Thursday, November 28, 2024

T R RAMANNA -2

T R RAMANNA -2

வாடியம்மா வாடி [பணக்காரக்குடும்பம்- 1963] கண்ணதாசன் .வி-ரா , பி சுசீலா எல் ஆர் ஈஸ்வரி 

மிகவும் வித்யாசமான ஒப்பிடவோ   ஒது க்கிட வோ வேறு படப் பாடல் இல்லை என்னும் அளவு தனித்துவம் கொண்ட பாடல் பெண்கள் கபடி ஆடும் காட்சி. பாடகிகள் இருவரும் மூச்சடக்கி பாடுவதும் , விடாது பாடுவதும் ஒரு புறம் இருப்பினும் , வெகு வேகமாகப்படும் இடங்களில் சொல் பிசகாமல் உச்சரிப்பு விலகாமல் பாடியநேர்த்தி. மூச்சு விடாமல் பாடுவதை பெரிதும் பேசியவர்கள் இந்தப்பாடலின் வேகத்தை பார்த்திருந்தால் நன்றாக உணர்ந்திருப்பார்கள் பாடலின் வேகத்துக்கு இசை, சடு குடு சடுகுடு என்று கிடுகிடு வேகத்தில் பாடி அசத்தியுள்ளன்ர் , இசையின் வேகமும் போட்டி போட ஒரே அதகளம் . கேட்டு மகிழ இணைப்பு

 

VAADIYAMMA VAADI  PANAKKAARAKKUDUMBAM 1964

https://www.google.com/search?q=TAMIL+MOVIE+PANAKKAARA+KUDUMBAM+VADIYAMMA+VAADI+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=332c1457e26e21ac&sxsrf=ADLYWILroPn4NfwXFGi2YHsk3ZHHtsSkYQ%3A1732254615244&ei=lxtAZ8fEDr6I4-EPyobygQ KD VR , PS LRE  

இதே பாடலின் வேறு பல அம்சங்களை சுபஸ்ரீ அவர்களின் விளக்கமும் பாடும் குழுவினரும் தெளிவு படுத்த நமது பார்வை விரிவடைய , ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=QFR+SONG+VADIYAMMA+VADI+&newwindow=1&sca_esv=332c1457e26e21ac&sxsrf=ADLYWII5_t5XQkvujsLWreCBpp7huVwYpQ%3A1732255836012&ei=XCBAZ9I207Dj4Q-K9OSJAQ&ved=0ahUKEwjS1I_uo--JAxVT2DgGHQo6OREQ4dUDCA8&oq=QFR+SONG+VADIYAMMA+VADI+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiGFFGUiBTT05HIFZBRElZQU1NQSBWQURJIDIFEC QFR –LISTEN TO VIEWS

அந்த மாப்பிள்ளை காதலிச்சான் [பணம் படைத்தவன்-1965] , வாலி, வி ரா, டி எம் எஸ், பி சுசீலா ,

 வெகு நேர்த்தியாக படம்பிடித்துள்ளனர். ஒளி /ஒலி அமைப்புகள் வெகு சிறப்பாக அமைந்ததுடன் இருவர் தனித்தனியே ஆடும் நடனம் வேறு பாடல்களில் காணாத ஒன்று. ஆனால் சென்சார் குழுவின் கத்தரிக்கு மாட்டி னாலும்   வேறு சொற்கள் கொண்டு []மாற்றியவர் வாலி . முதலில் "அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்  என்றதற்கு தணிக்கை எதிர்ப்புக்காட்ட , வாலி []மாற்றி "அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கண்டதல்ல " என்று எழுத ஏதோ சாதித்துவிட்டது போல் அமைதி கொள்ள -இரண்டு சொற்றொ டர்களும் சொன்னதென்னவோ ஒன்று தான். அந்நாளைய தணிக்கை  வசமாக ஏமாந்தனர் . அந்நாளைய தணிக்கை இவ்வளவு வீரம் காட்டியது இப்போது "ஆடையின்றி பிறந்தோமே என்று  பாடி அம்மணமாக நடித்து -பாட்டில் உள்ளபடி தான் எடுத்திருக்கிறோம் என்று வாதிட்டு அக்காட்சிகள் திரையில் வந்து வசூலைக்குவிக்கின்றன.. சரி பாடலை ரசியுங்கள் சொல், பாவம் , நடனம் உணர்ச்சி என பல்முகப்பாடல் இது. இணைப்பு இதோ 

ANDHA MAPPILLAI PANAM PADAITHTHAVAN 1965 VALI, V R , TMS , PS

https://www.google.com/search?q=tamil+movie+panam+padaithavan+andha+mappillai+video+song+download&newwindow=1&sca_esv=332c1457e26e21ac&sxsrf=ADLYWIL_YcgUH5etrTdya-vGjaV8wru2Yg%3A1732255172685&ei=xB1AZ-XGKcyd4-EPwemVaA&oq=tamil+movie+panam+padaithavan+ANDHA+MAPPILLAI++VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiOnRhbWlsIG1vdmllIHBhbmFtIHBhZGFpdGhhdmFuIEFOREh 

 

அதே படத்தில் மற்றுமோர் பாடல்

பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் - வாலி, வி ரா, டி .எம்.எஸ் எல் ஆர் ஈஸ்வரி 

அந்த நாளில் எல் ஆர் வெகு புகழ் பெற்ற ஹம்மிங் கலைஞர் ஆனார். வரிக்கு வரி ஹம்மிங் மாறும் . எனினும் எல் ஆர் மிக அழகாக ஈடு கொடுத்து ப்பாடி பெரும் புகழ் கொண்டார். ஹம்மிங் கேட்கவே ஒலிபெருக்கிக்கடைகளில் கூட்டம் குவியும் 'அண்ணே அண்ணே அந்தப்பாட்டு போடுங்க என்று மாணவர்கள் ஒலிபெருக்கி கடையில் கெஞ்சுவது இன்னும் கண்ணில் உலவுகிறது. அப்படியெல்லாம் ரசித்தவர்கள் இருந்த பூமியில் இப்படியெல்லாம் புது ப்பாடல்கள். சரி இந்தப்பாடலையும், காட்சி அமைப்பையும் உன்னிப்பாக ரசிக்க இணைப்பு இதோ

pavalakkodiyile https://www.google.com/search?q=pavalakkodiyie+muthukkal+pooththaal++video+song&newwindow=1&sca_esv=a7c8b91352f94de3&sxsrf=ADLYWIJV-duizjnAhb89DymTX0Nt7wjgUA%3A1732695713604&ei=odZGZ7fGJMGT4-EPpY2RgQ4&ved=0ahUKEwj3mo3EivyJAxXByTgGHaVGJOAQ4dUDCBA&oq=pavalakkodiyie+muthukkal+pooththaal++video+song&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiL3BhdmFsYWtrb2RpeWllIG1

panam padaiththavan  vaali v r , tms lre humming

பாடல்களை ஊன்றி கவனியுங்கள்; பல நுணுக்கங்கள் உங்களை மிரள வைக்கும் .

நன்றி

அன்பன் ராமன் 

1 comment:

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...