DIRECTOR-- N C CHAKRAVARTHY
இயக்குனர் -என் சி சக்கரவர்த்தி
இயக்குனர் ஸ்ரீதரின் உதவியாளர்களில் நன்கு அறியப்பட்டவர் , நீண்ட திரை அனுபவம் கொண்டவர். நல்லபண்பாளர். ஸ்ரீதரின் குழுவினர் என்பது பாடல் காட்சி அமைப்பில் நன்கு விளங்கும். தனிப்பட்ட இயக்குனராகக்களம் இறங்கிய காலங்களில் , தமிழில் கருப்பு வெள்ளைப்படங்கள் முற்றாக மறைந்து விட்டன . எனவே அவரின் காமெராக்கோணங்கள் குறித்து எனக்கு தனிப்பட்ட பார்வை இல்லை. அதுபோன்ற திறன்களை அளவிட கருப்புவெள்ளைப்படங்கள் உதவுவது போல் வண்ணப்படங்கள் உதவுவது இல்லை. [இன்னும் சொல்லப்போனால் அதனாலேயே சிலர் ஒளிப்பதி வாளர் என்று உலவு கின்றனர்] போகட்டும்,
என் சி சக்கரவர்த்தி இயக்கியவை சில படங்களே, ஆனால் அவற்றிலேயே நல்ல பாடல்களை வழங்கியுள்ளார் . அவற்றில் சிலவற்றை இன்றைய பதிவாக வெளியிட்டுள்ளேன் .
பூ பூவா பறந்து போகும் [ திக்குத்தெரியாத காட்டில் 1972 ] வாலி, எம் எஸ் வி, குரல் எம் எஸ் ராஜேஸ்வரி
காட்டில் வழி தவறிய குழந்தை இயற்கையில் உலவும் விலங்குகளை பார்த்து அன்பாக பாடும் காட்சி. நீண்ட நாட்களுக்குப்பின் சினிமாப்பாடல் பாடியுள்ளார் எம் எஸ் ராஜேஸ்வரி ; குழந்தைக்குரலில் பாடுவது இவரது தனிச்சிறப்பு. குழந்தைப்பாடல்கள் என்றால் இவர் தான் என்றே பரவலாக அறியப்பட்டவர்.. அதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? குழந்தைக்குரல் மட்டும் அல்ல, குழந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்திப்பாடும் வல்லமை கொண்டவர். இந்தப்பாடல் நெடுகிலும் குரலில், உணர்வும் பின்னிப்பிணைந்து ஒலிக்க காணலாம். விலங்குகள் இடம் பெறுவதால் திரு சதன் அவர்களின் பங்களிப்பும் நிறைய இடம் பெற்றுள்ளது நன்கு கேட்டு ரசிக்க இணைப்பு இதோ
மாதமோ ஆவணி [உத்தரவின்றி உள்ளே வா 1972 ] கண்ணதாசன், எம் எஸ் வி, எஸ் பி பி , சுசீலா
மிகவும் சிறப்பான டூயட் வகைப்பாடல். சுசீலாவும் எஸ் பி பியும் ஆழ்ந்த உணர்வுகள் மிளிரப்பாடியுள்ளனர். டிபிகல் எம் எஸ் வி உபாயம் டா டா டாடா ட ண்டா பாடலில் ஒலிப்பது மேலும் பொலிட்டுகிறது. பார்ட் சிங்கிங் எனப்படும் பாதி பாதி பாடுதல் அவ்வப்போது தோன்றி கேட்கவே ரம்மியமாக உள்ளது. எம் எஸ் வி அவர்களின் ட்யூன் எப்போதும் போல் வெகு நேர்த்தியாக நெளிந்து நெளிந்துபயணிக்கிறது .காதலர்களின் நெருக்கத்தைக்கண்டு நண்பர்கள் புலம்புவது படத்தின் சுவையை மேம்படுத்தியுள்ளது. மிக கவனாகப்பார்த்தால் காட்சி அமைப்பும் படமாக்கப்பட்ட விதமும் நேர்த்தியானவை என்று உணரலாம் , பாடலுக்கு இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=j2e4OaRFRWY madhamo aavani kd msv spb ps
------------------------------------------------------------------------------------
கேட்டதெல்லாம் நான் தருவேன் [திக்குத்தெரியாத காட்டில் 1971] வாலி , எம் எஸ் வி, எஸ் பி பி, சுசீலா
மிக அருமையான டூயட் ஆரம்ப கால எஸ் பி பி, குரலில் நளினத்தை குழைத்துத்தந்துள்ளார் , ஈடு கொடுத்து சுசீலா . பாடல் என்றும் வசீகரம் நிறைந்த அமைப்பு கொண்டது. எப்போதும் போல் ஏற்ற இறக்கங்களை தெளிவாக க்கொண்ட அமைப்பு . கேட்க சுவைக்கும் வகைப்பாடல் , இணைப்பு இதோ .
-----------------------------------------------------------------------------------
காதல் காதல் என்று பேச [ உத்தரவின்றி உள்ளே வா] கண்ணதாசன், எம் எஸ் வி, குரல்கள் பி சுசீலா, எம் எல் ஸ்ரீகாந்த்
வெகு கவர்ச்சியான இசை அமைப்பில் வந்த பாடல் , பலரையும் கவர்ந்த பாடல். ஹம்மிங் இசைப்பவர் எஸ் பி பி போல் தோன்றினாலும், அது எம் எல் ஸ்ரீகாந்த் அவர்களின் குரல் [அவரே ஒரு இசை அமைப்பாளர் ] குரல் நேரத்திக்காக , அவரை பாடவைத்துள்ளார் மன்னர் . சொல்லும் சுவையும் இசையும் சுகமும் என கொட்டிக்கிடக்கும் டூயட் , காஞ்சனா ரவிச்சந்திரன் இடம் பெற்ற பாடல் . கேட்க இணைப்பு
இப்பாடலின் சிறப்புகளையும் அதீத நுணுக்கங்களையும் சுபஸ்ரீ அவர்களின் விளக்கத்தைக்கொண்டு புரிந்து கொள்ளலாம். சுவை குன்றாமல் பாடலை வழங்குகின்றனர் , கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=YjI3O6rryEk qfr 550
திரு என் சி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கும் திறனை இப்பாடல் கள் நன்கு உணர்த்தக்காணலாம்
நன்றி அன்பன் ராமன்
****************
எனக்கு இயகுனர் சக்கரவர்த்தியைப் பற்றி அதிகம் தெரியவில்லை ஆயினும் அவரது திரைப்படங்களையும் பாடல்களையும் ஓரளவு அறிவேன். எம். எல். ஸ்ரீ காந்த்
ReplyDeleteபற்றியும் அவ்வாறே