Friday, October 25, 2024

SALEM SUNDARI- 60

 SALEM SUNDARI- 60

சேலம் சுந்தரி- -60

என்ன இன்னும் இருக்கிறதா ஐயோ என்று சிலர் அலறுகின்றனர். . ஆம் கல்யாணம் முடிந்ததும் அவ்வளவு தான் போங்க என்று சொல்ல முடியவில்லை.. சரி மேலே தொடருவோம் .

காலை 9.45 மணிக்கு சுந்தரி வேலைக்கு வந்தாள் . சுப்புரெத்தினம் தயாராக வாங்கம்மா , தங்கச்சி ஊருக்கு போயிருச்சா ? ரொம்ப நல்ல சாப்பாடு உபசரிப்பு , சின்ன கல்யாணம் னாலும் சிறப்பா இருந்துச்சு.

ரிப்போர்ட் எல்லாம் ரெடி பண்ணியாச்சு , ஒரே ஒரு கவரிங் லெட்டர் அடிக்கணும். அதை நீங்கதான் செய்யணும் என்றார். குடுங்க சார் என்று வாங்கி வெகு நேர்த்தியாக தயாரித்துக்கொடுத்தாள். இன்னக்கி கொஞ்சம் வீட்டுக்கு போகணும்னா போயிட்டு வாங்க என்றார் சு .

இல்ல சார் வீட்டுக்கு போனாலும் ஜன்னல் கம்பியை பாத்துகிட்டே எவ்வளவு நேரம் இருக்கிறது / இங்க 4 மனுஷங்களாவது இருப்பாங்க, அதுவும் இல்லாம மண்டபத்துக்கு பணம் கட்டி கணக்கு முடிக்கணும் என்றாள் சுந்தரி.

சுப்புரெத்தினம் மனதில் பாவம் இந்தப்பொண்ணு, ஊரு விட்டு ஊரு வந்து புது இடத்துல எவ்வளவோ சமாளிச்சு தங்கச்சியை கட்டி குடுத்துருச்சு,  நல்ல பொண்ணு பாவம் என்று அனுதாபப்பட்டார். சரியாக 9.59 மாடசாமி வந்தார் , சுந்தரி கை கூப்பி வணங்க, என்ன போன் வந்துச்சா மணி 10.00 ஆவுதே என்றார். இல்ல சார் என்றாள். கூகுளை தேடி வண்டி கொஞ்சம் லேட்டா போகுது இன்னும் 15-20minutes ஆகும் குண்டூர் போக என்றார் மாடசாமி.

10.50க்கு போன் விசாலாட்சி பேசினாள் . அக்கா குண்டூர் வந்துட்டோம் , ஸ்டேஷன் பக்கத்திலேயே வீடு , சின்ன வீடு தான் ஆனா எல்லாம் இருக்கு, தண்ணி தூக்க வெளியே அலையவேண்டாம். இன்னக்கி சாப்பாடு வாங்கிக்கலாம்  நாளைலேர்ந்து நீதான் சமைக்கணும்னு சொல்லிட்டாரு.  .  . .  

நானும் சொல்லிட்டேன் , சமைக்கும் போது , என்ன பண்ற என்ன பண்ற னு யாரும் குறுக்க வரக்கூடாது. சாப்பிட்டு பாத்துட்டு அப்புறம் பேசுங்க அப்பிடின்னு கறாரா சொல்லிட்டேன்..

"ஏண்டி இப்பிடி பண்ற? என்றார் அக்கா .

ஆங் , இல்லாட்டி ஆளாளுக்கு உப்புப்போடு, புளியைப்போடு , மஞ்சத்தூள் போடுன்னு நாட்டாமை பண்ணி இந்த பொண்ணுக்கு சமைக்கவே தெரியல்ல னு பட்டம் கட்டிருவாங்க. , நான் பாத்துக்கறேன் நீங்க தெம்பா இருங்கக்கா என்றாள், தங்கை. எப்பிடியோ, சந்தோசமா இருந்தா போதும் வேற எனக்கு என்ன வேணும் . என்றாள் சுந்தரி மனதில்...

வாங்க காப்பி வாங்கித்தரேன் என்று  சுப்புரெத்தினம் அனைவரையும் அழைத்துக்கொண்டு கேன்டீன் சென்றார். அங்கே ராமசாமி, கல்யாண மண்டப கணக்குகளை சரிபார்த்து, சரி, இன்னிக்கு மீதி 3800/- செட்டில் பண்ணிடுவோம், இந்தா காபி சாப்பிட்டுட்டு போ என்று அந்த மண்டப பிரதிநிதியை சொன்னார்.. சுந்தரி ராமசாமியை காபி என்று கட்டை விரலை வாயருகே கொண்டு போய் ஜாடை காண்பிக்க அவர் வேண்டாம் இந்த சுப்புரெத்தினம் வம்பே வேண்டாம் என்று கண் மொழியிலேயே மறுத்தார்.

