Monday, November 11, 2024

PATTU IYENGAR –THE LYRICIST -2

 PATTU IYENGAR –THE LYRICIST -2

பாட்டு எழுத வந்த  பட்டு ஐயங்கார் -2

 பட்டு ஐயங்கார் சீறினார் பால்காராளா ? நீ தான் தயிர்க்காரி மாதிரி இருக்க -அவன் சினிமா டைரக்டர் தெரியுமா ? என்று கொக்கரித்தார் .

போறும் டைரக்டராம் டைரக்டர் ; சரி உங்களுக்கு என்ன பால்காராளோட வேலை?

நான் சினிமால சாஹித்யம் இழுதப்போறேன் .

ஐய்ய  -சகிக்கல என்று முகத்தை சுளித்தாள்; வஞ்சுளம் [திருமதி பட்டு ஐயங்கார் ]

உடனே பட்டு ஐயங்காருக்கு  'சாஹித்யம் பிறந்தது

"வஞ்சுளமே வஞ்சுளமே கொஞ்சிடுவேன் செந்தமிழில் " என்று ஆரம்பிக்க ,

வஞ்சுளம் “யாருக்கோ வேளை சரியில்லை னு நினைக்கறேன் அதான் இப்பிடி அஷ்டமத்து சமாச்சாரம் , பிடிச்சு ஆட்றதுஎன்றாள் வஞ்சுளம் 

"அஷ்டமத்தை வெல்வேன் , இஷ்டப்படி செல்வேன் " என்று அடுத்த சாஹித்யம் பிறக்க [வஞ்சுளம் பஞ்சாங்கத்தைப்பார்த்தாள் -பௌர்ணமி நெருங்குகிறதா என்ன , பட்டு , பட் பட் னு பொழியறாரே] , எங்க அப்பா அம்மா இருந்திருந்தா , இப்ப அவன் ஒண்ணும் மடையன் இல்லைடின்னு சொல்லிட்டாவது நிம்மதியா கண்ணை மூடிருப்பா.

அப்பல்லாம் , வெறு ம் பித்துக்குளி யா இருந்துட்டு , இப்ப கூத்தடிக்கறீர் , இது எங்க  போ ய் முடியுமோ தெரியலையே , ஈஸ்வரா என்று சத்யநாராயணப்பெருமாள் படத்தை கண் வாங்காமல் பார்த்தாள் . என்னவோ பெருமாள் சிரிப்பது போல் உணர்ந்தாள் வஞ்சுளம் . மறுநாள் ரெடியாக பட்டு ஐயங்கார் காத்திருக்க ஒருவரும் வரவில்லை ; மணி 12.00 இப்போது வஞ்சுளம் பாடினாள்

"இலவு காத்த கிளியே"

பட்டு வுக்கு  உள்ளூர ஆத்திரம் , நீ என்னத்தான் பரிகாசம் பண்ற என்று கொந்தளித்தார் . போறும் பெரிய கிளியாட்டம் இருக்கேளாக்கும் , கிளிக்கெல்லாம் தலை மொட்டையா இருக்காது , ஸ்பஷ்டமா பேசும் , நான் வசந்தகோகிலம் பாட்டைன்னா பாடினேன் என்று ஈசியாக பட்டு வுக்கு  வாயில் துணியை சுருட்டி அடைத்து விட்டாற்போல் செய்து விட்டாள் . மறுநாள் காலை 11 மணிக்கு கார் , திருப்பதி/வேறொருவருடன் வந்தது பட்டு செல்லப்பிராணி போல துள்ளிக்கொண்டு, போயிட்டு வரேன் என்று குரல் கொடுத்துவிட்டு ஓடினார்.. காரில் போய் , இப்ப எங்க போறோம் என்கிறார் ஐயங்கார் . வடபழனி சாமி -7 கிலோமீட்டர் -திருப்பதி.

அடுத்த 15 நிமிடத்தில் பாக்கியலட்சுமி கம்பெனியில் போய் நின்றது கார் .

ஐயங்கார், திருப்பதி முன்னே செல்ல மூன்றாம் நபர் [கரீம் பாய் ] பின்னே நடந்து மூவரும் உள்ளே செல்ல , ஹாலில் இயக்குனர் வீரபத்திரன் மற்றும் அவர் மைத்துனன் கணேசன், அவங்கஊர்க்காரர் மூக்கையா பிள்ளை இருந்தனர்.

பஞ்சகச்சம்  , அங்கவஸ்திரம் திருமண்  உருவம் கண்டு அதிர்ந்தான் வீரபத்திரன் , உக்காருங்க சாமி என்று சொல்லிவிட்டு திருப்பதியைத்தர தரவென்று இழுத்துக்கொண்டு மாடிக்கு ஓடினார்  வீரபத்திரன்.

ஏண்டா பாட்டு எளு   கூட்டிக்கிட்டு வாய்யான்னா , நீ படத்துக்கு பூசை போடறவரை கூட்டிக்கிட்டு வர என்று கண்கள் சிவந்தான்.

இல்லண்ணே பாட்டு எளுத தாங்க வந்திருக்காரு .

டேய் சினிமா பாட்டுக்கெல்லாம் அய்யருங்க சரிவர மாட்டாங்கப்பா என்றார் வீரபத்திரன்,.

அதெப்படி அப்பிடி சொல்றீங்க -கவிஞர் வாலி ஐயரு  தான்  அவர் எளுதலயா , அந்தக்காலத்துல பாபநாசம் சிவன், , சுந்தர வாத்யார்-இவங்கல்லாமும் ஐய்யருங்க தான் -பாட்டு எளுதுனாங்கள்ல என்று திருப்பதி வீரபாத்திரனை , சைக்கிள் ட்யூப் மாதிரி மடக்கி விட்டார்.  சரி என்று கீழே இறங்கினர் இருவரும்

தொடரும் [3ம் பகுதியில் நிறைவு பெறும் ]

நன்றி அன்பன் ராமன்

2 comments:

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...