Thursday, January 23, 2025

TM SOUNDARARAJAN-39

 TM SOUNDARARAJAN-39

டி எம் சௌந்தரராஜன்-39

ஒருவர் வாழும் ஆலயம் [நெஞ்சில் ஓர் ஆலயம்-1962 ] கண்ணதாசன் , வி, ரா, டி எம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி குழுவினர்

 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பாடலில் வைத்து படத்தினை முடிக்க யாருக்காவது தைரியம் வருமா ? வந்ததே ஸ்ரீதருக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில்; . ஆம் பாடலின் சோக வீரியம் அளித்த தாக்கம் தான் ஊக்கம் . துணிந்து காட்சியை பாடலில் வைத்து வெற்றிக்கொடி நாட்டினார். பாடல் அப்படி, உணர்ச்சி, பாவம் , காதல் விளைவித்த அவநம்பிக்கை , அனைத்தையும் பொய்யாக்கி, உயிரையே ஈந்து தன்னை மறந்த காதலியின் மாங்கல்யமும் , மங்கலமும் காத்து வீழ்ந்து மடிந்த டாக்டர்

இப்படத்தின் வெறெந்தப்பாடலுக்கும்    அழைக்கப்படாத டி எம் எஸ் , இப்பாடலுக்கு மட்டும் அழைக்கப்பட்டார்.ஏன்? கம்பீரமாய் சோகத்தை பிழிய வேண்டும் , பிழிந்தார்

உச்சஸ்தாயியில், ஒன்றையே நினைத்திருந்து , ஊருக்கே வாழ்ந்திருந்து , உயிர் கொடுத்து உயிர் காக்கும் உத்தமர்க்கோர் ஆலயம் என்று தொகையறாவில் ஓங்கி ஒலி த்து , ஆலயம் என்றடங்கி , சோகத்தின் பிடியில் ஒருவர் வாழும் ஆலயம் என்று முன்னெடுக்க கூடவே ஈஸ்வரியின் குரலும் சோகம் நிறைந்து ஒலி க்க , கோரஸ்   என்று உணர்ச்சியைப்பிழி   பின்னர் கருவிகள் தத்தம் பங்கிற்கு ஆழ்ந்த சோகத்தில் பயணிக்க , பெற்ற தாயே மகனின் சிலைக்கு மலர் தூவ, படத்தின் கதையை சரியாக உள்வாங்கிய எவரும் வாய் மூடி மௌனியாய் நிற்பது ஒன்றே வழி. ஆம் பல தருணங்களில் பொதுவாக படத்தின் கடைசிப்பாடல் என எழுந்து கலையும் ரசிகர்கள், இப்பாடலுக்கு    தேசியகீதத்திற்கு நிற்பது போல் நின்ற உள்ளார்ந்த சோகத்தை திரை அரங்கில் ஒவ்வொரு முறையும் பார்த்ததை மறக்க இயலவில்லை. இந்த சோகத்தில் பெரும் பங்கு கருவிகளின் மயான நிலையில் அடங்கி ஒலித்த நேர்த்தியும், குரல்கள் மட்டுமே முன்னிலைப்பட்ட தன்மையும் படத்திற்கு முத்தாய்ப்பாய் அமைந்தன. பாடலுக்கு இணைப்பு இதோ

ORUVAR VAZHUM AALAYAM  no a   KD  V R  TMS LRE Chorus https://www.google.com/search?q=oruvar+vaazhum+aalayam+video+song&oq=oruvar+vaazhum+aalayam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQI

குயிலாக நான் இருந்தென்ன [ செல்வா மகள்-1967] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ் , சுசீலா

வந்தவுடன்  பரப்பரப்பைக்கிளப்பிய பாடல். அற்புதமான டூயட், கடற்கரை ஒரக்காட்சி ஆயினும் தனிமையில் இருவர் ஓடி ஆடிப்பாடிய பாடல். பாடலின் சிறப்பு போங்கோவின் சிறப்பான பங்களிப்பு. பல்லவியில் தொடங்கி நெடுகிலும் போங்கோ வின் நேர்த்தியான ஒலி பாடலை வெகுவாக உயர்த்தியது. இசையும் கருவிகளும் ஒரே நர்த்தன வகை, கேட்கக்கேட்க சலிக்காது. ராக இயக்கங்களும் அவற்றின் நகாசுகளும் மிக ரம்யமானவை. கேட்டு மகிழ இணைப்பு இதோ 

