Sunday, October 20, 2024

SALEM SUNDARI- 59

SALEM SUNDARI- 59

சேலம் சுந்தரி- -59

குக் சேஷாத்திரி ஓரமாக நின்றார். ராமசாமி ஜாடை காட்ட சுந்தரி 60, 101/- ரூபாய் வைத்து தேங்காய் பழம் வெற்றிலை, பட்சணம் தட்டில் எடுத்துவர, ராமசாமி ஜாடையாக PK சாரு டன் சேர்ந்து கொடு என்றார்.

சுந்தரி PK இடம் இதை கொடுங்க என்றாள் ; நீங்களும் இருந்து கொடுங்க என்றார் PK. சேஷாத்திரி இருவரையும்வணங்கி கைகூப்பி பெற்றுக்கொண்டான் . ரொம்ப நல்ல சாப்பாடு என்று PK பாராட்ட குக் பவ்யமாக தலை குனிந்தான். சுந்தரியும் நன்றி சொன்னாள்

ராமசாமி சார் ஒழுங்கா செய் னு சொன்னார். அவர் பார்த்து ஆர்டர் வாங்கித்தறார் அவர் பேரையும்    .  காப்பாத்தணும் அவ்வளவு தான் என்றான் குக். வெளியூருக்கு வருவீர்களா என்றார் PK. 2 தரம் பெங்களூர் போயிருக்கேன் வேற ஊர் போனதில்லை , சொன்னா வந்து செய்யறேன் என்று கார்டை கொடுத்த குக் இன்னொரு கார்டை சுந்தரியிடம் கொடுத்தான். இதற்கிடையில் அம்மா Rs101/- அதிகமா கொடுத்திருக்கீங்க என்று Rs101/- யை சுந்தரியிடம் சேர்ப்பித்தார்.

பரவா  இல்லை வெச்சுக்குங்க என்றாள். இல்லம்மா, நான் சொன்னதுக்கு மேல வாங்கமாட்டேன்  கோவிச்சுக்காதீங்க என்று அனைவருக்கும் வணக்கம் சொல்லி ஸ்கூட்டரில்,தம்பியுடன் கிளம்பினார் குக் சேஷாத்திரி..  

ராமசாமி வகையறா ஸ்ரீரங்கம் திரும்பினார். இவ்வளவு குதூகலத்தில் கஸ்தூரிரெங்கன் பூனை மாதிரி ஒளிந்து கொண்டு ராமசாமி கண்ணில் படாமல் தப்பித்து பஸ்ஸில் ஸ்ரீரங்கம் திரும்பினான் .பலரோடும் வேனில் இடமிருந்தும் வீட்டிற்கு பஸ்ஸில் போகும் அளவிற்கு பதுங்கி வாழ்கிறான். சுப்பு இதை கவனித்துக்கொண்டே இருக்கிறான். நாளை அனைவரும் ஊர் திரும்ப வேண்டும்.    

மறுநாள் காலை PK -உமா ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம், அம்ஜம் அளித்த உணவு காபி என்று மிகவும் கௌரவமான விருந்தோம்பல் - ராமசாமி வீட்டில். ; மதியம் மாடசாமி , சுபத்திரா,சுந்தரி  வந்தனர். PK மாடசாமியிடம் அழாத குறையாக வருத்தம் தெரிவித்தார் - என்கொய்ரி வைக்க நேர்ந்ததற்கு.. 

மாடசாமி ஒரே வார்த்தை தான் சொன்னார் " என்னுடைய நேரம் சார்" -நான் என்ன செய்யமுடியும் ?ஒழுங்கா ட்யூட்டி தான் பாக்கலாம் , நான் சொல்ல என்ன இருக்கு ? என்று முடித்துக்கொண்டார் மாடசாமி .  சுந்தரி எவ்வளவு துயர் தாங்கும் மனிதர் இவர் ? மேலதிகாரியை எப்படி கையாள்கிறார் என்று மிரண்டாள். பேச்சுவாக்கில் உமாவிடம் அம்மா விசா லு  சின்னவ ஒன்னும் தெரியாதவ , நீங்க கொஞ்சம் தேவையானதை சொல்லிக்குடுங்க என்று கை கூப்பினாள் . உமா "நீ ஏன் கவலைப்படற , இந்தக்காலப்பசங்க நமக்கு சொல்லித்தரும் ;சுப்பு ரொம்ப நேர்மையானவன் , எந்தக்குறையும் இருக்காது , தைரியமா இரு என்று தெம்பூட்டினாள். மாலை 5.00 மணி ரயிலுக்கு 3.40க்கு கிளம்ப , ராமசாமி வீடு வெறிச்சோடியது..

