Monday, October 21, 2024

OLD MOVIE SONGS -7

 

OLD MOVIE SONGS -7 

பழைய திரைப்படப் பாடல்கள்-7

பழைய பாடல்களில் கவி சொல்லாத அலங்காரங்கள்

மாம்பழத்து வண்டு [சுமை தாங்கி -1963] கண்ணதாசன் , வி, ரா, பி பி ஸ்ரீனிவாஸ், ஜானகி

ஜானகியை  புதிதாக கண்டுபிடித்த பெரியவர்களே 1960 களிலேயே ஜானகி பலபாடல்களில் வெகு நேர்த்தியாகப்பயன்படுத்த பட்டிருந்தமைக்கு இப்பாடலும் ஒரு சாட் சி . அந்நாட்களில் குரல் எங்கு பொருந்துமோ அங்கு தான் பயன்படுத்துவர்; அதனாலேயே இன்ன பாடல் இன்னார் பாடியது என்பதெல்லாம் அன்றைய பள்ளி /கல்லூரி மாணவர்களுக்கு அத்துப்படி.. பாடலில் இயல்பாகவே இருந்த காதல் உணர்வுக்கு பாடப்படும் விதமும், அலங்கார   ஓவும் ஒரு புறம் அழகு சேர்க்க, ஒளிப்பதிவு [வின்சென்ட்- சுந்தரம்] காட்சியின் நளினத்தை top angle   இல் பதிவு  செய்து பிரமிக்க வைத்துள்ள சாத்தனூர் அணை பகுதியின் ரம்மியத்தையும் ரசியுங்கள். இதில் ஒவ்வொரு தன்மையும், கடும் உழைப்பின் பலன் என்று புரிகிறது. பாலுக்கு இணைப்பு .

https://www.youtube.com/watch?v=12BWXLnfJZM O MAMBAZHATHU VANDU –SUMAI THANGI 1962  KD V R PBS JANAKLI

பக் பக்பக்  மாடப்புறா [அன்னை 1963] கண்ணதாசன், ஆர் சுதர்சனம், பி சுசீலா ,

இது ஒரு பூடக காதல் பாடல். புறாவை காட்டி பாடி புரவலனை வளைக்கும் காதல் கவிதை. பாடலின் நடையிலேயே ஒரு நளினமும் நாணமும் இழையோடக்காணலாம். சச்சு- ராஜா பங் கு கொண்ட பாடல் . நல்ல இசை வடிவம் . இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=O+BUK+BUK+MADAPPURA+VIDEO+SONG&oq=O+BUK+BUK+MADAPPURA+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMg                                          O BAK BAK MADAPPURA KD  R SUDHARSANAM P S

மற்றுமோர் அலங்காரம்

 சின்னஞ்சிறு மலரை மறந்துவிடாதே [நீங்காத நினைவு -1963] வாலி, கே வி மகாதேவன் , எல் ஆர் ஈஸ்வரி

இது கண்ணதாசன் பாடல் என்றுபலர்  நினைத்திருக்க , இது வாலியின் ஆக்கம் 1963 இல் , திரை இசைத்திலகம் கே வி எம் அவர்கள் இசையில் , எல் ஆர் ஈஸ்வரியின்[+பி சுசீலா] குரலில்.. குரல் பொருத்தம் கொண்டே ஈஸ்வரி தேர்வாகியிருக்கிறார் . மேலும் ஈஸ்வரியை முதலில் பாடகியாக வடிவமைத்த பெருமைக்கு உரியவர் கே வி எம் அவர்களே. எவ்வளவு இயல்பாக சின்னஞ் சிறு மலரே   என்று நேர்த்தியாக பயணிக்கிறதுபாடல்  . கேட்டு மகிழ இணைப்பு

O chinnanchiru malare NEENGAATHA NINAIVU 1963 VAALI KVM PS LRE

https://www.google.com/search?q=o+chinnanchiru+malarai+marandhu+vidaathe+video+song&oq=o+chinnanchiru+malarai+marandhu+vidaathe+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQ

இன்னுமோர் " " அலங்காரம்

--லிட்டில் பிளவர் [நீல வானம் -1966] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ்

இது ஒரு மாறுபட்ட வகைப்பாடல், ஆம் ஆங்கில பாணியில் அமைந்த சொல் மற்றும் இசை நடை. டி எம் எஸ் குரலில் 'யார் அந்த நிலவு' பாடலுக்குப்பின் வந்த மென்மையான முதல் பாடல், சிவாஜி கணேசன் அவர்களுக்கு .இசை பற்றி சொல்லவனேடியதே இல்லை ,முற்றிலும் அசைந்து பயணிக்கும் ராக அமைப்பு , தாளம் சாப்ட் ட்ரம் , கேட்க ரம்மியம் . இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=td8C3Ctz9kg Oh little flower    NEELA VANAM 1965 KD MSV TMS 

இன்னொரு ' '

மைனா   மைனா [நான்கு சுவர்கள் -1`972] கண்ணதாசன் எம் எஸ் வி, எஸ் பி பாலசுப்ரமணியன்

இளம் குரலின் வசீகரம் இப்பாடலில் மேலோங்கி எளிதில் வெற்றி கண்ட பாடல். காடு  மேடெல்லாம் ஓடி [ஜெய்சங்கரையும் இழுத்துக்கொண்டு ] காதல் களத்தில் பயணிக்கும் ரவிச்சந்திரன்; இப்பாடலில் குழலிசை ஒரு தனி ரகம் . கேட்டு மகிழ இணைப்பு  

https://www.google.com/search?q=oh+myna+o+myna+tamil+movie+video+song&newwindow=1&sca_esv=285bad7552b7fb10&sxsrf=ADLYWIJOozLv5qNw8rijcTd1xAO0h4ZFdA%3A1729130628711&ei=hHAQZ-SMK5qW4-EPpZiH8QY&oq=oh+myna+o+myna+tami 4 suvargal 1971  KD   msv spb

ஒரு வேறு வகை டூயட் ஆனால் துவக்கம் -- ''  வில் தான்

-மேரி  தில்ரூபா [சூரிய காந்தி- 1973],  வாலி, எம் எஸ் வி , டி எம் எஸ் , ஜெயலலிதா

ஆம் ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியுள்ளார். பாடலின் நடையே குதூகலம் , முத்துராமனுக்கு பாடியுள்ள டி எம் எஸ் , நேர்த்தியாக குரல்  கொடுக்க, ஜே யின் குரலிலும் நளினத்துக்கு பஞ்சமில்லை , சில முக்கிய தருணங்களில் பாடலின் இடையில் இசைக்கருவிகள் கூட்டாக ஒலித்து ஒரு மெருகுவேற்றியுள்ளார் மெல்லிசை  மன்னர்.. பாடலை கூர்ந்து கவனியுங்கள்  பல இடங்களில் முறுக்கேறுவதையும் ஒரு நல்ல டூயட் கேட்ட மகிழ்வும் உண்டாகும் மிகவும் சுறுசுறுப்பான பாடல் நொடிப்பொழுது  கூட இடை வெளி இல்லாத இசை அமைப்பு -typical MSV , கேட்டு மகிழ இணைப்பு  https://www.google.com/search?q=oh+meri+dhilroopa+tamil+song+video+download&oq=oh+meri+dhilroopa+tamil+song+video+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyCQgCECEYChigATIJCAMQIRgKGKABMgkIBBAhGAoY

SOORYAKANTHI MERI DHILROOPA VALI   MSV TMS JJ  

வேறு பல உத்திகளை வரும் பதிவுகளில் காணலாம்

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. ஓ என்று துவங்கும் பாடல்கள்...ஓகோ எனும் பதிவு..

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...