Tuesday, November 12, 2024

OLD MOVIE SONGS-10

 OLD  MOVIE SONGS-10

UNEXPECTED COMBINATIONS –MUSICALINSTRUMENTS /HAPPENINGS

மாறுபட்ட இசைக்கோர்வைகள், பார்வைகள், கருவிகளின் சங்கமம் கொண்ட புத்தாக்கங்கள்

 

என்னது புத்தாக்கமா? அதுவும் பழைய பாடலை கையில் வைத்துக்கொண்டு என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு பாடலும் அது தோன்றிய கால கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அன்றைய புதுமைகள் நிச்சயம் புத்தாக்கங்களே. மேலும் அவ்வகை அமைப்புகளில் , நமது கற்பனையின் எல்லைக்குள் எட்டிப்பார்க்காத கருவிதொகுப்புகள் [INSTRUMENT ASSEMBLAGE] புத்தாக்கம் தான். அவை நாம் எதிர்நோக்காத ஒன்று என்பதனாலேயே அவை சரியல்ல என்றோ சுவை குன்றியவை என்றோ முடிவு கட்டி விட முடியாது.

.மாறாக அந்தஒலிக்கலவை, மகிழ்ச்சி தருவதை விலக்கிவிட இயலுமா?  அப்படி எனில் இந்த அணுகுமுறையை களப்படுத்திய, இசை அமைப்பாளர்களுக்கு, கலைஞர்களுக்கும் , நாம் கூட மனதளவிலேனும் நன்றி கொள்ளாவிடில் , அது நன்றி மறந்த நிலை என்றே சொல்லத்தோன்றுகிறது. இவை அனைத்திலும் நமது அடிப்படை புரிதல் யாதெனில் இவை கம்பியூட்டர் போன்ற கருவிகளின் துணை இன்றி, மனித கரங்களால் மீட்டப்பட்டு , கருவிகள் பேசிய மொழியின் ஒலிகள். அவை பாடலை அழகுபடுத்தியுள்ளதால், அவற்றில் பல மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வலிமை கொண்டவள். இன்னும் சில, அவ்வப்போது சில நாட்களுக்கேனும் நமது காதுகளில் ஒலித்தவண்ணம் நம்மைக்கட்டிப்போடுவதையும் உணரலாம். அவ்வாறான சில பாடல்கள் இன்றைய பதிவில் இடம் பெறுகின்றன. பாடல்களை முழு கவனத்துடன் கேளுங்கள் இசை அமைப்பு பனி எத்துணை சூட்சுமங்கள் கொண்டது என்பது விளங்கும்.

ஒளி மயமான எதிர்காலம் [பச்சை விளக்கு ] 1964 , கண்ணதாசன் ,விஸ்வநாதன் -ராமமூர்த்தி , டி எம் எஸ்

தங்கையின் எதிர்காலம் பற்றிய கனவில் அண்ணன் பாடும் பாடல். அதில் நினைவுகள் உயர் நோக்கிலும் வளமான எதிர்பார்ப்பும் கொண்ட மங்கலம் நிறைந்த சொற்கள் எனவே எம் எஸ் வி, நாதஸ்வரத்திலேயே பாடலை துவக்குகிறார் ,தொடர்ந்தும் தவில் ஒலி க்க , பாடல் நெடுகிலும் அதே மங்கல நினைவு, ஒலி என பயணித்த வித்தியாசமான பாடல் . என்ன வித்யாசம் ? ஆம் ரயில் எஞ்சினில் ஓட்டுனராக பயணித்தாலும் அப்போதும் இதே கருவிகள் சூழ பாடலும் குதூகலமு ம் தொடர , அந்த நாளிலே யே பலரையும் கவர்ந்த பாடல். இந்த மங்கள வாத் தியங்களைக்கொண்டே முன்னிலை பெற்ற இசை, ஆங்காங்கே பிற கருவிகள் ஒலித்தாலும், ஓங்கி ஒலித்ததென்னவோ தவிலும் , நாதஸ்வரமும் தான். கேட்டு ரசிக்க இணைப்பு 

https://www.google.com/search?q=olimayamana+edhirkaalam+video+song+download&newwindow=1&sca_esv=339a018dea4bc811&biw=1604&bih=790&sxsrf=ADLYWIKu6kpAOMnn2DuePwH5Q8F73iRBag%3A1729233980406&ei=PAQSZ7S6GILaseMPxs3lsQ0&o NADHASWARAM THAVIL OPENING , THAVIL OFFERS PERCUSION PACHAI VILAKKU KD V R TMS