Kuyilaga naan irundhenna

https://www.google.com/search?q=kuyilaaga+naan+irundhenna+video+song&oq=kuyilaaga+naan+irundhenna+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHCAQQIRigATIHCAUQIRiPAtIBCTQwMjM4ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:177b9a30,vid:rjBZxEcyZUA,st:0

எங்கிருந்தோ ஆசைகள் [சந்திரோதயம்-1966] வாலி, டி எம் எஸ், சுசீலா

68 ஆண்டுகளுக்குமுன்பே இசையில் முற்றிலும் புதிய அவதாரம் காட்டிய மார்க்கண்டேய வகை இசை அமைப்பு [விஸ்வநாதனின் இசை மெல்லிய பனி படர்ந்தாற்போல்]. குறிப்பாக பாடலின் வரிகளுக்கென்று தாளமே இல்லை. தாளம் இடை இசையின் அங்கமாக அதுவும் இசைக்கருவிகளின் போக்கில் உதித்த தாளக்கட்டு [-ஸ்டிக் ட்ரம் வகை] ; குரல்கள் தனித்தே பயணிக்க காணலாம். எண்ணற்ற நுணுக்கமான சங்கதிகள் , வெகு அமைதியான பயணம். முடிவில் மென் குரலில் ஹம்மிங்கில் பால் நிறைவுறுவது கிறக்கம் தருகிறது கேட்டு மகிழ இணைப்பு 

engirundho aasaogal [USE METRO LINK] NO THAALAM VALI

https://www.google.com/search?q=engirundho+aasaigal++video+song&newwindow=1&sca_esv=17212dbc4d09d461&sxsrf=ADLYWIKFgbR-ZWTenK8l4-nzsBZW4pjLtg%3A1737365371707&ei=exeOZ97kKvGa4- iD

இதே பாட லின் நுணுக்கங்களை சுபஸ்ரீ வவர்கள் விளக்க , குழுவினர் வழங்கிய பாலில் , நுணுக்கங்கள் குறித்து விளக்குகிறார் . கேட்டு நுணுக்கங்களை செவிமடுப்பீர் இணைப்பு இதோ

QFR 432  https://www.google.com/search?q=engirundho+aasaigal+qfr+video+song&newwindow=1&sca_esv=17212dbc4d09d461&sxsrf=ADLYWIL7zwZezsUViep3XIdG2_91_Zgqsw%3A1737365586319&ei=UhiOZ4WYE4-94-EPt-  

பரமசிவன் கழுத்தில் [சூரிய காந்தி - 1973] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ்

மாறுபட்ட வகை குடும்பவியல் பாடல். இதுபோன்ற பாடல் இதற்கு முன்னமோ அல்லது பின்னரோ  அமைய வில்லை . ஏனெனில் தனித்துவம் -தனி மனித வாழ்வியலுக்கு விளக்கிய பாடல் இதுவே

கவிஞரே தூண்டுகிறார்.--- ரிவினை , நாயகனுக்கு . எம் எஸ் வி இசைக்குழுவினர் பலரும் பாடலில் பங்கு கொண்டுள்ளனர் [ரானி டேவிட் , பாபு, சத்யம் போன்ற முக்கிய கலைஞர்கள் இந்த பாடலில் இசைக்க காணலாம் . உவமானங்கள் புதுமை வகையின. கூர்ந்து கேளுங்கள்

சரி, டி எம் எஸ் குரலா இது என்று கேட்கத்தோன்றுகிறதா ? சந்தேகமென்ன? அவரே தான் ஆனால் கண்ணதாசன் பாடுவது போன்றே ஒலிக்கிறது. கவிஞர் முக்கிய தருணங்களில் கண் சிமிட்டி கிண்டலாக பாடுவதை கவனியுங்கள்கவிஞர் சரியான கள்வன் என்றே சொல்லத்தூண்டும் முகபாவம் . முத்துராமன் உள்ளம் குமுற அமர்ந்துகொண்டு தவிப்பது வெகு இயல்பாக இருப்பதையும் னியுங்கள்,  இணைப்பு இதோ   

Paamasivan kazhuththil  https://www.google.com/search?q=p-aramasivan+kazhuththil+irundhu+video+song&oq=p-aramasivan+kazhuththil+irundhu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQI  

தொடரும்

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-39

  TM SOUNDARARAJAN-39 டி எம் சௌந்தரராஜன் -39 ஒருவர் வாழும் ஆலயம் [ நெஞ்சில் ஓர் ஆலயம்-1962 ] கண்ணதாசன் , வி , ரா , டி எம் எஸ்...