மாடசாமி விழியால் சொன்னார் அவன் யமகாதகன் .அதெல்லாம் சிக்கமாட்டான்; நான் போய் மண்டபத்துக்கு எவ்வளவு னு கேட்டுகிட்டு வரேன் என்று போய் ஒரு சீட்டில் 3800/- என்று குறித்துக்கொண்டு வந்தார். ஹஹ் ஹா என்று அலறிக்கொண்டே வந்தார் கேப்ரியல். சுந்தரியை பார்த்து நல்லா பங்க்ஷன் .  ஆச்சி , சாப்பாடு சூப்பர்; என்ஊட்டுக்காரி இன்னைக்கும் புலி ஓதரே கொண்டா சொல்றா. நோ, நீ போய் learn பண்ணிக்கிட்டு வா சொல்ட்டேன் ; வெரி nice வெரி nice என்று மகிழ்ந்தார். சுந்தரி கை கூப்பி தலை சாய்த்து நின்றாள். பின்னர் மாடசாமிதான் ராமசாமியுடன் சென்று பணம் செலுத்தி மண்டப பில் வாங்கி கொண்டு வந்து சுந்தரியிடம் கொடுத்தார்.

மாலையில் மீண்டும் சுந்தரிக்கு போன் தங்கையிடம் இருந்து; போன் செய்தியின் சாரம்: நாளையும் சமையல் இல்லை . உமா மேடம் வீட்டில் மூவருக்கும் சாப்பாடு. வெளியே போக வர வழியும் மொழியும் தெரியாது, இனிமேதான் தெலுங்கு கத்துக்குவென் , விடமாட்டேன் அப்பதான் இங்க எம்ப்ராய்டரி கடை போட முடியும்  என்றாள் விசாலு..

அக்காஐயோ இது க்கு கை, வாய்  ரெண்டும் பலமா இருக்கு -ஆஞ்சநேயன் தான் பாத்துக்கணும்என்று பெருமூச்செறிந்தாள்.

இப்படி ஒரு தொடரை எழுதி பலரையும் கடுப்பேற்றிய மகிழ்ச்சியுடன் தொடர் முடிவுறுகிறது.

இதில் ஒரு யதார்த்தம் தென்படுகிறது.1965இல்  வெண்ணிற ஆடை படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் சரணம்

நாம் யாரும் யாரும் சொந்தம்

நாம் யாரை எண்ணி வந்தோம்

ஒரு மேனி கொண்டு வந்தோம்

இனி ஞானம் கொண்டு சொல்வோம்

இந்த ஆசை நாடகம் உன்னோடும், என்னோடும் இன்றோடும் நில்லாதப்பா என்று நாயகி பாடியது , உலக மேடைக்கு பொருந்துகிறது. இந்தக்கதையின் பாத்திரங்களுக்கும் அப்பட்டமாக பொருந்தக்காணலாம்.

மேலும் இந்தக்கதையின் சில நிகழ்வுகளுக்கும் கண்ணதாசனின் பாடல் சிறப்பாக பொருந்தக்காணலாம் . கவிஞர் தந்த இரு பாடல்களைப்பாருங்கள்

அவள் [ன்] எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்து தம்மா -கஸ்தூரி ரெங்கன் நிலை இதுவே படம் "அவர்கள்" பாடல் அங்கும் இங்கும் பாதை உண்டு        [எம் எஸ் வி, எஸ் பி பி ]

[கஸ்தூரி ரெங்கன் ] "எழுதும் கதையை மாற்றி எழுத என்னை இங்கே தூது விட்டான்" -இது சுப்பிரமணி அவ்வப்போது செய்யும் முயற்சி . படம் "தாமரை நெஞ்சம்" பாடல் - அடி போடி பைத்தியக்காரி -[எம் எஸ் வி, , பி சுசீலா எல் ஆர் ஈஸ்வரி ]

"அவர்கள்" பாடல் மற்றுமோர் சரண  வரியில்

“கதை எழுத பழகி விட்டாய் , முடிக்க மட்டும் தெரியவில்லை" -இது அடியேனுக்கு கண்ணதாசன் தந்தது   படம் "அவர்கள்" பாடல் அங்கும் இங்கும் பாதை உண்டு [எம் எஸ் வி, எஸ் பி பி ] 

ஒரு மகிழ்ச்சி யான தகவல்,     

இனி 'செவ்வாயும், சனியும் உங்களை வாட்டாது.

                                                சுபம்

நன்றி

அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...