பாடுவோர் பாடினால் [கண்ணன் என் காதலன்] 1968, வாலி , எம் எஸ் வி, டி எம் எஸ்

பாடலின் பல்லவியையே 'தொகையறா' போல் பாடி, துவங்கிய பாடல். துவக்கும் பொது பியானோ, கையில் இடும் தாளம் என்று துவங்கி, ஒரு மாற்று அமைப்பில் பாடல் ஒலி க்க பியானோவிற்கு , தாளம் மிருதங்கம்/ தபலா என்று வேறுபட்ட ஆளுமை கேட்கவே சிறப்பாக ஒலிக்க , குரலுக்கு தாளம் ட்ரம் போங்கோ கூட்டு ஒலியில் முழங்க பரவசம் கொள்ள வைக்கும் அமைப்பு. பின்னர் வரும் சரணங்களில்ராக  வேகமும் தாளமும் விரைந்து பயணிக்க , 1968ல் அனைவரையும் ஈர்த்த பாடல் . இணைப்புக்கு

https://www.youtube.com/watch?v=UbxEeGWQhoM PADUVOR PADINAAL KANNAN EN KAADHALAN 1968  VALI MSV TMS PIANO MRIDHANGAM

பெண் என்றால் நான் அன்றோ [வீட்டுக்கு ஒரு பிள்ளை ] கண்ணதாசன் , எம் எஸ் வி, எல் ஆர் ஈஸ்வரி. 

எல் ஆர் ஈஸ்வரி, அனாயாசமாகப்பாடும் அதிவேக க்ளப் டான்ஸ் பாடல் . அது சரி ஆனால் தாளம் தவில் . என்னது க்ளப் டான்ஸ் பாடலுக்கு தவிலா ? ஆம் அதுவும் பட பட என்று அதிர்ந்து ஒலிப்பதை எப்படி வசமாக உபயோகித்துள்ளார் எம் எஸ் வி. [பாடலின் பல்லவியுடன் தவில் தான் பயணிக்கிறது ; பின்னர் சரணங்களில் போங்கோ /ட்ரம் கலவை என ஒரு வித்த்யாசமான டால சாம்ராஜ்யம் இப்பாடலில் அதிலும் தவில் சொல்லவே வேண்டாம். கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=pen+endraal+naan+anro+video+song+download&newwindow=1&sca_esv=339a018dea4bc811&biw=1604&bih=790&sxsrf=ADLYWIJPo-LrZm8ZgNzxf4L1k_YHvnefhQ%3A1729231781373&ei=pfsRZ-O-FsSP4-EPj4jagAk&oq=pen+endraal+n pen endraal naan andro LRE MSV

வணக்கம் பலமுறை [அவன் ஒரு சரித்திரம்] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் ,பி சுசீலா

மீண்டும் தவில்

வாய்ப்பாடலுக்கு தவில் பொருந்துமா? ஏன் பொருந்தாது? நன்றாகப்பொருந்தும் என காட்டிய மெல்லிசை மன்னரின் , தாள சாம்ராஜ்ஜியம் பாடல் முழுவதும். பாடல் துவங்கும் போது மேற்கத்திய ஒலிக்கோர்வைகளோடு கோரஸாக கிளம்ப, திடீரென்று பெண் குரல் ரா ஆலாபனையாக என்று நுழைந்து வணக்கம் சொல்லிவிட்டு பாடலை துவங்கும் போது வணக்கம் பல முறை சொன்னேன் என்றதும் சரியான பின்னமைப்பாக தவில் ஒலிக்க  பாடல்,  களை கட்டி லேசாக வேகமெடுத்துப்பாய , தபலா சேர்ந்துகொள்ள, சரணங்களில் தபாலாவும், பல்லவியில் தவிலும் என மாறி மாறி தாள ஜாலங்கள் பாடலை அலங்கரிக்க காணலாம் . ஆங்காங்கே இடை இசையின் ஒளி அமைப்புகள் இந்திய /மேற்கத்திய ஒலி அமைப்புகளின் இயல்பான சங்கமாக மிதக்க விடும் நேர்த்தி அச்சு அசல் விஸ்வநாதனின் முத்திரை. வெகு நேர்த்தியாக பாடியுள்ளனர் ;  தாள மிடுக்கு இப்பாடலின் சிறப்பு.

