசப்பட்ட விந்தை. வி ரா வின் இசையில் ,ஸ்வரம் விலகாத 'லதாங்கி '  நடை , முற்றிலும் பாரம்பரியக்கருவிகள் , எத்துணை தபாலாக்கள் , வீணை மோர்சிங், மிருதங்கம் அல்லாது ஆண்குரல் உச்சஸ்தாயியில் சஞ்சரிக்க அடியொற்றி வந்த பெண்குரல் என்று விஸ்வநாதன் ராமமூர்த்தி பலரையும் மிரள வைத்தனர். இசையின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்திய நேர்த்தி . எம் ஜி யார் அழகா , பத்மினி அழகா என்று பட்டிமன்றம் நடத்தும் வகையில் கருப்பு வெள்ளை படத்திற்கு வண்ணம் ஏற்றி உள்ளனர்.கண்டிப்பாக பாராட்டிற்குரிய நல்ல தொழில்நுட்பம் டி எம் எஸ்ஸின் ஆளுமை அசாதாரணமானது  

. கேட்டு ரசிக்க இணைப்பு இதோ  .

https://www.youtube.com/watch?v=5DbFEJlj7bk aadaha manamum mannadhi mannanmaruthakasi vr tms ml v

ஆடாத மனமும் உண்டோ

இதே பாடலின் பிற பெருமைகளை க்யூ எப் ஆர் கலைஞர்கள் வழங்க, [பாடல் குறித்த பல நுணுக்கங்களை சுபஸ்ரீ அவர்கள் வழங்கும் விளக்கங்களையும் தெரிந்து கொள்ள இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=D6aQ0qjV0_c QFR OF THE ABOVE

அத்திக்காய் காய் காய் [பலே பாண்டியா] 1963 , கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , டி எம் எஸ், பி சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸ் , ஜமுனா ராணி

கவி அரசரின் சொல்லாட்சியில் எழுந்த சிலேடை பாடலின் பண்பு. எம் எஸ் வி இதை முதலில் பார்த்ததும் இது என்ன கொத்தவால் சாவடி பாட்டு என்று கேலிப்பேச கவி அரசரே பாடலை விளக்கி அதன் பின் இசை அமைத்தார் எம் எஸ் வி என்று அந்நாளில் பிரபலம் .. இதுபோல் இன்னொரு பாடல் உண்டா எனில் விடை இல்லை. சுமார்  31 வகை காய்கள் பாடலில் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்துமே சிலேடை வகையில் கையாண்டுள்ள கவியரசு தனக்குவமை இல்லாதார் எனில் மிகை அல்ல. எப்படி எல்லாம் காட்சிக்கேற்ப பாடல் உருவாக்கியுள்ளனர் என்று பார்த்தால் வியப்பும் மலைப்பும் நிச்சயம் தோன்றும்.பாடகர்கள் சளைக்காமல் பாடியுள்ள நேர்த்தியை என்னென்பது ? கேட்டு ரசிக்க இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=aththikkaai+kaai+kaai+aalangai++video+song&newwindow=1&sca_esv=afa6f46ee3e11409&sxsrf=ADLYWIIItkD_rIL4YY-LQiUN06ZW9d-kqQ%3A1729662536479&ei=SI4YZ734HLiw4-EPvoiY4AM&ved=0ahUKEwi9vMWI56OJ

அத்திக்காய் காய் காய்

இப்பாடலின் பல்வேறு அம்சங்கை சுபஸ்ரீ அவர்கள் கணக்கே உரிய பாணியில் விளக்கிட பாடலின் சுவை மேம்படுவது ஒரு புறம், இளம் பாடகர்கள் சுவை குன்றாமல் பாடி பரவசப்படுத்துவதை பாராட்டத்தான் வேண்டும். பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=jowEC23IdPk QFR ATHIKKAI BALE 1965  KD V R , TMS PS, PBS JAMUNA RANI

QFR EPISODE 194  ATHIKKAI

நாடகமெல்லாம் கண்டேன் [மதுரை வீரன்] 1956 , கண்ணதாசன், ஜி ராமநாதன் டி எம் எஸ் , ஜிக்கி  பத்மினி     

 எம் ஜி யார் ஜோடிக்கு ஜீ ஆர் வழங்கிய நளினம் ஜிக்கி டி எம் எஸ் குரல்களில்.. பாடலில் வரும் விளக்கத்திற்கென இருவர் முகங்களை யும்  , tight close -up [ நெருக்கத்தில்] படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் திரு எம் ரஹ்மான் அவர்கள் 1956 இல் , எவ்வளவு திட்டமிடல் மற்றும் ஒத்திகைகள் அரங்கேறி னவோ. ? எனினும் நேர்த்தி பாராட்டுக்குரியது. பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=MADURAI+VEERAN+MOVIE++NADAGAMELLAM+KANDEN+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=31fc9eb8bb598b81&sxsrf=ADLYWIKHEiRA6qbj9bNmBNKZVnzJTvP0ew%3A1729593588635&ei=9IAXZ_av 1956 KD   G R TMS JIKI   MA RAHMAN CINEMATO1956

வளரும்                                           

  அன்பன் ராமன்

1 comment:

TM SOUNDARARAJAN –28

  TM SOUNDARARAJAN –28 டி எம் சௌந்தரராஜன்-28 சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் [ பிராப்தம் -1971] கண்ணதாசன்                    எம்...