ஸ்டேஷனில் ரெ ஓரமாக நிற்க, ராமசாமியிடம் சுப்பு "சார்   இவரை மன்னிச்சுடுங்க சார் பாவம் பித்து பிடிச்சாப்புல இருக்கார். இனி, நானும் ரொம்ப நேரம் இவர் கூட இருக்க முடியாது, வீட்டுக்காரி நேத்தே சொல்லிட்டா சும்மா ஊர் சுத்தறது , பிளாட்பாரத்துல அரட்டை அடிக்கிறது இதெல்லாம்  வேண்டாம்னு. ரொம்ப கறார் பொண்ணு.

ராமசாமி "டே இங்க வாடா நாலு பேர் கூட பேசுடா , ஒழுங்கா நடந்துக்கோ , பைத்தியக்கார வேலை பண்ணாத அம்மாவுக்கு ஒரு 500, 1000 கூட அனுப்பு. போ எங்கயாவது நல்லா இரு" என்று பேசி , கை அசைத்து வழி அனுப்பினார்

ஹி ஹி ஹி  என்று அசடு வழிந்தான் கஸ்தூரி ரெங்கன். ஒரு பெரும் கூட்டம் நகரும்  ரயிலில் இருந்து கை அசைக்க மாடசாமி , ராமசாமி, சுந்தரி மூவரும் ரயிலை பார்த்து நின்று மெல்ல புள்ளிகளாக விலகிச்சென்றனர். 

சார் கல்யாண மண்டபத்துக்கு அட்வான்ஸ் தான் கொடுத்திருக்கு பாக்கி ஒன்னும் குடுக்கலேயே சார் என்றாள் சுந்தரி.

நீ ஏன் கவலைப்படற , இடம் பிடிக்கத்தான் நாம அலையணும்  , இனிமே அவன் நம்மள தொரத்துவான் நாளைக்கு வருவான் ஏன்னா, எலக்ட்ரிக் பில், 2 டம்பளர் காணும் னு ஒரு கணக்கு கொண்டுவருவான். இப்ப நம்ப போனாலும் வேஸ்ட் , EB எவ்வளவு னு பாக்காம கொடுக்கக்கூடாது , ஏன்னா பெரிய மண்டபம் எவ்வளவு EB ஆச்சுன்னு கொடஞ்சு பாக்கணும்.

 கொஞ்சம் ஏமாந்தா சார் ராத்திரில 6 தரம் மோட்டார் போட்டாங்கனு சொல்லி நம்மள மடக்கப்பாப்பான் ; அவன் வந்தா என்னப்பாக்கச்சொல்லு நீயா ஏதாவது பணம் கட்டாத, நான் பாத்துக்கறேன் என்றார் ராமசாமி.    .மாடசாமி சுந்தரியை ஜாடையால் சொன்னார் ராமசாமி எவ்வளோ பெரிய எத்தன் னு புரியுதா? என்று.

சரி போய்  நல்லா தூங்கு , நாளை முதல் ஆபீஸ் என்றார் ராமசாமி. .

தூக்கம் எப்படி சார் வரும் என்று யதார்த்தமாக சொன்னாள். ஆமாம் எங்களுக்கே தூக்கம் வராது போல் இருக்கு என்றார் மாடசாமி.  இப்போது சுந்தரி அவளது குடும்பத்தில் தனிமை ஆகிவிட்டாள் . ரூம் வாழ்க்கை நரகம் தான்,

இனி 2 சாமிகள், கேப்ரியல், சுப்புரெத்தினம் , முத்துலக்ஸ்மீ,  கௌரி, சாரதா சுபத்திராமேடம் அம்புஜம் மேடம்,  இவர்கள் தான் நட்பு உற்றார் உறவு எல்லாமே. ஆனால் ஆபீஸ் என்ற இடத்திற்கு வந்தால் தானே இந்தத்தொடர்புகள் எல்லாம்?.

இனிமேல் தான் தங்கையுடன் பேசி குண்டூர் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கணும். 24 மணி நேரத்துக்கு முன் இருந்த சூழல் இப்போது இல்லை . இப்போது அவளுக்கு சேலமும்  அன்னியப்பட்டுவிட்டது..

நியாயமாகப்பார்த்தால் அவள் முற்றிலும் திருச்சி சுந்தரி. எனினும் நாமக்கல் அவளை விடாது ஆஞ்சநேயனும் விடமாட்டார். 

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN –28

  TM SOUNDARARAJAN –28 டி எம் சௌந்தரராஜன்-28 சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் [ பிராப்தம் -1971] கண்ணதாசன்                    எம்...