இணைப்பு இதோ

https://www.google.com/search?q=VANAKKAM+PALAMURAI+SONNEN++video+song+download&newwindow=1&sca_esv=339a018dea4bc811&biw=1604&bih=790&sxsrf=ADLYWILfUYWbe09NR6Cy8meftEKYparHKA%3A1729233290835&ei=igESZ_rVMvWP4-EP6b3joQI&ved=0ahUKEwj6wq WESTERN START , CHANGE IN TUNE THAVIL FOR VOCAL VOICE

1957 ன் "புதையல் " அன்றைய வி. ரா இசை அமைப்பில் வெகுவாக மிளிர்ந்த படம். பாடல் ஒவ்வொன்றும்  வெவ்வேறு வகை அமைப்பில். இசை நுணுக்கங்கள் அதிகம். அதிலும் ஒரு சிறப்பான பாடல் இந்திய பதிவில்

 

சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர [புதையல் ] பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , வி, ரா , பி சுசீலா.

பட்டுக்கோ ட்டையார், ட்யூனுக்கு எழுத மாட்டார் , அவர் தரும் கவிதைக்கு இசை அமைப்பாளர்கள் தான் ட்யூன் பிடிக்க வேண்டும். ஆனால் இந்தப்பாடல் காட்சி, வேறு வகையானது. அதாவது நெசவு த்தொழிலின் பெருமை, மேன்மை மற்றும் சூழலில் அமைய வேண்டிய பாடல்.

அதற்கான பிரத்தியேக ஒலி  வரிசை [சந்தம்] சரியாக அமைய சொற்கள் அதற்கேற்ப இருக்கவேணும். . எம் எஸ் வி ஒரு பேட்டியில்இதற்காக எம்எஸ் வி, பட்டுக்கோட்டை  இருவரும்  காஞ்சிபுரம் பக்கம் போய் நெசவு இல்லங்களில் தறி இயக்குவதை ப்பார்த்து விட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த புரிதலுக்குப்பின் வந்த கவிதை, வெகு நேர்த்தியாக தறி எழுப்பும் சீரான ஒலி வரிசையில் ட்யூன் இயக்கம் காணலாம். எனினும் ஓரிடத்தில் கவிதைக்கு ஈடு கொடுக்க ட்யூன் வேறு நடையில் பயணித்து மீண்டும் பல்லவியுடன் சேர்ந்து விடுவது அழகு.

ராக நடை நம்மைக் கட்டிப்போட்டுவிடும் நளினம் கொண்டது தேவையான இடங்களில் கோரஸ் ஒலிக்கென ஒரு வித்தியாசமான "தை யார யத்தன்ன தானா, தை யார யத்தன்ன தானா என்று சொல்வரிசையை உருவாக்கியுள்ளனர் இசை அமைப்பாளர்கள்.

எப்படி எல்லாம், பாடலை மெருகேற்றி உலவ விட்டுள்ளனர் அந்நாளில். கேட்டு மகிழ இணைப்பு இதோ 

1957 pudhayal a  turning point

https://www.google.com/search?q=chinna+chinna+izhai++pinni+pinni+videeo+song+&newwindow=1&sca_esv=339a018dea4bc811&biw=1604&bih=790&sxsrf=ADLYWIKvtweogvVl-LnqF7Ay807dSThluw%3A1729231541989&ei=tfoRZ4GJPLeu4-EP9OqD2AE&ved=0ahUKEwjB pudhaiyal thayyaara eththanna thaana , tune change rapid shift

பாடலில் ஒலிக்கோர்வை உருவாக்கிட கடும் உழைப்பு தேவை என்பது புரிகிறது.

தொடரும்

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. Wonderful highly technical analysis which has induced me listen to these songs once again. Thanks. Rk

    ReplyDelete
  2. Excellent selection of songs to showcase MSV's extraordinary creativity !! Thanks

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...