SONG FOR SONGSTER ‘PATTU’ -2
பாட்டு "பட்டு ஐயங்காரு"க்கு
பாட்டு -2
வஞ்சுளம்
10 நிமிடங்களில் வந்தாள் , வந்தவள் கண்ணில் பத்திரகாளி தெரிகிறாள் .
பட்டுவுக்கு அஷ்டமத்தில்
"ஈரெழுத்து" , ஸ்டைலாக குடுமியை ஆட்டிக்கொண்டு --"காபி" என்று
இழுத்தார்.
காபி , பீப்பி எல்லாம் தர்ப்பணம்
முடிஞ்சு 1/2 மணி கழிச்சுத்தான் - சுக்லாம் பரதரம் னு காஞ்சி பெரியவர் சாதிச்சிருக்கார்
-கல்கி ல போட்டிருக்கு’ வஞ்சுளம் .
அதெல்லாம் ஸ்மார்த்தாளுக்குன்னா
என்று நழுவினார் பட்டு. .
அப்பிடியெல்லாம் கிடையாது, வைஷ்ணவாளும்
தான் இதை விடாம அனுஷ்டிக்கணும் அப்பிடின்னு
தான் சாதிச்சுருக்கார்.- வஞ்சுளம் .
நமக்கு ஆண்டவனோ /ஜீயரோ சாதிச்சாதான் சிலாக்யம் என்றார்
பட்டு
ஓஹோ ? இல்லேன்னா? லேகியமா ? என்று
கொந்தளித்தாள் வஞ்சுளம்.
நிலமை கை மீறப்போவதைக்கண்ட பட்டு
"வஞ்சுளமே வஞ்சுளமே " என்று ஆரம்பித்தார்
.
போறும் இந்தப்பித்துக்குளி
கொஞ்சல் . நானே எனக்கு போய் இந்தப் பேர் வாச்சுதேன்னு வேதனைல துடிக்கறேன் நீங்க என்னடான்னா
"வஞ்சுளமே வஞ்சுளமே "னு நாராசமா முனகறேள் .கொஞ்சங்கூட சரியில்லை , அமாவாசை/
பௌர்ணமி வந்தா கதி கலங்கறது, மாடு மேய்க்கறவங்களாட்டம் குச்சியை வெச்சு தட்ட உங்களுக்கே
அசிங்கமா இல்லையா? போன வாரம் இப்பிடி பாடிண்டு போய் என்ன ஆச்சு ? மூஞ்சியைத்தொங்கப்போட்டுண்டு,வேகாதவெய்யில்ல
திரும்பி வந்து தீர்த்த மாடினது தான் கண்ட பலன். நான் அப்பவே சொன்னேன் -யாருக்கோ அஷ்டமத்து
சமாச்சாரம் சரியில்லைன்னு , காதுல போட்டுண்டா தானே? -வஞ்சுளம்
ஏன் போட்டுக்கல்ல ? இதோ என்று கல்
பதித்த வைரக்கடுக்கனை ஒய்யாரமாக ஆட்டியாட்டி காட்டினார்.
ஓ, இப்ப கவி ,வைர [முத்து] கடுக்கன்
முத்துன்னு எண்ணம் போல இருக்கு. அதான் இருட்டுல மினுக்கி காட்டறேள். என்ன மினுக்கினாலும்
, காபி இன்னும் 2 1/2 மணி நேரம் ஆகும் .
சரி, என்ன தெரியும் னு பாட்டெழுதப்போனேள் ? என்ன பாட்டு எழுதினேள் .
ஒரு பாட்டு குடுத்தா , சாஹித்யம்
பரவால்ல , வார்த்தை அவ்வளவு தீர்க்கமா இல்ல அதை திருத்தி கொடுத்திருக்கேன் -இன்னும்
பணம் தரல்ல அப்புறம் வாங்கித்தரேன் னு "திருப்பதி" சொல்லிருக்கார்
என்ன பாட்டு ? வஞ்சுளம்
இரு என்று டேபிளில் இருந்து பேப்பரைக்
கொண்டுவந்து படித்தார்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
[தழுவட்டுமே/ நழுவட்டுமே னு ஒன்னும் நன்னா இல்ல]-பட்டு
வஞ்சுளம் –“என்னது நன்னால் லியா
? இது கண்ணதாசன் பாட்டுன்னா? அதையா திருத்தினேள்?
நம்பல் லாம் அதுக்கெல்லாம் போகப்படாது” .
ஏன் ?-பட்டு ,
“அதுக்கு வேண்டிய தமிழ் பாண்டித்யம்
நமக்கு இல்ல” -வஞ்சுளம் ,
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment