G PAY JEEVAA-3
ஜீ -பே –ஜீவா-3
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
பொங்கல் நல் வாழ்த்துக்கள்
K .RAMAN
சென்ற பதிவில்...........
என்னப்பா செருப்புவிலையே கேக்குற -ரொம்ப அநியாயமா இருக்குது என்றார்.
சரி சார் நீங்க 75 ரூபாய்க்கு ஒரு செருப்பு வாங்கிகிட்டு ,
எனக்கு ஒரு ஜோடி வாங்கிகிட்டு வாங்க, செருப்பு வந்ததும் 75/- ரூபாய் கொடுத்துடறேன் என்று திரும்பிப்பார்க்காமலே சொன்னான் ஜீவா. படாடோபத்துக்கு பகீர் என்றது ;ஏன் என்றால்
10 நாள் முன்பு தான் 999/- ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தான். மீண்டும் பேரம் பேசினான்.
ஜீவா சொன்னான் ” யாராவது செருப்பு விலைக்கு ரிப்பேர் கூலி தருவாங்களா , அதுனால நீங்க புது செருப்பு வாங்கிக்குங்க -அதுதான் நல்லது என்று பாடாடோபத்தை எளிதாக மடக்கினான். இப்ப நான் ஆபீஸ் போகணும் கையில அவ்வளவு பணம் இல்லை என்றார் படா . சரி சார்
80/- ரூவா குடுங்க தெச்சுத்தர்றேன் என்றான் ஜீவா.
பணம் என்று இழுத்தது படா. என்னப்பா 75 /-தானே கேட்ட இப்ப என்ன 80/- ?
நீங்க கைல பணம் இருந்திருந்தா புது செருப்பே வாங்கியிருப்பேங்க , உங்களோட பேசி 2 கஸ்டமர் வேற கடைக்கு போய்ட்டாங்க அதுனால ஒரு 5/- ரூபாயாவது ஈடு கட்டணும் அதுனால தான் 80/- ஆயிடுச்சு என்றான் ஜீவா.
மள ம ள என்று வேகமாக ஆனால் நேர்த்தியாக சரி செய்து விட்டு தங்கையிடம் பாலிஷ் போட்டு கொடுக்க சொல்லிவிட்டு , சார் கையில ரூபாய் இல்லாட்டி G Pay பண்ணிடுங்க என்று அட்டையை காட்டிவிட்டு தங்கையை
80/- ரூபாய் போட்டதும் செருப்பைக்கொடு , போன்ல
80/- வரும்
பாத்துட்டு செருப்பைக்கொடு என்று வெளியே கிளம்பினான் அப்போது மணி காலை 08.00. என்று போனில் வந்தது. இந்தப்படா போனை தலை
கீழாக காட்டி
08 என்பது 80 போல் தெரிய பணம் போட்டு விட்டேன் என்று சொல்லி செருப்பை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டான். ஜீவா வந்ததும் போன்ல
80/-- காட்டுனாரு செருப்பை கொடுத்துட்டேன் என்றாள் ஆனால் அவன் பணம் போடாமல் ஏமாற்றிவிட்டது மறுநாள் தெரிந்தது ஜீவா வுக்கு.
சாமி ஜீ பே லகூட ஏமாத்துறாங்க என்று கோவிந்த ராவிடம் சொல்லி வருத்தப்பட்டான். கோவிந்தராவ் ஆறுதல் சொன்னார் 'அவனை பகவான் பாத்துப்பார் , நீ கவலைப்படாதே தங்கையை திட்டாதே' என்று தேற்றினார். ஆனால் உள்ளூர ஏமாற்றப்பட்டோம் என்ற துயரம் அவனை வாட்டியது. பிடாதி அம்மன் கோயிலுக்கு சென்று தாயீ நீதான் இவங்களை கேக்கணும் என்று உருகி வேண்டினான்.
ஆனால் ஜீவா இப்போது
[சுமார் 17, 18 மாதங்களில்] செருப்பு தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளான். கோவிந்தராவ் உதவியால் பேங்க் லோன் வாங்கி முக்கியமான மூலப்பொருள் வகைகள் சிறப்பு கட்டிங் மெஷின் , விதவிதமான டிசைன் புத்தகம் ,
நூல், chrome நிறம் எல்லாம் வாங்கிக்கொண்டு சிறப்பாக முன்னேறினான். தரமான காலணி தயாரிப்போர் பட்டியலில் மாநில அரசினரின் விருது பெற்றான்.
ஒரு கெமிக்கல் கம்பெனிக்கு ஆண்டுக்கு 300 ஜோடி சிறப்பு செருப்பு தயாரிக்க ஒப்பந்தம் பெற்றான். வடிவமைப்பிலும், நல்ல தரம் காப்பதிலும் ஜீவாவின் புகழ் பரவியது.
தொடரும்
No comments:
Post a Comment