Tuesday, January 14, 2025

LET US PERCEIVE THE SONG-5

 LET US PERCEIVE THE SONG-5 

பாடலை உணர்வோம்  - 5

Manam kanivaana andha [idhu sathyam 1961 ] kd, vi, raa, tms, ps

மனம் கனிவான அந்த கன்னியை கண்டால் [இது சத்யம் -1963] கண்ணதாசன் , வி -ரா, டி எம் எஸ், பி சுசீலா

https://www.youtube.com/watch?v=12O-oKtfmgQ

இதுபோன்ற உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈர்க்கும் பாடல்கள் வெகு சிலவே. அதிலும் குறிப்பாக பாடும் குரல்கள், திரை கலைஞர்க்ளு வெகு இயல்பாக பொருந்தி லிப்பதில் இப்பாடலுக்கு நிச்சயம் சிறப்பிடம் உண்டு. .

இப்பாடல் கண்ணதாசனின் கற்பனையில் மிளிர்ந்த நளினம் . எனது புரிதலில் இது பல இலக்கண மரபுகளை தோற்றுவித்த ஒரு திரைப்பாடல் என்றே சொல்லத்தோன்றுகிறது. என்னது இலக்கண மரபா ? என்று வெகுண்டெழ வேண்டாம் ;நான் சொல்வது திரைப்பாடல் யாப்பு இலக்கணம் . இவ்விடத்தில் நான் பேசும் யாப்பு,  சொல், சொல்லின் சுவை, பொருள் உணர்த்தும் நுணுக்கம், இவற்றைக்கடந்து ஏதோ ஒரு ஆணும் பெண்ணும் பாடுவது என்ற சிறிய எல்லைக்குள் சிருங்காரம் பேசாமல் , ஒவ்வொரு வர்ணனைக்கும் விளக்கம் சொல்லி , விடை தேடும் பெண் என்பதான பாடல் அமைப்பு. பாடலில் உள்ளார்ந்த பொருத்தம் எனும் relevance புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டு பாடலைக்கேட்டால் , ஒரு சினிமாப்பாடலில் இவ்வளவு தகவல் பரிமாற்றமா ? என்று வியப்பு எழுவது வியப்பல்லவே? அப்படி என்னதான் சொல்லியுள்ளார் கவிஞர் . முதல் சொல்லிலேயே  ஆண் மன'ஆராதனை ' துவங்குகிறது. எப்படி ?

மனம் கனிவான அந்தக் கன்னியை கண்டால் கல்லும் கனியாகும்

முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும் , ஆகா முள்ளும் முள்ளும் மலராகும் என்ற பீடிகை தான் பல்லவியின் துவக்கம் தபலா பாடல் நெடுகிலும் காட்டும் நர்த்தனம் பெரும் ஆளுமையின் வெளிப்பாடு எனலாம் [கலைஞர் ஹனுமந்தப்பா ]

கவிஞர் கண்ணதாசன் பெண் மன ஆய்வில் தேர்ந்தவர் என பெண்களே ஏற்றுக்கொண்ட உண்மை. இதோ சான்று

பெண் அவன் வர்ணிப்பபில் அல்லது அதன் ஈர்ப்பில் திளைத்து ரசிப்பதாக அல்லது ஏற்பதாக இசை அமைப்பாளர்  விளையாடுகிறார் பெண் ஆஹா அஹ அஹா ஹா ஹா என்று ஒத்து ஒலிக்கிறாள் , வேறு ஏதாவது இசையை நுழைக்காமல் குரல் பாவமாக வே ஏன் செய்துள்ளனர் வி-ரா?  கவிஞர் வர்ணித்தால் போதுமா? பாவம் தோன்ற நாங்களும் வேலையைக்காட்டுவோம் என்பதாக அந்த ஹம்மிங் இடம் பெற்றுள்ளதாக பார்க்கிறேன். இசை அமைப்பாளர், கவிதையை  ரசிக்காமல் உணர்வை உரிய இடத்திற்கு கொண்டு செல்ல இயலாது. இசை அமைப்பாளர் ரசித்தால் தானே   பாடலே சோபிக்கும், ரசிக்கவொண்ணாத சொல்லாடலைக்கொண்டு எப்படி நளினமான பாடல் தோன்றும்? யோசியுங்கள்.

அதனால் தான் கவிதையில் பொருள் இருந்தால் இசையில் அது தொற்றிக்கொள்ள, நேர்த்தியான பாடல் பிறக்கும். [இப்போது வாலியின் வேறொரு பாடலில்சொல்லப்பட்ட

  'பாட்டில், பொருள் இருந்தால் ஆட்டம் தானே வரும்கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்'           என எழுந்த சொற்கோர்வை விளக்குவதகும் இதையே தான்.]

