TM
SOUNDARARAJAN -34
டி எம் சௌந்தரராஜன் -34
அன்புள்ள மான் விழியே [குழந்தையும் தெய்வமும்]1966
மிகச்சிறப்பானதொரு டூயட் அன்புள்ள மான் விழியே [குழந்தையும் தெய்வமும்] பாடலும் காட்சியும் நடனமும் என்று பார்த்தாலும் புதுமை குன்றாத இளமை அதிலும் திரு பிலிப் அவர்களின் வெகு துல்லியமான கிட்டார் வாசிப்பும் நோயல் க்ராண்ட் அவர்களின் ட்ரம் ஒரு மாறுபட்ட வரிசையில் டக் ட டக் டக் ட டக் டக் தக்
என்று
ஒவ்வொரு
முறையும்
பல்லவியின்
கூட
பயணிக்க
ஒரு
மயக்கம்
தரும்.
இடையில்
ஒலிக்கும்
சோலோ
வயலின்
[சாம்
ஜோசப்]
வெகு
நேர்த்தி.
பாடலின்
இறுதி
வரிகள்
பிரத்யேக
அமைப்பில்
கேட்க ஆழ்ந்து அனுபவித்தது ரசித்திட இனிய அமைப்பில் பாடல் இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=f-fL8CVz-HU ANBULLA MAN VIZHIYE VALI 1966
இதே பாடலை சிலாகித்து சுபஸ்ரீ அவர்கள் அவரது QFR குழுவினர் இசைத்த பாடலையும் ரசிக்க. இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=D5OxZoUJF_E qfr anbulla maanvizhiye va;o msv
tms ps
பள்ளிஅறைக்குள் வந்த [தர்மம் எங்கே -1972] கண்ணதாசன் எம் எஸ் வி, டி எம் எஸ் பி சுசீலா
இதோஇ ஒரு வினோதமான பாடல் , டிபிக்கல் கண்ணதாசன் எம் எஸ் வி அரங்கேற்றிய விந்தை. பாடலின் அமைப்பு வெகு நளினம். மிகுந்த பாவமும் உற்சாகமும் கொண்டு மிதக்கும் பாடல் , இதில் கோரஸ் வேறு சேர்ந்துகொண்டு பாடலின் இயக்கமும் இசையின் தாக்கமும் கேட்கக்கேட்க தெவிட்டாத. ஆனால் பலருக்கும் இப்பாடல் தெரியாது. மேலும் சில சொற்களை மாறு பட்ட வகையில் பாடி பாடலின் அமைப்பு பலமுறை யோசிக்க வைக்கிறது. இன்னொன்று
இப்பாடலில் உங்கள் சொந்த வரிகளை நீங்களே பாடிப்பாருங்கள் சொற்கள் அழகாக ட்யூனில் உட்கார்ந்து கொண்டு ஆ, நாம் கூட ஒரு பாடலை
எழுதிவிட்டோமே என்று மகிழ்ச்சிகொள்ள
முயன்று
பாருங்கள்
. பாடலை
ரசிக்க
இணைப்பு
.
https://www.google.com/search?q=palliyaraikkul+vandha+pulli+mayile+video+song&oq=palliyaraikkul+vandha+pulli+mayile+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgkIBRAhGAoYoAEyBwgGECEYjwLSAQkyNjExOGowajSoAgCwAgE&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:e9822e45,vid:k6mIKqmFHqE,st:0
dharmam enge 1972 kd msv tms ps / chorus
உனது விழியில் எனது பார்வை [நா ன் என் பிறந்தேன்] சங்கர் கணேஷ் , டி எம் எஸ் , சுசீலா
புலமைப்பித்தனின் கம்பீர சொல்லாடல் சிறந்த உச்சரிப்பில் டி எம் எஸ் சுசீலா அனுபவித்துப்பா டியுள்ள ரம்யமான பாடல் . சங்கர்-கணேஷின் இசை அமைப்பில் [இருவரும் எம் எஸ் வி யின் சீடர்கள்] ஆங்காங்கே மெல்லிசை மன்னரின் நுணுக்கங்கள் பளிச்சிடக்காணலாம் . இந்தப்பாடல் ஊட்டி தாவர வியல் பூங்காவில் பதிவிடப்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் முழங்கியபாடல் ஒரு வித அச ரீரி போன்ற எதிரொலியைக் கொண்டு ஒலிப்பது பாடலை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. ஒரு முறை கேட்டால் நாளெல்லாம் நம்மை மனதளவில்
ரீங்கரிக்கும் பாடல் அமைப்பு . கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=VFdPCJFJ8J4
1972 pulamaippiththan
நன்றி
அன்பன் ராமன்
Beautiful analysis. Rk
ReplyDelete