SONG FOR SONGSTER ‘PATTU’
பாட்டு "பட்டு ஐயங்காரு"க்கு
பாட்டு
இது என்ன ஏதோ விடுகதை போல் என்கிறீர்களா
? இது நான் விடும் கதை தானே ஒழிய விடுகதை அல்ல . சரி, இது என்ன பாட்டு? பாட்டு தானே பட்டு அய்யங்காரை பாட்டுப்பாட தூண்டி
விட்டு, பின்னர் பாட்டு வாங்க வைத்தது.. அதற்கு பட்டு காரணமா பாட்டு காரணமா என்று விவாதம்
வைத்தால் கூட வேடிக்கை பார்க்க பலர் தயார்.
பட்டு என்ற பட்டாபிக்கு , ஒரு பட வாய்ப்பு என்ற எண்ணமே பட்டாபிஷேகம் போல் குதூகலம்
கொள்ள வைத்தது-- திருப்பதி என்ற பரிச்சயம் தான். என்னவோ தெரியவில்லை “அவளுக்கென்று
ஓர் மனம்” படத்தில் 'எல்லோரும்
பார்க்க' என்ற பாடலில் சரணத்தில் இரண்டு வரிகள்
'கண்ணா நீ யாரோ என்றேன் '
விதி என்னும் தேவன் விளையாட வந்தேன்
என்றான்"
என்று கண்ணதாசன் எழுதியுள்ளார்.
பட்டுவுக்கு அது தெரியாது , ஆனால்
எனக்கு அது மனதில் ரீங்காரம் செய்கிறது. .
சரி, கதை எழுதுவதாகச்சொல்லிவிட்டு
எங்கெங்கோ சஞ்சரிக்கிறாய் என்றொருவர் முறைக்கிறார். தொடர்ந்து படியுங்கள் புரியும்.
காலை மணி 4.30, கையில் ஒரு குச்சி
யுடன் பட்டு தன் மனைவியை தட்டி தட்டி எழுப்புகிறார் , ம் எழுந்திரு மணி ஆச்சு --ம்ம்,
என்று துரிதப்படுத்துகிறார்.
அதுக்காக ஆடு மாடு மாதிரி குச்சியால் தட்டி கூப்பிடணுமா? -வஞ்சுளம்
.
நான் தீர்த்தமாடியாச்சு -இது பட்டு
அதுனால யாருமே தூங்கக்கூடாதா ?
இது என்ன அட்டூழியம்? இப்ப எந்த ஆபீஸ் ல உத்யோகம்? சும்மா அக்கடான்னு மூலைல உக்காராம
என்று பொங்கினாள் வஞ்சுளம் .
இன்னிக்கு அமாவாசை -தர்ப்பணம் பண்ணனும்
அதுதான் எழுப்பினேன் என்று மூக்கால் முணு முணுத்தார்
ஆமாம் இப்ப நாலேமுக்காலுக்கா தர்ப்பணம்
? ஏழு மணிக்கு மேல தானே ஏன் இப்பிடி தொந்தரவு பண்றேள் . வரவர தொல்லைதாங்கல .
எழுந்து அள்ளி முடிந்து
தலையை கோடாலி முடிச்சு போட்டுக்கொண்டாள் , இருங்கோ கோலம் போட்டுட்டு , பல் தேய்த்துவிட்டு
வரேன் என்று எச்சரிக்கை மணி ஒலித்தாள் . அதிகாலையில் பட்டுவுக்கு சற்று புத்தி மட்டு
, இன்னும் காபி வேறு முடியவில்லை , அதனால்
இருங்கோ கோலம் போட்டுட்டு , பல் தேய்த்துவிட்டு வரேன் என்ற dynamic warning புரியவில்லை பட்டுவுக்கு , ஏதோ
காபி வரப்போகிறதென்று "ஆழி மழைக்கண்ணா" என்று முணு முணுத்தார் . சொன்னபடி வஞ்சுளம் 10 நிமிடங்களில்
வந்தாள் , வந்தவள் கண்ணில் பத்திரகாளி தெரிகிறாள்
.
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment