ANGER AND EGO
கொந்தளிப்பும் அகம்பாவமும்
இது என்ன தலைப்பு? இதுவே இன்றைய பயில்வோர் மன நிலை. பலருக்கும் எதிலும் எதற்கும் திருத்தம் சொல்வது அறவே பிடிப்பதில்லை. அதை சொல்லுமுன் 'எனக்கு தெரியும்' என்பது போல் முறைக்கின்றனர். தெரியும் என்றால் ஏன் பிதற்றுகிறாய்? இதுவே எனது கேள்வி.
அதாவது தாங்கள் அனைவரும் அனைத்தையும் தெரிந்துகொண்டு விட்டதைப்போலவும் , பெரியவர்கள் /ஆசிரியர்கள் இன்னும் தங்களது அறிவின் விளிம்பிற்குள் வர பல ஆண்டுகள் ஆகும் என்பது போலவும் ஒரு நிலைப்பாட்டினை கூசாமல் மேற்கொள்கின்றனர் . [கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் ஒரு பாடலில் "எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் " என்று சரண வரி வருகிறது.] அந்த நாயக்கிக்குப்பின் இன்றைய 17+முதல் 45 அதற்கு சற்று மேலும் வரை எளிதாகப்பொருத்தக்காணலாம்] . இது ஏன்?
எனக்கு தெரியும், நீ சொல்ல வேண்டாம் என்பதன் வெளிப்பாடு. நடைமுறை வாழ்வியலுக்கான எதுவும் தெரியாது என்பது தான் உண்மை நிலவரம். இது எதனால் என்ற மனநிலை சார்ந்த ஆய்வுக்கு, பின்னர் வருவோம்.
நான் சொல்லும் தகவல்களை நன்றாக கவனியுங்கள்.
ஒரு வங்கியில் பணம் செலுத்தச்சொல்லி , தேவையானவற்றை கையில் கொடுத்தனுப்பி வேடிக்கை பாருங்கள் . கையில் பேனா கொண்டு செல்ல நாம் சொல்லவேண்டும் . அந்த படிவம் குறித்து எதுவும் தெரியாது. நேராக பணத்தை மேனேஜர் இடம் கொடுக்க எடுத்து செல்லும் பலரை பார்க்கமுடிகிறது. அந்த படிவத்தை நிரப்பி கவுண்டரில் செலுத்து என்று மேனேஜர் சொன்னதும், எள்ளும் கொள்ளும் வெடிக்க அங்கிருந்து கிளம்புவார்கள்..
2 இதற்கு சற்றும் குறையாத இன்னோர் களம், ரயில்வே யில் முன்பதிவு டிக்கட் வாங்குவது குறித்த தடுமாற்றம். . நான் சொல்வது-- பல பெற்றோர்களுக்கும் கூட ஆத்திரத்தை தோற்றுவிக்கும். நான் சொல்லும் இந்த தகவல்கள் தமிழக இளையோரிடம் பரவலாகவும், பிற பகுதிகளில் சற்று குறைவாகவும் தென்படக்காணலாம் . இது தான் நாம் வெகு நுணுக்கமாகப்புரிந்துகொள்ள
வேண்டிய இடம்.; மேலும் இதே புள்ளியில் தான் இந்தப்பதிவில் உள்ள தலைப்பும் அதன் இரு அங்கங்களும் உயிர் பெற்று தாண்டவத்தை துவங்குகின்றன.