பாடலின் முன் பகுதி பெண்ணின் குணாதியசங்களை விளக்க பல குதூகல அடையாளங்களை முன் வைத்து விரைகிறது ; பாதி கண்ணை மூடி திறந்து , பார்க்கும் பார்வை காதல் விருந்து , ஜாதி கொ டியில் பூத்த அரும்பு , சாறு கொண்ட காதல் கரும்பு என்று சொல்லி , அன்னம்  என்ற நடையினை க்கண்டு மன்னர் தம்மை மறந்ததும் உண்டு என்று அவளின் இயக்கம் சொல்லப்படுகிறது ; இதில் கவனிக்க வேண்டிய து ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய முக்கியத்துவம் பாடப்பட்டுள்ளது ஆனால் இரண்டெழுத்துசொல்  'பாதி', மூன்றெழுத்துசொல்  'கண்ணை' விட சற்று தூக்கலாக ப்பாடி இவன் வீழ்ந்துவிட்டதை இசை அமைப்பாளர் அழகாக தொட்டுக்காட்டுகிறார். . அவளின் நிலைதனை

வாழைத்தோட்டம் போல [தள தளப்பாக] இருந்தாள், வண்டு போல பாடி [சுறுசுறுப்பாக] திரிந்தாள் , தென்னம் பாளை போல சிரித்தாள் , சின்னக்கண்ணில் என்னை அடைத்தாள் என தான் சிறைப்பட்டுவிட்டதை ஆண் மகிழ்ச்சியாக சொல்ல, ஆனால் கன்னம் என்ற கனிகளின் மீது இன்னும் நாணம் மோதுவதேனோ என்று பேசுகிறான். இருக்கட்டும்

நீ பேசுவது என்னைப்பற்றியா [  நம்மை பற்றியா?] என்னும் பொருள் பட  அவர் இவர்தானா , இவள் அவள் தானா / என்று மரபு மீறாமல் பெண் கேட்பதாக கண்ணதாசனின் சொல்லாடல் அமைந்துள்ளது. இது வரை ;அவன்' சொன்ன வற்றை பெண் விடையாக சொல்லி -நீ என்ன செல்கிறாய் என்பதாக பெண் பேசுகிறாள்

வானம்பாடி போல பறந்தாள் [ஆமாம் ஏன்?]  வாழ்வு தேடி தேடி .  அலைந்தாள் [எனவே] காதல் தந்த கள்வனைக்கண்டாள், கள்வன் கையில் வந்து விழுந்தாள் தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள் நெஞ்சம் யாவும் அவனி\டம் தந்தாள் என்று பெண் தனது  நிலையை விளக்கி விட்டாள் . இசை அமைப்பாளர் ஏராளமான நகாசு வேலை செய்துள்ளார் பாடலில். அதாவது ஒவ்வொரு வரியும் 2ம் முறையாக வரும் போது இறுதிச்சொல் சற்று நீட்டி ப்பாடுவது ஒரு வித கிறக்கத்தை விதைக்கும்; அதற்கேற்ப தபலா  இயைந்து ஒலிப்பது எம் எஸ் வியின் தனி முத்திரை. இப்படி எண்ணற்ற இடங்கள் இப்பாடலில், நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள் என்று பெண் தன் நிலை விளக்கி சம்மதம் தரலாமா? அதை தெளிவாய்  சொல்லலா மா? என நேருக்கு நேர் கேட்க , சம்மதத்தின் அறிகுறியாக இருவரும் சேர்ந்தே ஹாஹ்ஹ ஹ் ஹ் என பாடல் குரல்களும் வயலின்களும் குழைய மெல்ல அடங்கி  ஒரு நீர்வீழ்ச்சியின் சுகத்தை காட்டி மறைவதை என்னென்று சொல்ல?.. இம்மி பிசகாமல் தபலா குரலுடன் அடியொற்றி முன்னேறுவது மிகவும் சிறப்பு. அதே போல இடை இசையின் பங்களிப்பில் அடுத்த சரணம் முன்னேற பாடல் சுகமாக பயணிக்கிறது. கவிதைக்கு உயிர் கொடுத்த இசை ஒரு புறம் ; பாடல் துவங்கும் போது நடிகர் அசோகன் போன்றே டி எம் எஸ் ஒலிக்கிறார் அதே போல  இவர் அவர்தானா என சந்திரகாந்தா பாடுவது போல் சுசீலா. எப்போது கேட்டாலும் இந்த 62 வயது ப்பாடல் மார்க்கண்டேயனாய் உலவுகிறது. புகழ் பெற்ற முன்னணி நடிகர்பட்டாளம் இல்லா விடினும் , அனைத்துப்பாடல்களும் இமாலய வெற்றி சூடியவை . 1960 களில் குமுதம் வார பத்திரிகையில் வெளிவந்த தொடர்கதை "இது சத்தி யம் " ரா கி ரங்கராஜனின் கற்பனையில் உதித்து அதே பெயரை தாங்கி படமாக வந்தது.பாடல்களுக்கான மெனக்கிடலை சுட்டிக்காட்டவே முயன்றுள்ளேன் நன்றி   பாடலை பலமுறை கேட்டு கேட்டு எனது கூற்றில் உள்ள அம்சங்களை கவனியுங்கள் .

 https://www.youtube.com/watch?v=12O-oKtfmgQ

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. அப்பப்பா.. அருமையான ஒரு பாடலுக்கு மிக அருமையான உங்கள் வர்ணனை !!
    இசைக்குள் இத்தனை அர்த்தங்களா !! பிரமிப்புதான்!!!

    ReplyDelete
  2. பாடலின் சிறப்புக்களின் அருமையாக விளக்கம்.அப்பாடலை மேலும் ரசிக்க முடிகிறது.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...