Monday, December 9, 2024

LET US PERCEIVE THE SONG

LET US PERCEIVE THE SONG

பாடலை உணர்வோம்

இது ஒரு புதிய பகுதி,- என்பதை விட, புதிய அணுகுமுயற்சி என்றே கருதலாம்.

இந்தப்புதிய பகுதிக்கு, இப்போது என்ன தேவை? என்ற கேள்வி எழும்.

சில மாதங்களாக பாடல் /பாடகர்கள் / இசை அமைப்பாளர்கள், இசைக்கூறுகள் அவற்றின் சில நுணுக்கங்கள் என்று பயணப்பட்டு நான் அறிந்து கொண்டது வருமாறு.

இயன்ற அளவு நல்ல பாடல்களை தொகுத்து தருவதால் பலருக்கும் பாடல் தெரிகிறது , சிலவற்றில் கவிஞர், பாடகர்[கள்]   என்ற அளவில் அறிந்துள்ளனர் அன்பர்கள். அதையும் கடந்து, இசை அமைப்பாளர், கருவிகள், இசை அமைப்பாளரின் அணுகுமுறைகள் குறித்த பார்வை பொதுவாக மங்கலாகவே, இருந்து வந்துள்ளது என்றுணர்கிறேன்.

மிகப்பெரும் வெற்றிப்பாடல்கள் தவிர, பிற நல்ல பாடல்களைக்கூட கடந்து சென்று விட்ட அப்பாவிகளாக இருந்து வந்துள்ளனர் நமது அன்பர்கள்.

இதனால் உனக்கென்ன?

உனக்கு வேறு நல்ல விஷயங்கள் தெரியாது அதனால் சினிமாப்பாட்டு கேட்டு காலத்தை ஓட்டி விட்டாய், நங்கள் அப்படி அல்ல என்று சிலர் நினைக்கக்கூடும். இதனால் ஒன்றும் குறைவில்லைதான். ஆனால் நல்ல பாடல்களை தவற விட்டுவிட்டு, இனி எங்கே போய் அவற்றை கேட்க இயலும்.? குறைந்தபட்சம் நாமறிந்த நல்ல பாடல்களை ஏன் நல்ல பாடல்கள் என சொல்கிறோம் என்ற கள யதார்த்தத்தை இப்போதும் தெளிவு படுத்தாவிட்டால், மென்மேலும் தரக்குறைவு தலை விரித்தாடும். எனவே, விவரமறிந்த நிலைப்பாட்டை அடைந்திட ஒரு பாடலின் வெவ்வேறு தன்மைகள் யாவை?, அவற்றின் சிறப்பு எவ்வாறு பயன் படுத்தப்பட்டுள்ளது. அந்த உழைப்பாளிகள் யார் என்றெல்லாம் தகவல்களை தொகுத்துப்பார்த்தல் புரியும் திரை இசை என்பது கிள்ளுக்கீரை அல்ல, அது ஒன்றும் வழிப்போக்கர்கள்இளைப்பாறும் கூடாரம் அல்ல.

டிசம்பர் மாத கச்சேரி போல் மாலையில் மப்ளரை தலையில் கட்டிக்கொண்டு சங்கீத சபாவில் ஆண்டுக்கொருவரை பாராட்டவும், ஆண்டுக்கொருமுறை பாடலைக்கேட்டு மகிழ்ந்து கலைந்து செல்வதும் போன்ற வயோதிக பொழுதுபோக்கு அல்ல திரைஇசை. மாறாக, பழைய பாடல்கள் வாழ்வின் பல சூழல்களை புரிந்து கொண்டு, மன அமைதி பெற்று வாழும் முறைகளை எளிய மொழியில் சொல்வதால், அதன் வீச்சும் பலனும் அன்றாட தேவை என்பதனால் காலை 8.00 முதல் 10.00 வரை பல டி வி சேனல்கள் பழைய பாடல்களை  ஒளிபரப்பு செய்கின்றன.

இந்த புதிய முயறசிக்கு blog வாசகர்கள் என்ன சொல்கின்றனர் என்று தெரிந்தால், கை - வைப்பதா அல்லது கை கழுவுவதா என்று இறுதி முடிவை மேற்கொள்ள ஏதுவாகும். ஆனால், ஒரு பதிவில் ஒரு பாடல் மட்டுமே தர இயலும். ஏனெனில் விளக்கங்கள் விரிவாக இருந்தால் தான் பாடலின் முழுப்பரிமாணம் வெளிப்படும்.