ஆம் பாடப்பகுதிக்கான நோட்ஸ் படித்து விடை எழுதி 200 /200 வாங்கிவிட அல்லது 190/200 பலபாடங்களிலும் வாரி வழங்கப்பட்டுவிட, தலைகால் புரிவதில்லை. தக ப்பனுக்கே புரியவில்லை இது ஊது காமாலை வகை வளர்ச்சி என்று. அதனால் 17+முதல் 45 அதற்கு சற்று மேலும் என்று துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
இதன் விளைவு யாதெனில் எவருமே தங்களின் உண்மையான தகுதி எவ்வளவு என்று சற்றும் சிந்திப்பதில்லை . சரி மாபெரும் திறமையாளன் நம் புதல்வன் என்று கருதும் பெற்றோர், ஏன் ஒரு நாளாவது ட்யூஷன் வேண்டுமா என்று யோசித்ததுண்டா? ட்யூஷன் போனால் மார்க் வாங்கிவிடலாம் என்று ஒரு கணக்கு. சரி அப்படி எனில் உயர்கல்வியில், எஞ்சினீரிங்/ மருத்துவம் / கல்லூரிப்பட்டப்படிப்பு இவற்றுக்கு ஏன் ட்யூஷன் வைப்பதில்லை?
நமது பார்வைகள் பெரும்பாலும் கோணலாவையே . ஆம் எல் கே ஜி வகுப்பு குழந்தைக்கு லட்சக்கணக்கில் டொனேஷன் கொட்டி இடம் பிடிப்பார்கள். அனால் கல்லூரியிலோ /யூனிவர்சிட்டி தேர்விலோ அதிகப்படியாக பேப்பர் ஒன்று 10/- ரூபாய் வீதம் 60/- ரூபாய் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டால் "கொள்ளை அடிக்கிறார்கள்" என்று கடிதம் எழுதி கவர்னருக்கும் மனு அளிப்போம் .
நேர்மை தவறாதவர்கள் அல்லவா? ஆனால் நமது பையன் 1997/200 ஆங்கிலம் தமிழ் மற்றும் சமூக அறிவியல் இவற்றில் பெற்றால் அப்படியே புளகாங்கிதம் அடைவோம். நமக்கு அவ்வளவு மொழிப்புலமை நிறைந்துள்ளதா? இவற்றுக்கெல்லாம் இடம் இல்லை. இப்படியாக யாதார்த்தத்தை உணராமல் மென்மேலும் பணத்தை வாரி இறைத்து சீட் வாங்கிவிடலாம் என்று தகப்பனே நினைக்கும் போது பையன் மென்மேலும் கர்வம் கொள்கிறான். பையன் தனது திறமை அளவிடற்கரியது என்று இறுமாப்பு கொண்டு , பொது இடங்களில் கூட தரக்குறைவான செயல் சொல் இவற்றில் பெருமைகொண்டு பிறர் தன்னைக்கண்டு அச்சம் கொள்ள வேண்டும் என்று தன்னைப்பற்றிய ஒரு கற்பனை பிம்பத்துடன் அலைகிறான்.
அவன் செய்யும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் எனக்கு தெரியும் யாரும் சொல்ல வேண்டியதில்லை என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தி பிறர் நமக்கென்ன என்று ஒதுங்கிக்கொள்ள, இவனோ தான் பெரும் ஆளுமை என சமூகம் அங்கீகரித்துவிட்டதாக நம்பிக்கொண்டு கட்டுப்பாடின்றி அலைந்து தேவையற்ற தொடர்புகள் தாமாக அணிசேர வாழ்வின் உயர்நிலையை எட்டிவிட்டதாக பெருமையும் அகம்பாவமும் தலைக்கேற செய்வது இன்னது என்று உணராத வீணர்கூட்டத்தில் சேர்ந்து விடுகிறான்.
தந்தையோ என் பையன் 2000 க்கு 1949வாங்கி விட்டான் இனிமேல் அவன் கேட்பதை வாங்கித்தர வேண்டும் என்று பையன் சார்பில் தகப்பன் மீளவொண்ணா கற்பனையில் திளைத்து மதி மழுங்கி ஒரு மோன நிலையில் உலவுகிறார். அளவுக்கு மீறிய ஆசையும் செல்வமும் நிலை தடுமாற வைப்பது நிகழ்வதை பலரும் உணர்வதில்லை.அவர்கள்பேசுவதைக்கேட்டால்
சிந்தனா திறன் யாருக்கு மழுங்கிவிட்டது என கேட்கத்தோன்றும்.
தொடரும்
அன்பன்
ராமன்
No comments:
Post a Comment