அன்பர்கள் இயன்ற அளவில் blog இல் பதிவிட்டால்     எளிதாகும். தனி நபர் வாட்சப் எனில் ஒவ்வொன்றாக பார்க்க வேண்டி வரும்.. blog வகை அமைப்புகளில் பங்கேற்காதோர் வாட்சப்  தொடர்பு வழியே ஒப்புதலையோ நிராகரிப்பையோ[in 4 or 5 days] தெரிவித்தால்  எந்த முடிவிற்கும் நான் தயார் . எனவே உங்கள் விருப்பம் எதுவாயினும், தெரிவியுங்கள். ஏனெனில், எழுதியதை படிக்கும் ஆர்வம் குறைவதை நன்கு உணர்ந்த பின்னும் மென் மேலும் எழுதி ஆவதென்ன? எனவே, பெரும்பான்மையின் முடிவை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இது [பாடலை உணர்வோம்] - வேண்டாம் எனில் "தேவை இல்லை" என்றும், வேண்டும் எனில் "தொடர்க" என்றும் தெரிவித்தால், உரிய முடிவு மேற்கொள்ள உதவும். படிக்கப்போவதில்லை என்றால் எதற்கு நேரத்தையும் தொகுக்கும் உழைப்பையும் செலவிட வேண்டும்?.

 பலர் போல், பகலில் உறங்கலாமே, என்று தோன்றுகிறது.

தொடங்குவதும்,முடங்குவதும்

உங்கள்நிலைப்பாடு தீர்மானிப்பதைப் பொறுத்து.

நன்றி

அன்பன் ராமன் 

5 comments:

  1. மிகவும் அருமையான ஒரு முயற்சி. அவசியம் திரைப்பட பாடல்கள் பற்றிய ஒரு புரிதல் நமக்கு தேவை. ஞானிகள் சொன்னார்கள் என்பதைவிட கவிஞர்கள் சொன்னார்கள் என்று சொல்வது நமது யதார்த்த வாழ்வில் காண்பது என்பது கண்கூடு.

    மேலும் பல எளிதில் புரியாத வேதாந்த கருத்துக்கள் சில வரிகளில் சினிமா பாடல்கள் என்ற வடிவில் வந்து பாமரர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகின்றன. மேலும் வாழ்க்கை தத்துவமும் எளிதாக உணர்த்தப்படுகிறது.

    அத்தகைய நவரசங்கள் பொதிந்த பாடல்களுக்கு இசையமைத்து அவற்றை மக்கள் மத்தியில் உலவ விடுவது என்பது சாதாரண செயல் அல்ல. ஒரு இசையமைப்பாளர் தனது குழுவினருடன் ஒரு பாடலுக்கு அதன் நவரசங்களுக்கு ஏற்றவாறு மெட்டமைத்து, மக்கள் மனதில் அதை ரீங்காரம் இட செய்வது என்பது சாதாரண விஷயமா நினைத்து பாருங்கள்.

    எப்படி ஒரு விருந்து சாப்பாட்டில் பலவிதமான பதார்த்தங்கள் அந்த அரிசி சோறு க்கு மகத்தான சுவையை கொடுக்கிறதோ அதுபோல ஒரு பாடலுக்கு இசைக்குவினரும் பல்வேறு இசைக் கருவிகளும் ஒரு அருமையான விருந்தை நமது செவிகளுக்கு ஊட்டுகின்றன. அத்தகைய அருமையான இசைக் கலைஞர்களின் திறமையை நாம் தெரிந்து அந்த பாடல்களின் அருமை யையும் அதன்பின் உள்ள ஒரு இசைக் கலைஞனின் திறமையையும் நமது (டி.கே.சி) சி. ராமன் அவர்கள் நமக்கு தொகுத்து வழங்கியுள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பதிவுகளை பார்க்க பாடல்களை அறிந்து ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    உங்களது இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்பன்
    க. லக்ஷ்மணன்

    ReplyDelete
  2. வழங்கவுள்ளார்.

    ReplyDelete
  3. தயவு செய்து தொடரவும்.

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...